தேவனுடைய பிரசன்னம் அடையாளம் கண்டுகொள்ளப்படாமலிருத்தல் Topeka, Kansas, USA 64-0618 1இப்பொழுது நம்முடைய ஜனக்கூட்டங்கள் சிறியதாயிருக்கையில் நாம் சற்று துரிதமாக முடிக்க முயற்சி செய்வோமாக, அதினாலே நீங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தை அடையாளம் கண்டு கொள்ளும்படிக்கு ஏதுவாக, இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான் எங்களால் முடிந்த வரைக்கும் பிரயாசப்படுகிறோம். பாருங்கள்? அவர் இங்கே இருக்கிறாரென்றால், அப்படியானால், என்ன, எல்லா காரியமும் முற்றுப்பெற்றாகிவிட்டது. அவர் வார்த்தையை உண்டாக்கினார். அதை உறுதிப்படுத்த அவர் இங்கே இருக்கின்றார். அவர் அதை உறுதிப்படுத்துவார் என்பதை அவர் நிரூபிக்கின்றார். “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர், தவற முடியாத ஒருவராக, கடந்த இரவு அதைச் செய்ததை நாம் கண்டோம் ; ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் அதைச் செய்வதை நாம் காண்கிறோம். அவர் முன்னுரைத்த எந்த ஒரு காரியமும், எந்த நேரமாக இருந்தாலும் சரி, அது எப்பொழுது சம்பவிக்க வேண்டுமோ, ஆயிரக்கணக்கான முறை, எந்த ஒரு சிறு பிழையுமின்றி, சரியான நேரத்தில், சரியாக அப்படியே சம்பவித்தது. அது எப்படி? எத்தனைப் பேர் அதை அறிவீர்கள், ஊழியத்தை அறிவீர்கள், அது உண்மை என்று எத்தனைப் பேர் அறிவீர்கள்? [சபையார் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி.] உங்களுக்குப் புரிகின்றதா. ஒரு சமயமும் கூட, சூழ்நிலை என்னவாயிருந்தாலும் சரி, எந்த விதத்திலும் நடக்கவே முடியாத ஒரு காரியமாக இருந்தாலும் சரி, உரைக்கப்பட்ட விதமாகவே அப்படியே அது சம்பவித்தது. அவர் தேவனாவார்! நாம் அதை அடையாளம் கண்டு கொள்ள மாத்திரம் செய்து, அதைப்பற்றிக் கொள்வோமானால்! 2ஆகவே, இப்பொழுது இங்கிருப்பதற்கு எங்களுக்கு சற்று குறைவான சமயமே உள்ளது. இன்றிரவுக்குப் பிறகு இன்னும் மூன்று இரவுகள், அல்லது இரண்டு இரவுகள் மற்றும் ஒரு பகல் கூட்டம் உள்ளது என்று நான் நினைக்கின்றேன்.ஞாயிறு மத்தியம் கடைசி நிறைவு ஆராதனை என்று நான் நினைக்கின்றேன். நாங்கள் ஞாயிறு மத்தியப் பொழுதில் நாங்கள் முடிக்க முயல்கிறோம். ஏனென்றால் மேய்ப்பர்களும் மற்றும் எல்லாரும் ..... உங்கள் சபைக்கு நீங்கள் செல்லாமலிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. சபையில் மேலுமாக மக்களை சேர்க்கவும் மற்றும் தேவனில் நீங்கள் அதிக விசுவாசம் கொள்ளும்படிக்கு செய்து அதினாலே நீங்கள் உங்கள் சபையில் ஊழியம் செய்ய ஏதுவாக இருக்கும்படிக்கே நாங்கள் விரும்புகிறோம். பாருங்கள்? எந்த ஒரு காரணத்தினாலும் சபையின் கதவுகள் மூடப்பட நாங்கள் விரும்புவதே கிடையாது. நீங்கள் அங்கேயே இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம், ஆகவே நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய, உங்களை ஊக்கப்படுத்த மாத்திரமே முயற்சி செய்கின்றோம். ஒரு எழுப்புதல் என்றால் சபையில் இன்னுமாக மக்களை சேர்ப்பது என்பது மாத்திரம் கிடையாது; ஒரு எழுப்புதல் என்பது உங்களுக்குள்ளாக நீங்கள் ஏற்கெனவே கொண்டுள்ள ஒன்றிற்கு புத்துயிரளிப்பது மாத்திரமே; அது சரியே, அது தான் எழுப்புதலாகும். 3ஒரு சமயத்திலே கடற்கரையிலே காற்று வீசிக்கொண்டு குலுக்கிக்கொண்டு இருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இல்லை, கடற்கரையில் இல்லை, அது - மிச்சிகன் ஏரியில் நடந்த ஒன்றாகும். நான் அங்கே நின்று கொண்டு அலைகள் புறப்பட்டு வந்துக்கொண்டிருந்ததை கண்டேன். ஆகவே - ஆகவே, ஓ, அந்தக் கடலானது குதித்துக் கொண்டிருந்தது, அப்பொழுது - அப்பொழுது அங்கிருந்த படகுகள் குலுங்கி அசைந்தாடிக்கொண்டிருந்தன. அப்பொழுது நான், “அங்கு என்ன சம்பவித்துக் கொண்டிருக்கின்றது?” என்று நினைத்தேன். அது தான் காரியம். அது குதித்துக்கொண்டும் குலுங்கிக்கொண்டும் இருக்கின்றது, ஏன்? அங்கே அதன் மீது ஒரு பலத்த காற்று அடித்துக் கொண்டு கீழே வந்துக்கொண்டிருந்தது. நான், “சரி, அது என்னவென்று உனக்குத் தெரியுமா? அந்த ஏரி சற்று முன்னர் அசைவற்ற நிலையில் இருந்த போது இருந்த தண்ணீருக்கு மேல் சரியாக இப்பொழுது, இன்னும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கூடுதலாகவில்லை” என்று நினைத்தேன். அதில் கூடுதல் தண்ணீர் வரவில்லை; அது இருந்ததை அப்படியே கலக்கிற்று. சரி, இப்பொழுது, அது கலங்கின பிறகு நடந்ததென்ன? தண்ணீர் கலக்கப்படும் போது என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதில் இருக்கின்ற குப்பைகளை யெல்லாம் கலக்கி எடுத்து ஏரிக்கரையின் மீது தள்ளி விடுகின்றது. | அது தான் நமக்குத் தேவையாயிருக்கின்றது, அவிசுவாசமானது கழுவி வெளியே கரையின் மீது தள்ளப்படுவதே. தேவனுடைய வார்த்தை தாமே முதன்மையானதாக இருக்கட்டும். அது தான் நமக்குத் தேவையாயிருக்கின்றது. ஒரு எழுப்புதல், மற்றும் எல்லா அவிசுவாசமும், மூடபக்திகளும், தவறுகளும் மற்றும் காரியங்களும் களைந்து கழுவி வெளியே தள்ளப்படுதலே நமக்குத் தேவையாயிருக்கின்றது. வெளியே வாருங்கள், தேவன் இன்னும் தேவனாக இருப்பதைப் பாருங்கள். அதற்காகத் தான் எழுப்புதல்களைக் கொண்டிருக்கின்றோம். 4நாம் இந்த பொருளை எடுத்து இன்றிரவு வாசிக்கும்படிக்கு கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. பரிசுத்த மத்தேயு 12வது அதிகாரத்தில், 38 முதல் 42ஆம் வசனம் முடிய காணப்படுகின்ற அவருடைய வார்த்தையின் வாசித்தலை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. இன்றிரவிற்கான என்னுடைய பொருளானது; தேவனுடைய பிரசன்னம் அடையாளம் கண்டுகொள்ளப் படாமலிருத்தல் என்பதாகும். கடந்த இரவு இயேசு அதே விதமாகவே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும் அவர் அதே விதமாகவே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருந்தார் என்றும் நாம் கண்டோம். இப்பொழுது அவருடைய பிரசன்னமானது, அவர் அதே விதமாகவே இருக்கிறார் என்றால், அது அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. நாம் வாசிப்போமாக. அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடை யாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவார்கள். தென்தேசத்து ராஜஸ்திரீபூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடையஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள். 5அடையாளங்கண்டு கொள்ளப்படாமலிருக்கின்ற பிரசன்னம்! இந்த மக்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருந் திருப்பார்கள்? தேவன், அவர் வந்த போது எப்போதுமே அந்த விதமாகத் தான் இருந்தது. இயேசு இங்கே முதல் தடவையாக இருந்தபோது, அவர், “நீங்கள் - நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளையும் அதின் சுவர்களையும் வெள்ளையடித்து அதை சிங்காரித்து அவர்களை அதினுள்ளாக வைக்கின்றீர்களே” என்று கூறினார். பாருங்கள். ஏதாவதொன்று சம்பவிக்கின்றது, பிறகு அது கடந்து சென்று விடுகின்றது. “தேவன் அதை ஞானிகள் மற்றும் கல்விமான்களுடைய கண்களுக்கு மறைத்து கற்றுக் கொள்கின்ற பாலகருக்கு அதை வெளிப்படுத்து கின்றார்.” அவ்விதமாகச் செய்ததற்கு இயேசு பிதாவை ஸ்தோத்தரித்தார். பாருங்கள்? அது மக்களின் பக்கத்திலே செல்கிறது. ஆனாலும் அவர்கள் அதை அறியாமலிருக் கிறார்கள். உதாரணத்திற்கு, இன்றிரவு இங்கே இருக்கின்ற கத்தோலிக்க மக்களாகிய நீங்கள், சில வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் ஜோன் ஆஃப் ஆர்க் என்பவளைக் குறித்து உங்களுக்கு நினைவிலிருக்கிறதா, உண்மையாகவே அந்த சிறிய பெண்ணானவள். அவள் பிரான்ஸ் தேசத்தில் புரட்சியை வழி நடத்தினாள், ஆனால் அவள் உண்மையாகவே கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரி ஆவாள். ஆனால் உங்கள் சபை அவளுக்கு என்ன செய்தது? அவள் தரிசனங்கள் கண்டு ஆவிக்குரியவளாக இருந்தபடியால் அவளை ஒரு சூனியக்காரி என்று குற்றஞ்சாட்டி கட்டைகளில் வைத்து எரித்துப் போட்டது. கத்தோலிக்க சபையானது அவளை ஒரு சூனியக்காரி என்று அழைத்து அவளை எரித்துப்போட்டது. ஏனென்றால் அவள் ஆவிக்குரியவளாக இருந்து தரிசனங் களைப் பார்த்தாள் என்பதற்காகத் தான். பிறகு, சில வருடங்கள் கழித்து அந்தப்பெண் ஒரு பரிசுத்தவாட்டி என்று அவர்கள் கண்டுகொண்டனர். ஆனாலும் பிறகு, நீங்கள் ஒரு மிகப்பெரிய நோன்பைச் செய்து, அவளுக்கு மரண தண்டனை அளித்து அவளை எரித்த பாதிரியார்களின் சடலத்தை தோண்டி வெளியே எடுத்து அவைகளை நதிக்குள்ளாக போட்டீர்கள். ஆம், அந்த பாதிரியார்களின் சடலங்களை தோண்டி எடுத்ததற்காகவும், அவளை எரித்துப் போட்டதற்காகவும் நீங்கள் மிகப்பெரிய நோன்பைச் செய்துள்ளீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. 6இப்பொழுது, தீர்க்கதரிசிகளின் நாட்களில் என்ன சம்பவித்தது? அதே காரியத்தைத் தான் அவர்களும் செய்தனர். அத்தீர்க்கதரிசிகள் வந்து சென்ற வரைக்குமாக அவர்களை அவர்கள் அடையாளங்கண்டு கொள்ளவில்லை, ஊழியமானது முடிவுற்று, அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மத்தியிலிருந்து அவர்கள் வெளியே எடுக்கப்பட்டு, அவர்கள் கடந்து சென்ற பிறகு தான், அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அவர்கள் கண்டு கொண்டனர். இயேசுவானவர் பூமிக்கு வந்த போது, பிதாவாகிய தேவனானவர் அவருக்குள்ளாக இருந்தார். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். என் பிதா என்னில் வாசம் செய்கின்றார். கிரியைகளை செய்வது நானல்ல, பிதாவானவரே செய்கின்றார். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யா திருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை.” இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அவர் வந்த போது உலகத்தாரில் ஒருவர் - உலக மக்களில் பத்தாயிரத்தில் ஒருவர் என்ற நிலையில் தான் அவர் அந்நேரத்திலே பூமியில் இருந்தார் என்பதை அறிந்திருந்தனர், ஆனாலும் உலக இரட்சகராக அவர் இருந்தார். ஆகவே அவர்கள் அவர் யாராக இருந்தார் என்பதை அறிந்து கொள்ளும் முன்னர், அவர்கள் அவரை சிலுவை யிலறைந்து, அடக்கம் செய்து பிறகு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த வரைக்குமாக அவர் யார் என்று அவர்கள் அடையாளங்கண்டு கொள்ளவில்லை. 7அது வருகின்றது பிறகு சென்றுவிடுகின்றது, ஆனாலும் அது கடந்து செல்லும்வரைக்குமாக மக்கள் அதை அடையாளம் கண்டு கொள்வதில்லை. ஏனென்றால், அவர்கள் தாமே, அது அவர்களுடைய வேத கலாசாலை அறிவுடனே அது ஒரு போதும் பொருந்தாமல் இருப்பதால் தான், அது அந்நாளின் காலத்திற்கு ஒரு போதும் பொருந்துவதே கிடையாது. பாருங்கள், அது என்னவாயிருந்தாலும் சரி, அவர்கள் எப்பொழுதுமே இன்னொரு காலத்தின் கண்கூசும் ஒளியில் (glare) தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், அது எப்பொழுதும் அவ்விதமாகவே உள்ளது. அதன் காரணமாகத் தான் அவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் அவர்கள் நியாயப் பிரமாணத்தின் கண்கூசும் ஒளியில் (glare) வாழ்ந்து கொண்டிருந்தனர். இயேசு வந்த போது, அது நியாயப் பிரமாணத்திற்கு முரண்பாடான ஒன்றாக இல்லை, ஆனால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்குத் தான் வந்தார், ஆம், அவர்களால் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் போதங்களால் அமைத்து வைத்து அக்கால பாரம்பரியங்கள் என்று அழைக்கப்பட்ட அவைகளுடனே இயேசுவினுடைய செய்தியானது சரியாக அமையவில்லை. அவர்களுடைய பாரம்பரியங்களின்படியே அவர் வரவில்லை . அவர் அவர்களுடைய பாரம்பரியங்களின்படி இருக்கவில்லை. உண்மையாகவே அவர் அதை தலைக்கீழாக கவிழ்த்துப் போட்டு அதைக் கிழித்தெறிந்தார். மேலும் - மேலும் அவர் அப்பாரம்பரியங்களுக்கு முரணாகவே காரியங்களைச் செய்தார், அவர் காரியங்களைச் செய்த விதமாவது, அவர் சபைகளை உடைத்துக்கொண்டிருக்கின்றார் என்று அவர்கள் நினைக்கும்படியாக அமைந்திருந்தது. அவருடைய செய்தி யினாலே அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள முடியாதபடிக்கு இருந்தது. அவர் சரியாக தேவனுடைய தீர்க்கதரிசனத்தின் படியே தான் வந்தார் என்று நாமெல்லாரும் இன்றைக்கு அறிந்திருக்கின்றோம், ஆனால் அப்பொழுதோ அவர்கள் அதை அறியாதிருந்தனர். அது மறுபடியுமாக சம்பவிக்கக்கூடும், அதை நாம் அறியாமல் இருப்போம். இன்றிரவு அவர் சரியாக அப்படியாக தோன்றும் போது, நம்முடைய வரைபடங்களிலும் மற்றும் நம்முடைய வேதாகமப் பள்ளிகள் மற்றும் காரியங்களுக்கு மிக முரணானதாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கின்றேன். என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மிக சிறிய அளவிலானவர்கள் தான் அடையாளம் கண்டுகொள்வார்கள். அவர் வந்த போது எப்படி இருந்ததோ, அதோ போலத்தான் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 8இப்பொழுது, இயேசு தாமே வேதவாக்கியங்களினாலே மிகவுமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த வேளையிலே, அந்நாளின் பரிசேயர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் அவரை கண்டு கொள்ள முடியாமல் இருந்தது. ஏன் அவர்களால் முடியவில்லை, ஏன் அவர்களால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை? ஏனென்றால், அதை வேறு விதத்தில் கருத்துருவம் கொண்டு விளக்கப் படமெல்லாம் வைத்திருந்தனர். அந்த காரியத்தில் தான் இயேசு அவர்களிடமாக, “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்று கூறினார். பாருங்கள்? இப்பொழுது, வேதவாக்கியங் களின்படியே முற்றிலும் சரியாக அவர் வந்திருந்தார். ஆனால் அவர்களுடைய கருத்துருவம் என்னவென்றால், இயேசு வானவர் வரும் போது, அந்த மேசியா தாமே மோசே செய்ததைப் போலவே அவரும் செய்வார் என்றும் அல்லது நோவா செய்ததைப் போலவே செய்வார் என்றும், அவர்களுக்கு ஒரு பேழையையோ அல்லது வேறெதாவதொன்றையோ செய்வார் என்று அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அவர்கள் ஒருபோதும் நினைத்துப்பார்த்திராத ஒரு விதத்திலே அவர் வந்ததால் தான் அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போனதின் காரணமாகும்; மற்றும் அவர்கள் வேதவாக்கியங்களை தங்கள் பாரம்பரியங்களுடன் வைத்திருந் ததால், அது அவர்களுக்கு போதிக்கவில்லை ; ஆகவே என்ன சம்பவித்துக் கொண்டிருக்கின்றது என்று அறியக்கூடாத அளவிற்கு மக்கள் மிகவுமாக குழப்பமடைந்திருந்தனர். அது இன்றைக்கு நடக்குமானால் அதைக் குறித்து வியப்படைய ஒன்றுமே இல்லை. நம்முடைய பாரம்பரியங்கள் நமக்கு போதித்ததற்கு மாறாக அது வித்தியாசமாக இருக்கும் என்பதில் வியப்பொன்றுமில்லை. ஆகவே அது வரும், அப்பொழுது ஒரு காரியமானது நடந்து கடந்து செல்லும், கடந்து சென்று கொண்டிருக்கும். ஆகவே அது ஏற்கனவே கடந்து சென்று முடிவுற்றிருக்கும் வரைக்குமாக நாம் அதை அறியாமல் இருப்போம். அந்த விதமாகத் தான் அது வந்து நடந்தேறப்போகின்றது. 9நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஏசாயாவின் புத்தகத்திலிருந்து தொடர்ந்து முன்னுரைக்கப்பட்டு வந்த யோவான் ஸ்நானகன் காட்சியில் வந்த போது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஏசாயா தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தான், அது கிறிஸ்துவின் வருகைக்கு சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன்னர் என்று நான் நினைக்கின்றேன். யோவான் எவ்விதமாக வருவான் என்று ஏசாயா கூறியிருந்தபிரகாரமாகவே சரியாக அதே விதத்தில் அவன் வந்தான், அவன் எந்த விதத்தில் வருவான் என்று மல்கியா கூறியிருந்தானோ சரியாக அதே விதத்திலே வந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா, ஆனாலும் அதை அப்போஸ்தலர்கள் கூட அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாளிலே, மத்தேயு 11ல், யோவான் சிறையில் இருந்தான்; அப்போது அப்போஸ்தலர்களும், மற்றும் யோவானுடைய சீஷர்களில் சிலர் இயேசுவானவர்தான் அந்த அவரா, அல்லது - அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா என்று கேட்கும்படிக்கு அவரிடமாகச் சென்றனர். இப்பொழுது கவனியுங்கள், யோவான் எப்படி ஒழுங்காக நடக்கவேண்டுமென்றும், சிறைச்சாலையில் எப்படியாக தன்னை நல்லவிதத்தில் நடத்திக் கொள்ளவேண்டும் என்றும் அல்லது அவன் தன் குணாதியசத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற புத்தகத்தை அவர்களிடமாக இயேசு அளிக்கவில்லை. அவர், “இங்கே தங்கி என்ன சம்பவிக்கின்றன என்று பாருங்கள், பிறகு நீங்கள் யோவானிடமாகச் சென்று நீங்கள் பார்த்த நடந்த சம்பவங்களை அவனிடமாகக் கூறுங்கள்” என்று கூறினார். அது தான் அத்தாட்சியாகும் ..... அவர் தான் அந்த வார்த்தையாக இருந்தார். 10ஆகவே இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், வார்த்தை எப்போதுமே ஒரு தீர்க்கதரிசியிடம் தான் வரும். நாமெல்லாரும் அதை அறிந்திருக்கின்றோம். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு காண்பிக்காமல் ஒன்றையுமே செய்யமாட்டார். அதன் காரணமாகத் தான் இயேசு கிறிஸ்துவினுடைய வெளிப்படுத்தல் புஸ்தகமானது சரியாக இங்கே நம் முன்னிலையில் அந்த புஸ்தகமானது கிறிஸ்துவின் முழுமையாக இருக்கின்றது. இப்பொழுது அவர் தாமே ஒருவரை, அந்த புஸ்தகத்தை உறுதி செய்ய ஒருவரை அனுப்பி, அதை வெளிப்படுத்தி, முத்திரைகளைத் திறக்கவும் மற்றும் இன்னும் பிறவற்றை செய்யவும் அனுப்ப வேண்டியதாயுள்ளது. ஆனால் கிறிஸ்துவைக் குறித்த வெளிப்பாடு இன்னும் பிற இருக்குமானால், அது சரியாக இங்கே ஏற்கெனவே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுவிட்டது. வெளிப்பாடு, இதின் முழுமை அவரே. இப்பொழுது கவனியுங்கள், அது ஒருபோதும் தவறாது, ஆனால் வார்த்தையானது தீர்க்கதரிசியிடம் தான் வரும். 11அந்த தீர்க்கதரிசியான யோவான் தண்ணீரில் நின்று கொண்டு, மேசியாதாமே சரியாக அங்கே அவர்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கின்றார் என்று முன்னுரைப்பதைப் பாருங்கள். அவன், “இப்பொழுது உங்கள் மத்தியில் ஒருவர் நின்று கொண்டிருக்கின்றார், அதை நீங்கள் அறியாதிருக் கிறீர்கள்; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” என்று கூறினான். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவர் சரியாக அவர்கள் மத்தியிலே நின்று கொண்டிருந்தார், வேதாகமம் கூட அவ்விதம் கூறுகின்றது, ஆனாலும் அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் இயேசு நடந்து வந்த போது, யோவான் அவரை அடையாளம் கண்டு கொண்டான், அப்போது அவன், “இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டி” என்று கூறினான். இப்பொழுது கவனியுங்கள். அவர் ஒருவராலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதற்கு முன்னர், அவர் தீர்க்கதரிசியிடம் வந்தார். அவர் வார்த்தை . யோவான் ஒரு தீர்க்க தரிசி. 12என்னுடைய பழைய பாப்டிஸ்டு போதகர் என்னிடமாக, “ என்ன நடந்த தென்று உனக்குத் தெரியுமா? இயேசு யோவானுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்” என்று கூறினார். அதற்கு நான், “அப்படியல்ல என்று நான் நினைக் கின்றேன்” என்று கூறினேன். அவர், “நிச்சயமாக, யோவான் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ளவில்லை; அவன் வந்து பிரசங்கித்தான், ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான், அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்க யாருமே பாத்திரராயில்லை. இயேசு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்” என்று கூறினார். அதற்கு நான், “எனக்குத் தெரியாது” என்றேன். பிறகு ஒரு நாள் நான் வேதாகமத்தை ஆராய்ந்து கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் இந்த விதமாக அதை வெளிப்படுத்தினார், பாருங்கள். கவனியுங்கள், அவர் தண்ணீருக்குள்ளாக இறங்கி நடந்து சென்றபோது ; அவன், “நீர் என்னிடத்தில் வரலாமா? நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்கிறதே” என்று கூறினான். அதற்கு இயேசு, “இப்பொழுது இடங்கொடு,'' என்றார். இதை கவனியுங்கள், மேலும் அவர், ”இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது (நமக்கு இன்றியமையாததாகும்)“ என்றார். யோவான் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தபடியினால் வார்த்தையை அறிந்திருந்தான். அவர் தான் பலியாக இருந்தார், அவர் பலியாக செலுத்தப்படுவதற்கு முன்னர் கழுவப்பட வேண்டியிருந்தது ; அப்பொழுது அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார், யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான், ஏனென்றால், ”இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. தண்ணீரில் தீர்க்கதரிசியிடமாக வார்த்தையானது வந்தது. 13ஆகவே அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் தாமே..... அப்பொழுது பரிசுத்த ஆவி கீழே இறங்கி வந்தது, எல்லோராலும் அதைக் காண முடியவில்லை. யோவானோ அதைக்கண்டான். கர்த்தருடைய தூதனானவர் இன்றிரவு சரியாக இங்கே இருக்கக்கூடும், ஒருக்கால் ஒரு நபர் மாத்திரம் அதைக் காணக்கூடும், மற்ற எல்லாராலும் அதைக் காண முடியாது. அந்த அந்த வான சாஸ்திரிகள் பின்பற்றின, ஒவ்வொரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் மீதும் நேராக வந்து நின்ற அந்த ஒளி, நட்சத்திரம்; எந்த ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கும் அதைக் குறித்து தெரியவில்லை, அதை வேறு யாருமே பார்க்கவில்லை, ஆனால் அந்த வான சாஸ்திரிகள் மாத்திரமே கண்டனர், ஏனென்றால் அது அவர்கள் காண்பதற்கு மாத்திரம் தான் இருந்தது. அவர்கள் அதைக் கண்டனர். அது அவர்களுக்கு உண்மையானதாக இருந்தது. அந்த ஒளி, அக்கினி ஸ்தம்பம், தமஸ்குவுக்கு செல்லும் வழியில் பவுலை அடித்த போது, அவன் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டான். இப்பொழுது, அந்த யூதன் எந்த மற்றொரு ஆவியையும் “ஆண்டவரே” என்று அவன் அழைத்திருக்கமாட்டான், மேலும் அந்த அதே அக்கினி ஸ்தம்பம் தான் தன்னுடைய ஜனங்களை வெளியே வழிநடத்திக்கொண்டு வந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். அவர், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னை துன்பப் படுத்துகிறாய்? நான் இயேசு” என்று கூறினார். 14இயேசு, “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், நான் தேவனிடத்திற்கு போகிறேன்” என்று கூறினார். வனாந் திரத்திலே மோசேயை வழிநடத்தின, எரிந்து கொண்டிருந்த செடியிலே இருந்த அக்கினி அவர் தான், அவர் மறுபடியுமாக அதனிடத்திற்குத் திரும்ப வந்தார். ஆகவே, இப்பொழுது இங்கே அவன் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் பிரயாணிக்கின்றான். அவனோடிருந்த எல்லா மனிதரும் அந்த அக்கினி ஸ்தம்பத்தைக் காணவில்லை, அந்த அக்கினி ஸ்தம்பமானது மிகவும் - மிகவும் தத்ரூபமான ஒன்றாக இருந்தபடியால் அது பவுலின் கண்களை குருடாக்கிப்போட்டு, அவனை தமஸ்குவிலே நேர்த்தெரு என்கிற தெருவிற்கு அவர்கள் அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. அவன் பார்வையிழந்து குருடனானான். அங்கே இருந்த தீர்க்கதரிசியான அனனியா, அதை ஒரு தரிசனத்திலே கண்டு, அங்கே சென்று அவன் மீது தன் கைகளை வைத்தான், அப்பொழுது அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான், அப்பொழுது அவனுடைய கண்களிலிருந்து செதில்கள் வெளியே விழுந்தது, அவனால் மறுபடியுமாக காண முடிந்தது. அந்த அக்கினி ஸ்தம்பமானது மிகவும் உண்மையான தாக அவனுக்கு இருந்தபடியால் அது அவனுடைய கண்களை குருடாக்கிப்போட்டது, ஆனாலும் அங்கிருந்த ஏனைய மற்றவர்கள் அது அங்கே இருந்ததை அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை, அதைக் காணவும் முடியவில்லை. ஆகவே-ஆகவே இன்றிரவும் அந்த விதமாகத்தான் இருக்கின்றது! மற்றவர்கள் அதைக் குறித்து ஒன்றும் அறியாமலிருக்கையில், அங்கே உட்கார்ந்திருக்கின்ற யாராவது ஒருவரால் சரியாக தேவனைக் காட்சியில் கொண்டு வர முடியும்! தேவனை அடையாளம் கண்டு கொள்ளுதல். 15ஆகவே இயேசுவும், இங்கே அவர் பூமியில் இருந்து, அவர் செய்வார் என்று வேதாகமம் கூறியிருந்த அடையாளத்தை முழுவதுமாக செய்தார், ஆனாலும் அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் அது அவர்களுடைய பாரம்பரியத்தின்படியே அமைந்திருக்க வில்லை. ஏனென்றால் அந்த காலத்தில் அவர் வந்து மோசே செய்ததை செய்ய வேண்டியதாக இல்லை. அவர் கன்னிப்பிறப்பின் மூலம் பிறந்து வரவேண்டியவராக இருந்தார். ஆகவே அவர் உபாகமம் 18:15ன் படியே அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். அவர் சரியாக அந்த கிரியைகளையும் அடையாளங்களையும் செய்தார். யூதர் எப்பொழுது மே அடையாளங்களைக் காண விரும்புகிறவர்கள் ஆவர். ஒரு போதும் அறிவுப்பூர்வமான சொற்பொழிவுகள் மேல் சார்ந்திருக்கக்கூடாது எனவும் அவர்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது; அந்த யூதர்கள் இன்னும் அதிகமாக அறிந்திருந்தனர், கிரேக்கர்கள் அதை போதித்தனர். அறிவுப்பூர்வமான சொற்பொழிவுகள் அல்ல, ஆனால் அடையாளங்கள் பேரில், ''எங்களுக்கு ஒரு அடையாளத்தை காண்பியும்“ என்றனர். அந்த மக்கள், ஒருவர், ”ரபீ அல்லது போதகரே, எங்களுக்கு ஒரு அடையாளத்தை காண்பிக்க வேண்டும்“ என்று கூறினர். அவர்கள் அதை அறிய விரும்பினர். ஆனால் அவர் ஏற்கனவே அவர்களுக்கு அந்த அடையாளத்தை காண்பித்திருந்தார், ஆனாலும் அவர்கள் வேறே விதமான ஒரு அடையாளத்தைக் காணவிரும்பினர், ஆனால் அவராலே அந்த காலத்திற்குரிய அடையாளத்தை மாத்திரமே காண்பிக்க முடியும். அதே விதமாகத் தான் இன்றைக்கும் கூட, அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளபடியே, இப்பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலானது, இந்த காலத்தில் அவருடைய தோன்றுதலின் அடையாளமாகும். 16அவர்கள் ஒரு அடையாளத்தை காண விரும்பினர், அப்பொழுது அவர் அவர்களுக்கு அந்த வேதபூர்வமான அடையாளத்தை அளித்தார், ஆனால் அவர்களோ வேறொரு அடையாளம் வேண்டுமென்றனர். இந்த காரியத்தில் தான் இன்றைக்கு அதிக அளவில் மக்கள் குழப்பமடையப்போகின்றனர். உங்களுக்குத் தெரியும், எடுத்துக்கொள்ளப்படுதல் சம்பவிக்கையில், அதற்குப் பிறகான ஒரு சோகத்தைப் பற்றி சற்று சிந்தித்துப்பாருங்கள்! இயேசுவைக் குறித்த காரியத்துக்கு நான் திரும்பிச் செல்லட்டும், ஆனால்..... அவர் மேசியா தானா அல்லது இல்லையா என்று பார்க்கும்படிக்கு யோவான் தன்னுடைய சீஷர்களை இயேசுவினிடத்திற்கு அனுப்பினான். அந்த மணி நேரத்தில், அவர் அநேகக் காரியங்களைச் செய்திருந்தார். அவன், அந்த சீஷர்கள் தாங்கள் கண்டதை யோவானிடம் கூறுவதற்கு திரும்பிச் சென்ற போது, அங்கே உட்கார்ந்திருந்தவர்களிடத்தில் இயேசு, “எதைப் பார்க்க நீங்கள் வனாந்திரத்திற்கு போனீர்கள்? யோவான் என்ன பிரசங்கிக்கின்றான் என்பதைக் காணச் சென்றீர்களா? வெள்ளை வஸ்திரம் தரித்திருக்கின்ற மனுஷனையோ அல்லது - அல்லது மெல்லிய வஸ்திரம் தரித்திருக்கிற மனுஷனையோ? அவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். அவர்கள் மரித்தோரை அடக்கம் செய்து, குழந்தைகளை முத்தமிட்டு, வாலிப பருவத்தினருக்கு விவாகம் செய்வது, இன்னும் பிறவற்றைச் செய்வர். அவர்களுக்கோ இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கையாளத் தெரியாது” என்று கூறினார். அவர், “அப்படியானால் நீங்கள் எதைப் பார்க்க அங்கே போனீர்கள், காற்றினால் அசையும் நாணலையோ, கர்த்தருடைய அழைப்பிற்கு இணங்கி செல்வதற்கு பதிலாக, ஏதாவதொரு குழு இன்னும் சிறிது அதிக பணம் அளித்து அதினாலே இந்த காரியத்திற்கு செல்வானா என்று பார்க்கும் படியாகவா? யோவான் அப்படிப்பட்டவன் அல்ல! யாராவது ஒருவர் சற்று அவனைத் திருப்பி அவனிடமாக, ”நீ இதை மறுதலித்து அதை ஏற்றுக் கொள்வாயானால் நாங்கள் இன்னும் அதிக பணம் உனக்குத் தருவோம்' என்று கூறி பார்க்கும் படிக்காகவா ? யோவான் அப்படிப்பட்டவன் அல்ல!“ என்றார். மேலும் அவர், 'அல்லவென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், 'இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் உமது வழியை ஆயத்தம் பண்ணுவான்' என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டவன் இவன் தான்” என்று கூறினார். ஆகவே அது மல்கியா 3ன் படியாக அவன் அதைச் செய்தான். 17ஒரு நாளிலே சீஷர்கள் அவரை நோக்கி, “அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லு கிறார்களே?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “அவன் ஏற்கெனவே வந்தாயிற்று. அதை நீங்கள் அறியாமலிருக் கிறீர்கள்” என்று கூறினார், அப்போது அது யோவான் ஸ்நானகன் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். அந்த தெரிந்துக்கொள்ளப்பட்ட அப்போஸ்தலர்களால் அவன் யாரென்பைைத இன்னுமாக காண முடியவில்லை. அது எலியாவாகும். இப்பொழுது கவனியுங்கள். கர்த்தருடைய வருகை யானது இரகசிய வருகையாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அவர் “படுக்கையில் படுத்திருக்கிற இரண்டு பேர் இருப்பார்கள், ஒருவனை நான் எடுத்துக்கொள்வேன் மற்றவனை கைவிடுவேன்” என்றார். அது இரவு நேரமாக இருக்கும். 'வயலில் இரண்டு பேர் இருப்பார்கள், ஒருவனை நான் எடுத்துக்கொள்வேன், மற்றவனை கைவிடுவேன்.“ யாராலும் விவரமாக சொல்லப்பட முடியாத அளவிற்கு பூமியிலிருந்து ஒவ்வொரு நாளும் மறைந்து போகின்ற அநேகம் பேர் இருக்கின்றனர் என்று உங்களுக்குத் தெரியும். இந்த நாட்களில் என்றாவது ஒருநாளில் மக்கள், “அப்படியா, உபத்திரவமானது இப்பொழுது எங்களின் மீது வந்திருக்கின்றது என்றா கூறுகின்றீர்கள்? உபத்திரவத்திற்கு முன்னர் சபை எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லும் என்று நான் நினைத்தேனே” என்பார்கள். எடுத்துக்கொள்ளப்படுதல் நடக்கும் என்றும் அவர்கள் உணரவும் மற்றும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். அதைக்குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது; அது சபையின் இரகசிய மறைந்து போதல் ஆகும். 18ஆகவே, சிந்தித்துப் பாருங்கள், மக்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்து கொண்டும், தாங்கள் இரட்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று விசுவாசிப்பதாகக் கூறிக் கொண்டும், சபையில் அங்கத்தினர்களின் எண்ணிக்கையின் தொகையை கூட்டிக்கொண்டும், சபைகளைக் கட்டிக் கொண்டும், நோவாவின் நாட்களில் அவர்கள் செய்தது போலவே இவர்களும் அதே போன்று தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்; ஆனால் அது முடிந்து விட்டது என்று அறியாதிருப்பார்கள் ; எடுத்துக்கொள்ளப்படுதலானது நடந்து முடிந்துவிட்டிருக்கும், “அது ஏற்கனவே சம்பவித்து விட்டது, அது உங்களுக்கு தெரியாதிருந்தது. பூமியிலிருந்து நூற்றுக் கணக்கான மக்கள் மறைந்து கொண்டிருப்பார்கள், அவர்கள் எங்கு சென்றனர் என்று மக்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது; யாரோ ஒருவர் ஓரிடத்திற்கு சென்று கொண்டிருப்பார், அதற்கு பிறகு அவரிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராது. ஆம் அது எடுத்துக்கொள்ளப்படுதலாக இருக்கும். 19நண்பர்களே, நான் உங்களுக்குக் கூறுகிறேன், நாம் சபையின் அங்கத்தினர்களாக இருக்கின்றோம் அல்லது அதைப் போன்ற ஒன்றாக இருக்கின்றோம் என்பதால் மாத்திரமே, அது நமக்குக் காரியத்தை நடைபெறச்செய்யும் முக்கியமான ஒன்றாக கருதப்படலாகாது. நீங்கள் உடனடியாக அந்த சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக் கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தை முழுவதையும் நீங்கள் எடுத்து அதை அப்படியே பிடித்துக் கொண்டு, சுற்றுமுற்றும் உள்ள இந்த ஹாலிவுட்டின் காரியத்தை அப்படியே செய்யாமலிருத்தல் உங்களுக்கு நல்லதே. அது நேராக சபைக்குள்ளாக வந்து விட்டது. அது வெட்கக்கேடான ஒன்றாகும். ஆனால் ஹாலிவுட் பிரகாசமாக பளபளக்கின்றது, அது ஒரு பிரகாசமான வெளிச்சத்தை உண்டாக்க மாத்திரம் செய்கின்றது, ஆகவே தான் இன்றைய சபையானது ஹாலிவுட்டுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஹாலிவுட்டில் கிறிஸ்து இல்லை. கிறிஸ்து தனிப்பட்ட நபரில் இருக்கின்றார். ஹாலிவுட் பளபளவென்று அல்லது .... ஹாலிவுட் கண்கூசும் ஒளியாக இருக்கின்றது. ஆனால் சுவிசேஷமோ தாழ்மையில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றது. அந்த அழகுநயமிக்க இடங்களிலும் மற்றும் நாம் காண்கின்ற இந்த பகட்டுக் காரியங்களிலும் தேவன் இல்லை. அவர் தாழ்மையில் வருகின்றார், தாழ்மையிலும், தயவின் உருவிலும் வருகின்றார், அவர் சரியாகக் கடந்து சென்று கொண்டிருக்கின்றார். நீங்கள் வார்த்தையோடு பழக்கப்படுத்தப்பட்டிருப்பீர் களானால், அதை நீங்கள் காண்பீர்கள். கண்ணுடையவன் எவனோ, கேட்பதற்கானதைக் கொண்டிருப்பவன் எவனோ, “ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்,” இப்பொழுது இன்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளதை இப்பொழுது காணக்கடவன். 20அதைக் காணும்படிக்கு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளின் விசுவாசிகளுக்கு அவர் தம்மைத்தாமே சரியாக அடையாளப்படுத்திக் கொண்டார். பேதுருவையும் அந்திரேயாவையும் பாருங்கள். நாத்தான்வேலைப் பாருங்கள். அவனுடைய மனதில் எந்த ஒரு கேள்வியும் எழவில்லை , கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயைப் பாருங்கள், அதைக் குறித்த எந்த ஒரு கேள்வியும் அவளிடத்தில் இல்லை. ஆகவே, இன்றிரவு நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த பொருளின் சம்பவமானது சம்பவித்த சில நாட்களுக்கு முன்னர், இந்த பரிசேயர் அவர் அதை செய்ததைக் கண்டனர், அப்பொழுது அவர்கள் அவரை “பிசாசாகிய பெயல்செபூல்” என்று அழைத்தனர். கிரியைகளானது செய்யப்பட்டாயிற்று. அந்த பரிசேயர்கள் தங்கள் சபையாருக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே அவர்களால் செய்ய முடிந்த ஒரே ஒரு காரியம் என்னவென்றால் அதை “ஒரு பிசாசின் ஆவி” என்று அழைப்பது தான். பெயெல்செபூல் ஒரு பிசாசாக இருந்தான். குறிசொல்லுதல் அல்லது அது போன்ற ஒன்றாக அவன் இருந்தான். குறி சொல்லுதல் பிசாசினுடையது என்று எந்த ஒரு நபருக்கும் தெரியும். ஆகவே அவர்கள் காரியத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர். இருதயத்தின் நினைவுகளை அறிந்திருக்கின்ற அந்த வார்த்தை யாக அவர் இருந்து, இந்த நாளிலே நமக்காக எழுப்பப்படப் போகின்ற அந்த தீர்க்கதரிசியானவர், மீட்பின் இனத்தான் - தீர்க்கதரிசி அவர் தான் என்று நிரூபித்துக் கொண்டிருந்தார்; அவர் அவ்வாறு செய்தபோது அந்த நாளில் இருந்த சபையானது அவர் “பெயெல்செபூல்” என்று அவரை அறிவித்தது. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தனர் என்று உங்களால் காணமுடிகின்றதா? ''நீங்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறீர்கள்“ என்று அவர் கூறினார். அவர்களும் உள்ளே வரமாட்டார்கள். மற்றவர்கள் உள்ளே வருவதற்கும் அவர்கள் விடமாட்டார்கள். 21இன்று நாம் செய்ய விரும்புவது என்னவென்றால் சத்தியத்தை கண்டறிந்து கொள்வதேயாகும். சத்தியம் என்னவென்று நாம் கட்டாயமாக அறிந்து கொள்ளத்தான் வேண்டும். அவர் மாறாதவராயிருக்கின்றார் அல்லவா? தாம் நிறைவேற்றப்போகின்றார் என்று வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றும்படிக்கு அவர் இங்கே இருக்கின்றாரல்லவா? வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், இன்றைக்கு அவர் என்ன செய்யவேண்டியவராக இருக்கின்றார் என்று கண்டறிந்து கொள்ளுங்கள். அதன் காரணமாகத்தான் ஜான் வெஸ்லி ... அல்லது மார்டீன் லூத்தர் வெஸ்லியின் செய்தியுடனே தொடர்ந்து செல்ல முடியவில்லை; அவர்களால் செல்ல முடிகின்ற அளவிற்கு சென்று பின்னர் அதை ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். கத்தோலிக்க சபையை விட்டு லூத்தர் வெளியே வந்தார், பிறகு அவர், அவர்கள் .... அவர்களுக்கு அவர் ஒரு பைத்தியக்காரனாக தென்பட்டார் ; ஆனால் நீதிமானாக்கப் படுதல் என்ற செய்தியை அவர் கொண்டிருந்தார், ஏனென்றால் அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த தேவனுடைய வார்த்தையாகும். அவருடைய மரணத்திற்குப்பிறகு அவர்கள் லூத்தரன் ஸ்தாபனத்தை ஸ்தாபித்துக் கொண்டனர். அதற்குப் பிறகு என்ன சம்பவித்த தென்றால் மறுபடியுமாக எல்லா வற்றையும் அது அரவணைத்துக் கொண்டது. ஆகவே வேதவாக்கியத்தின்படி மற்றுமொரு சபையானது எழுப்பப்பட வேண்டியதாயிருந்தது, அது பிலெதெல்பியா சபைக் காலமாக எழும்பினது, ஜான்வெஸ்லி வந்தார். ஆகவே என்ன சம்பவித்ததென்றால், கால முழுவதுமாக மேற்கு நோக்கி வந்து கொண்டேயிருந்தது. அது சம்பவித்த போது, சபை காலமானது இருந்தது, ஜான் வெஸ்லி எழும்பினார், ஆனால் லூத்தரால் அதை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் நீதிமானாக்கப்படுதலுடன் ஏற்கெனவே ஸ்தாபனமாகிவிட்டிருந்தனர். அவரால் பரிசுத்தமாக்கப் படுதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் பிறகு வெஸ்லியின் குழுவினர் அவர்கள் செய்தது போலவே தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டனர், அப்பொழுது சிறு கிளைகள் எழும்பிச் சென்றன, அப்பொழுது வரங்கள் திரும்ப அளிக்கப்படுதலின் செய்தியுடனே பெந்தெகொஸ்தே வந்தது; ஆனால் யாருமே அதை ஏற்றுக் கொள்ள விழையவில்லை, ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே ஸ்தாபனமாக ஸ்தாபித்துக்கொண்டிருந்தனர். இன்று பரிதாபத்திற்குரிய பாகம் என்னவென்றால், பெந்தெகொஸ்தேக்கள் ஸ்தாபனமாகி விட்டனர். 22நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் நாளையும், இந்த நாளுக்கென என்ன வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் பாருங்கள். நாம் எங்கே இருக்கின்றோம்? நாம் இன்னுமாக தொடர்ந்து மேலே சென்று இருக்கிறோம். அக்கினி ஸ்தம்பம் சென்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்ரவேல் புத்திரர் அக்கினி ஸ்தம்பத்துடனே சென்றனர். இல்லையென்றால் அவர்கள் எகிப்திற்கு திரும்பிச் சென்றிருப்பார்கள். நாம் வார்த்தையுடனே கூட சென்றுக் கொண்டிருக்க வேண்டியவர் களாக இருக்கின்றோம். ஆகவே இன்றைக்கு நாம் மிகவுமாக அசதியாயிருக் கின்றோம், சபையானது மிகவுமாக உலகப்பிரகாரமாக ஆகிக்கொண்டிருக்கின்றது. ஆகவே அவர்களுடைய மனம் மிகவுமாக தொலைக்காட்சியினாலும் மற்றும் நாங்கள் சுசியை நேசிக்கின்றோம் (We love Sucy) தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் அதைப் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் நிறைந்து ஒழுங்கற்ற நிலையில் இருக்கின்றது. வீட்டிலேயே தங்கி தொலைக்காட்சியைக் காண்பது. அந்த தொலைக்காட்சித் தொடர்களில் தான் மக்களுடைய இருதயங்கள் இருக்கின்றது. நீங்கள் அந்தக் காரியங்கள் தவறானது என்று அவர்களிடமாக கூறும் போது அப்போது அவர்கள் உங்களை பைத்தியம் பிடித்தவன் என்று நினைக்கின்றனர். அது என்ன? “தேவப்பிரிய ராயிராமல் சுகப்போகப்பிரியராயும்” இருத்தல். புரிகின்றதா? ஓ, எனக்குத்தெரிந்த வரைக்கும் மிக மகத்தான இன்பம், மகிழ்ச்சி நிறைவு (pleasure) என்ன தெரியுமா, நான் ஜெபித்து அதினாலே நான் தேவனுடைய பிரசன்னத்தில் இருந்து அதை அடையாளம் கண்டுகொள்வது தான், பரிசுத்த ஆவியின் பிரசன்னம்; அந்த வாக்குத்தத்தத்தைச் செய்த தேவனானவர் நம் மத்தியில் நின்றுக் கொண்டிருப்பதைக்காண்பதும், அவருடைய பிரசன்னத்தை உணருவது மற்றும் அவருடைய வார்த்தையைக் கண்டு அது உறுதிபடுத்தப்படுவதைக் காண்பது; இது தான் சபையினுடைய கிளர்ச்சி அலையாக, புளங்காகித உணர்ச்சியாக (thrill) இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அது விசுவாசத்தை அளிக்க வேண்டும், முடவர்களை நடக்கச் செய்ய வேண்டும், செவிடர்கள் கேட்கும்படிக்குச் செய்ய வேண்டும், ஊமைகளைப் பேசச் செய்ய வேண்டும். 23தென் ஆப்பிரிக்காவில், டர்பன் கார் ஓட்டப் பந்தய அரங்கில் நடந்த கூட்டத்தில் நான் நின்ற போது, அங்கே சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கூடியிருந்தனர், ஒரு முறை அதைப் போன்ற ஒன்று சம்பவித்ததை அவர்கள் கண்டனர், அதை நான் அவர்களுக்கு மிக சாதாரண முறையில் விவரித்து முடித்தேன்; அது வெளிப்படுத்தப்பட்டதை, அந்த ஒரு காரியமானது நடந்ததை அவர்கள் கண்டனர், உடனடியாக இருபத்தைந் தாயிரம் பேர் ஒரு நொடிப்பொழுதிலேயே சுகமாக்கப் பட்டனர். பிறகு ஏழு வண்டி நிரம்ப, அந்த சரக்கு வண்டிகளின் நீளம் இங்கிருந்து அது வரைக்குமாக ... ஆறு - பதினெட்டு சக்கரங்கள் கொண்ட வண்டி, அந்த வண்டிகள் நிரம்ப மக்கள் விட்டுச்சென்ற ஊன்று கோல்கள் மற்றும் காரியங்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் அஞ்ஞானிகள், வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள். அடுத்த நாளிலே, டர்பன் நகர மேயர் திரு. சிட்னி ஸ்மித் அவர்கள் என்னை தொலைப்பேசியில் அழைத்து “ நீங்கள் இந்து மகா சமுத்திர (Indian Ocean) திசையில் உள்ள உங்கள் ஜன்னலிடமாக செல்லுங்கள், நீங்கள் இதுவரை கண்டிராத ஒன்றைக் காண்பீர்கள்” என்று கூறினார். அது என்னவாயிருந்த தென்றால் அந்த பொருட்கள் நிரப்பப்பட்ட அந்த பெரிய சரக்கு வண்டிகளை காவல்துறை பாதுகாப்புடனே அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தது. அந்த நாளுக்கு முந்தைய நாள் ஸ்ட்ரெச்சர்களிலும், தூக்குக் கட்டில்களிலும், படுக்கை களிலும், அவர்களைத் தூக்கிச் செல்ல உபயோகப்படுத்தப் பட்ட கருவிகளிலும் படுத்துக் கொண்டிருந்த, நூற்றுக் கணக்கான மக்கள் அதன் பின்பாக நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அதற்கு முந்தின வாரத்தில் பழங்குடி இன மக்களிடையே நடந்த போரில் அவர்கள் ஒருவரோடு ஒருவர் எதிராக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இங்கே அந்த அதே மக்கள் ஒருவருக்கொருவர் கரங்களைக் கோர்த்துக் கொண்டு நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். ஏன்? பரலோக தேவன் தங்களுக்கு முன்பாக தம்முடைய வார்த்தையின் ரூபத்தில் தோன்றினதை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். ஆனால் அறிவாளிகளான அமெரிக்கர் களாக நாம் அப்படியே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம். நாம் கண்டிருப்பதைக் குறித்து நியாயத் தீர்ப்பு நாளிலே அவர்கள் எழுந்து நின்று இந்த சந்ததியை குற்றப்படுத்துவார்கள். 24சிறிது காலத்திற்கு முன்னர் கென்டக்கியில் உள்ள லூயிவில்லைச் சேர்ந்த ஒரு சிறிய குழந்தையை வைத்துக்கொண்டு பத்து சென்ட் அங்காடியைச் சுற்றி நடந்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பற்றி எனக்கு நினைவிற்கு வருகின்றது. அவள் அக்குழந்தையின் கவனத்தைக் கோர சிறு சிறு காரியங்களைச் செய்துக் கொண்டிருந்தாள், ஆனால் அந்த சிறு குழந்தையோ அப்படியே கண் சிமிட்டாமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு முடிவாக ஒரு சிறு மணியை எடுத்தாள், எந்த ஒரு சிறு குழந்தையின் கவனத்தையும் கோரும் அளவிற்கு அப்படிப்பட்ட விதத்தில் அந்த மணியின் அளவானது இருந்தது. அவள் அந்த மணியை அசைத்தாள் ஆனால் அந்த சிறு குழந்தையோ அப்படியே கண் சிமிட்டாமல் இருந்தது. அப்பொழுது அந்த பெண் கதற ஆரம்பித்தாள், கீழே விழுந்தாள், அவளுக்கு உதவி செய்ய மக்களில் சிலர் வந்தனர். அப்பொழுது அவள், “ஓ, இல்லை , அது அப்படியிருக்கக் கூடாதே! அப்படியிருக்கக்கூடாதே! என்றாள். ”என்ன ஆயிற்று?“ என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவள், “குழந்தையின் நிலைமை பரவாயில்லை என்று மருத்துவர் கூறினாரே” என்றாள். “பெண்ணே , அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டனர். அதற்கு அவள், “ஆம், ஆறு மாதத்திற்கு முன்னர் குழந்தைக்கு சற்று உடல் நலம் சரியில்லாமல் போனது, அதிலிருந்து அது உட்கார்ந்து அப்படியே கண் சிமிட்டாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது. என்ன வாயிருந்தாலும் சரி, அது அக்குழந்தையில் கவனத்தைக் கோர வேண்டுமே, ஆனால் குழந்தையின் கவனமானது ஈர்க்கப் படவே முடியவில்லை, அது அப்படியே அசைவில்லாமல் அமர்ந்து கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டேயிருக்கின்றது. அக்குழந்தையின் உடல் நிலை நன்றாகத் தான் உள்ளது என்று நினைப்பதாக மருத்துவர் என்னிடமாகக் கூறினார். ஆகவே நான் அதை இங்கே சிறிது பொம்மைகளை எடுத்து குழந்தையின் கவனத்தை ஈர்க்க இங்கே வந்தேன், ஆனால் குழந்தை அப்படியேத்தான் இருக்கின்றது. அது அசைவில்லாமல் அமர்ந்து கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டேயிருக் கின்றது” என்று கூறினாள். 25அந்த விதமான நிலைக்குத் தான் சபையானது சென்றுக் கொண்டேயிருக்கின்றது! வேதத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் எடுத்துத் தேவன் அவர்களுக்கு முன்பாக அசைத்துக் காண்பித்தார். ஆனால், நாமோ அப்படியே அசைவில்லாமல் உட்கார்ந்து கண் சிமிட்டாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறோம். “அப்படியா? எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியுங்கள், அதைக் காண்பிப்பீர்களா? ஆனால் அது முழு நேரமும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றது, சரியாக நம்மைச் சுற்றிலுமாக நடந்துக்கொண்டு தானிருக்கின்றது. தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டு வருதல், அது நமக்கு ஒளியூட்டத்தான் வேண்டும். தேவன் ஒரு வாக்குத்தத்தத்தைச் செய்வாரானால், அவர் அந்த வாக்குத்தத்தத்தின் பக்கமாகவே அதற்கு ஆதரவாக நிற்கின்றார். ஆம் ஐயா. இயேசுவானவர் தாம் தான் அந்த மேசியா என்கின்ற தம்முடைய மேசியாவின் அடையாளத்தை மிகவுமாக நிரூபித்த பிறகும், அதற்கு நேராகவே மக்கள், “எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்க வேண்டும்” என்று கேட்டனர். பாருங்கள், அவர்கள் அதை அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை. அதற்கு நேராக அதைக் கண் சிமிட்டாமல் அப்படியேப் பார்த்துக் கொண்டிருந்தனர். விசுவாசிக்கும் படியாக அவர்களுக்குள்ளாக ஒன்றுமே இருக்கவில்லை. “உன்னால்.” தென்பாகத்தை சேர்ந்த என் வயதான தாயார், “ஒரு நூல்கோல் காய்கறியிலிருந்து இரத்தத்தை உன்னால் எடுக்க முடியாது, ஏனென்றால் அதில் இரத்தமே கிடையாது” என்று கூறுவது வழக்கம். 26அந்த நாளிலே அவர்கள் கொண்டிருந்த தங்கள் கோட்பாடுகளாலும் மற்றும் - மற்றும் - மற்றும் இன்னும் பிறவற்றாலும் மிகவுமாக குருடாக்கப்பட்டிருந்தபடியினால் அவர்களால் அவரை இன்னுமாக அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை. வாக்குத்தத்தத்தின் வேத வாக்கியங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் அவர் களுடைய கோட்பாடுகள் அவ்வேதவாக்கியங்களை மறைத் திருந்தது. அவர்களுடைய அந்நாளின் கோட்பாடுகளும், பாரம்பரியங்களும் வேதாகம வாக்குத்தத்தத்தை மூடி மறைத்திருந்தது. மேசியாவை அந்த அடையாளம் தான் பின் தொடரும் என்று அவர்களுக்கு மாத்திரம் வேதவாக்கியங்களின் படியே போதிக்கப்பட்டிருந்திருக்குமானால் எப்படியாக இருந்திருக்கும்! அவர் தம்முடைய சரியான அடையாளத்துடன் வந்தார் என்று எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) நிச்சயமாக, அதனுடனே வந்தார், அவருடைய வாக்குத்தத்ததின்படியே வந்தார். ஆனால் அவர்களுக்கோ ஒரு கோட்பாடு போதிக்கப்பட்டிருந்தது, ''நாம் இதில் விசுவாசம் கொள்கிறோம். அதிலே தான் நாம் விசுவாசத்தை வைத்திருக்கின்றோம். அவர்களெல்லாரும் தேவனில் விசுவாசம் வைத்திருந்துள்ளனர். அவர் களெல்லாருமே...'' 27இன்று, முக்கியமாக, அமெரிக்கர்களாகிய நாம் பெரிய சபைக் கட்டிடங்களைக் கட்டுவதாலும், அருமையான மேய்ப்பர்களையும் மற்றும் காரியங்களையும் கொண்டிருப்ப தாலும் நமக்கு மன்னிக்கப்படும் என்று நாம் நினைக்கின்றோம். நினைவில் கொள்ளுங்கள், அது அப்படியாக இருக்கு மென்றால், அவர் நம்மை அந்த விதமாக உள்ளே எடுப்பா ரானால் அவர் அநீதியுள்ளவர் என்றாகிவிடும்; ஏனென்றால் ஏதேனுக்கு வெளியே முதலாவதாக வழிப்பட்டவர்களான காயீனும் ஆபேலும் கர்த்தருக்கென்று ஒரு பீடத்தைக் கட்டினார்கள், அவர்கள் இரண்டு பேரும் பலி செலுத்தினர், இரண்டுபேரும் காணிக்கைகளைச் செலுத்தினர், அவர்கள் இருவரும் ஜெபித்தனர், ஆனால் ஒருவன் சரியாக இருந்தான், மற்றவன் தவறாக இருந்தான். கவனியுங்கள், நாம் சத்தியத்தைக் கொண்டிருக்க வேண்டும், தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே சத்தியமாக இருக்கின்றது. இப்பொழுது இன்றைக்கும் அதே விதமாகத் தான் இருக்கின்றது, மக்கள் மிகவுமாக குருடாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூறுவது..... ''நீங்கள் - நீங்கள் கிறிஸ்தவரா?“ என்று கேட்டால். “ஓ, நான் இந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் சேர்ந்தவன்.” என்பர். பாருங்கள், அதற்கும் இதற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அதற்கு விரோதமாக என்னிடத்தில் ஒன்றுமில்லை, ஆனால் நான் கூற விழைவது அதுவல்ல. நீங்கள் விரும்பும் எந்த சபையிலும் சேர்ந்திருங்கள். உங்களுடைய ஸ்தாபன பெயர் எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டாக்கப்போவதில்லை. 28இன்று காலை நான் மேய்ப்பரிடம் கூறிக்கொண் டிருந்தேன், மேலே கொலொராடாவில் நான் மாடுகளை சுற்றி வளைக்கும் வேலையாகவும் மற்றும் இன்னுமாகவும் குதிரையில் செல்வேன். என் காலை குதிரை சேணத்தில் அந்த விதமாக வைத்து அங்கே உட்காருவது வழக்கம். ஹியர்ஃபோர்ட் அசோஸியேஷன் இயக்கத்தினர் தங்கள் மந்தைகளை ட்ரபிள்சம் ரிவர் பள்ளத்தாக்கு (Troublesome River Valley) என்ற இடத்தில் மேய்ப்பார்கள். நீங்கள் அந்தப் பள்ளத் தாக்கின் மேல் பகுதிக்கு சென்றால் அங்கே கிழக்கு மற்றும் மேற்கு திசை பிரியும் இடம் இருக்கும். இங்கே அந்த அசோசியேஷனின் கால்நடையெல்லாம் மேற்கு பிரிவில் புல் மேயும் ; நான் இருந்த குழுவின் மாடுகள் கிழக்குப் பிரிவில் புல் மேயும். அங்கே தனியார் நிலத்தில் மாடுகள் செல்லாம் லிருக்கவும், மற்றும் கோடைக்காலத்தில் மலைகளின் மேல் ஏறிச் செல்லாமலிருக்கவும் நீண்ட வேலியை அமைத்திருந்தனர். ஆகவே, நாங்கள் அங்கே ஆற்றில் நான்கு அல்லது ஐந்து விதமான வகைகளை, எட்டு அல்லது பத்து விதமான வகை மாடுகளைச் சுற்றி வளைத்து, வசந்த காலத்தில் எங்களுடைய மாடுகளை சுற்றி வளைத்து அவைகளை அங்கே மேலே கொண்டு செல்வோம். மாட்டு மந்தைகள் எல்லாவற்றையும் நாங்கள் ஒன்று சேர்த்த பிறகு நான் அங்கே குதிரையின் சேணத்தின் முகப்பில் என் காலை வைத்துக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டிருப்பேன், அவைகளெல்லாம் குறியிடப்பட்டிருக்கும், எல்லாவற்றிற்கும், புல்வெளியிலிருந்து மேலே அனுப்புவோம். 29அங்கே அந்த ரேஞ்சர் (ரேஞ்சர் என்றால் மாடுகள் மேய்வதாக உள்ள வெளி நிலங்களில் அவைகளை கண்காணித்து ரோந்து சுற்றி மேற்பார்வையிடும் ஒரு வேலையைச் செய்பவர் - தமிழாக்கியோன்) அங்கே இருந்தார், அவைகள் ஒவ்வொன்றாக செல்லும் போது அவைகளை அவர் எண்ணிக் கொண்டிருந்தார். அங்கே பலவிதமான இனங்கள் இருந்ததை நான் கவனித்தேன். திரு.க்ரீம்ஸ் என்பவர்டைமண்ட் பார் (Diamond Bar) என்று குறியிடப்பட்ட மாடுகளைக் கொண்டிருந்தார். எங்களுக்கு மேலாக இருந்தவர்கள் டர்க்கி ட்ராக் (Turkey Track) என்னும் குறியிட்ட மாடுகளை வைத்திருந்தனர், எங்களிடம் ஓல்ட் ட்ரைபாட் (Old Tripod) என்பவை இருந்தன. ஆனால் அந்த ரேஞ்சரோ மாட்டின வகைகளை கவனித்துக் கொண்டிருக்கவில்லை. அந்த மாடுகளின் காதில் இருந்த அதன் இரத்தத்தின் அடையாளச் சீட்டை மாத்திரமே கவனித்துக் கொண்டிருந்தார். அந்த புல்வெளிக்கு எந்த ஒரு மாடும் அவ்வளவு சுலபமாக செல்ல முடியாது, மாட்டினப்பெருக்க இயக்கங்கள் தங்களுடைய உண்மையான ரக மாடுகளை அனுப்பும்படியாக, எந்த ஒரு கலப்பும் இல்லாத சுத்தமான ஹியர்ஃபோர்ட் இன மாட்டைத் தவிர வேறு எதுவுமே அங்கே செல்ல முடியாது. அதனுடைய இனத்தைக் காட்டும் இரத்த அடையாளச் சீட்டு அந்த மாட்டின் காதில் பொருத்தப்பட வேண்டும். நியாயத்தீர்ப்பிலும் அவ்விதமாகத்தான் இருக்கும். அவர் என்னை நான் ஒரு - ஒரு மெத்தோடிஸ்டா, பாப்டிஸ்டா, பிரெஸ்பிடேரியனா என்று கேட்கப்போவதில்லை. நான் எந்த ஒரு ஸ்தாபன பெயருடன் இருந்தாலும் அது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. மறுபடியும் பிறந்த, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் இரத்தப்பிரகாரமான கிறிஸ்தவப் பிறப்பைத் தவிர வேறு எதுவுமே செல்லுபடியாகாது, அது மாத்திரம் தான் உள்ளே செல்லும். அதைத்தவிர வேறே எந்த ஒன்றுமே உள்ளே செல்லாது. இப்பொழுது அதை நாம் நினைவில் கொள்ளவே விரும்புகிறோம், அதை நினைவில் கொண்டிருக்கவே விரும்பு கிறோம். 30இப்பொழுது, அவர் அடையாளம் கண்டுக் கொள்ளப்பட வில்லையெனில், அவருடைய வல்லமை தாமே . . . அவர் அடையாளம் கண்டுக்கொள்ளப்படவில்லை என்றால் அவருடைய வல்லமையானது எப்பொழுது மே வெளிப் படுத்தப்படாது. எவ்வளவாக தேவன் தாமே இங்கே நின்றுக் கொண்டிருந்தாலும் கூட, நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும், அவ்வளவு தான். பெரும்பாடுள்ள ஸ்திரீயைப் போன்று, எல்லாரும் கடந்து சென்றுக் கொண்டிருந்தனர், எல்லாரும் அங்கே நின்றுக் கொண்டு, “அதோ அந்த ரபீ செல்கிறார். தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்கின்ற அந்த ஆள் அவர் தான். இவன் தான் அந்த தீவிர மூட பக்தி வைராக்கியம் கொண்டவன்” என்று அதைப்போன்றவைகளைக் கூறினார்கள். ஆனால் என்ன சம்பவித்தது? பெரும்பாடுள்ள அந்த சிறிய ஸ்திரீயானவள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். அவள் அங்கே வந்த போது, யார் என்ன கூறியிருந்த போதிலும் சரி, அவர் யார் என்று அவள் அடையாளம் கண்டுக் கொண்டாள். அவள், “நான் அவருடைய வஸ்திரங்களையாவது தொடக்கூடுமானால்!” என்றாள். பாருங்கள்? தேவனுக்குள்ளாக இருந்த அந்த உண்மையான விசுவாசம் அவளுக்கு நேர்மறையான ஒன்றாக ஆன போது அது எதை வெளிக்கொண்டு வந்தது. அது இயேசுவை எந்த விதத்தில் தொட்டதென்றால், அவர் திரும்பி அவளிடம் இருந்த கோளாறு என்னவென்று கூறி “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது! என்று கூறினார். எது அதைச்செய்தது? விசுவாசமே! அங்கே நின்றுக்கொண்டிருந்த மற்றவர்கள் அவளை விட மிகவும் வியாதியுற்ற நிலையில் இருந்திருப்பார்கள், ஆனால், நீங்கள் பாருங்கள், அவள் அவருடைய பிரசன்னத்தை அடையாளம் கண்டு கொண்டாள். அது தான் அவளுடைய தருணம் என்று அவள் அறிந்திருந்தாள். 31ஜனங்களே, இன்றிரவு அதை மாத்திரமே நம்மால் செய்யக்கூடுமானால்! அவர் தாமே ஒரு நோக்கத்திற்காகவே இந்தக் கூட்டங்களிலே நமக்காகத் தோன்றுகிறார். அது என்னவென்றால் நாம் அவருக்குள்ளாகக் கொண்டிருக்கின்ற நம்முடைய வாஞ்சைகளை நமக்குத் திறந்தளிக்கவே என்று நாம் அறிந்துணர்ந்து கொள்வோமானால் நலமாயிருக்கும். ஆனால் நாம் அவருடைய பிரசன்னத்தை அடையாளம் கண்டுக் கொள்ள வேண்டும். இப்பொழுது அவருடைய பிரசன்னத்தை நீங்கள் எப்படி அடையாளம் கண்டுக்கொள்ள முடியும் என்றால், இந்த காலத்திற்கென்று வாக்குத்தத்தம் செய்யப்பட்ட வார்த்தையானது வெளிப்படுத்தப்படும் போது மட்டுமே, மோசேயின் காலத்திற்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையையோ அல்லது வேறு மற்ற காலங் களுக்கென அளிக்கப்பட்டது அல்ல, இந்த காலத்திற்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த வார்த்தை! 32இப்பொழுது நாம் காண்பது என்னவென்றால் இயேசு தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தார். அங்கே யவீரு என்னும் ஒருவன் தன்னுடைய மரித்துப்போன மகளுடன் அங்கே இருந்தான். அவன் இயேசு கூறினது தான் சத்தியம் என்று விசுவாசித்தான். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். அவன் ஒரு ஆசாரியனாக இருந்தான், இயேசுவை சந்திக்கக் கூடாது என்று அவன் தடை செய்யப்பட்டிருந்தான், ஏனென்றால், “இயேசுவுடன் தொடர்புக் கெண்டிருக்கின்ற எந்த ஒருவரும் ஜெப ஆலயத்திலிருந்து வெளியே புறம்பாக்கப்படுவார்கள்” என்று மிகக் கண்டிப்புடனே அறிவுறுத்தப் பட்டிருந்தது. ஆம், ஜெப ஆலயத்திலிருந்து அவன் வெளியே தள்ளப்பட்டானோ அல்லது தள்ளப்படவில்லையோ காரியம் அதுவல்ல, வார்த்தையாக இருந்த கிறிஸ்துவுக்குள்ளே தேவன் இருந்தார் என்று அவன் மனநிறைவடைந்தான். ஆகவே, அது என்ன செய்தது? அது இயேசுவுக்குள்ளிருந்த உயிர்த்தெழுகின்ற வல்லமையை யவீருக்கென வெளிக்கொணர்ந்தது ; ஆமென், மரித்துப் போய் கீழே கிடத்தப்பட்டிருந்த ஒரு சிறுமியை அது உயிரோடெழுப்பினது, ஏனென்றால் கிறிஸ்துவுக்குள்ளாக தேவன் இருந்தார் என்பதையும், அவருடைய பிரசன்னமானது அவனுடைய வீட்டில் இருந்தது என்பதையும் அவன் அடையாளம் கண்டு கொண்டதினாலேயே. 33ஆனால் அவர் வளர்ந்த பட்டினத்திலே பார்க்கும் பொழுது, அந்த அதே வல்லமை அவருக்குள்ளாக இருந்தது, இயேசுவானவர் வளர்ந்த அந்தப்பட்டினத்திலோ அவரை அவர்கள் அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. அப்பட்டினத்து மக்களுக்கு அவர் ஏதோ ஒரு அதி தீவிர மூடபக்தி வைராக்கியம் கொண்டவர் என்பதாக காணப்பட்டாரே தவிர அவருடைய பிரசன்னமானது அவர்களுக்கு ஒரு காரியமாகவே தென்படவில்லை. “நீ இந்த-இந்தக் காரியத்தை செய்கின்றாய் என்று அவர்கள் எங்களுக்குக் கூறுகின்றனரே. அதை எங்களுக்கு இங்கேசெய்து காண்பி பார்க்கலாம்.” “அங்கே தானே . . . பெந்தெகொஸ்தே கூட்ட மக்களாகிய நீங்கள் தாமே, அக்கூட்ட மக்களாகிய நீங்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? இதோ இங்கே இன்னார் - இன்னார் இருக்கின்றார், நீங்கள் அவருக்கு சுகமளிப்பதை நான் பார்க்கட்டும்.” என்று கூறப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அது அந்த அதே பழைய பிசாசேதான், அந்த பிசாசுதான், “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படிக்கு சொல்லும்” என்று கூறினான். அந்த அதே பழைய பிசாசானவன், இயேசுவினுடைய கண்களை மூட வைத்தான். அவர்கள் அவரை தலையிலே ஒரு கோலினாலே அடித்த போது “இதோ பார்” என்றார்கள். அவர்கள் கோலை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டனர், 'உம்மை அடித்தவன் யார் என்று எங்களுக்குக் கூறும், நீர் ஒரு தீர்க்கதரிசி என்றால் உம்மை நாங்கள் விசுவாசிப்போம்“ என்றனர். அவர் ஒன்றுமே கூறவில்லை . அவர் எந்த ஒருவருக்காகவும் கோமாளித்தனம் செய்யமாட்டார். ஆம். 34அந்த அதே பிசாசு, அவர் சிலுவையிலிருந்த போது, “நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா. நீ தான் அந்த தேவனுடைய குமாரன் என்று நிரூபித்துக்காண்பி” என்றான். அவரால் அதைச் செய்திருக்க முடியும். அவருக்கு அதுவரைக்கும் செலுத்தப்படாதிருந்த மகத்தான புகழாரங்களை அங்கே அவர்கள் அவருக்கு சூடினர். ஆனால் அவர்கள் அதை அறிந்துக்கொள்ளவில்லை. அவர்கள், “மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக் கொள்ளத்திராணியில்லை” என்று கூறினர். அவர் தம்மைத் தாமே அச்சூழலிலிருந்து இரட்சித்துக் கொண்டிருப்பா ரென்றால், அவரால் மற்றவர்களை இரட்சித்திருக்க முடியாது. மற்றவர்களை இரட்சிக்கும்படியாக அவர் தம்மைத் தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். பாருங்கள். தேவனுடைய பிரசன்னத்தை அவர்களால் அடையாளம் கண்டுக்கொள்ள வில்லை . அவ்வளவு தான். இப்பொழுது அது சுகமாகும்படியான வல்லமை வெளிக்கொணர்கின்றது, மேலும் என்ன செய்கின்றது? அது அவரை அடையாளம் கண்டுக்கொள்ளும்படிக்கு உங்கள் கண்களைத் திறக்கின்ற அல்லது அவரை நீங்கள் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத அளவிற்கு உங்கள் கண்களை குருடாக்குகின்ற வல்லமையை வெளிக்கொணர்கின்றது. ஒருவனுடைய கண்களை எது திறக்கின்றதோ, அதுவே ஒரு அவிசுவாசியின் கண்களையும் மூடுகின்றது. 35ஆனால், அவருடைய பட்டினத்தாரோ அவரில் நம் பிக்கைக் கொண்டிருக்கவில்லை. பரிசேயனுடைய வீட்டிலே பார்க்கும் போது, அவன் அவரை வீட்டிற்கு அழைத்தான்; பரிசேயனாகிய சீமோன், அவன் ஒரு பெரிய இரவு விருந்தை ஆயத்தப்படுத்தியிருந்தான். இயேசு ஒரு தீர்க்கதரிசி அல்ல என்று நிரூபிக்க அந்த பரிசேயன் விரும்பினான். ஆகவே அவன் திராட்சரசத்தோடு தன்னுடைய கண்ணாடி குவளை அல்லது கோப்பையின் முனைப்பகுதியை மற்றவரின் குவளைகளோடு உரசிக்கொண்டிருந்தான் பெரிய விருந்துகளில் செய்வது போல - தமிழாக்கியோன்), அந்த வீட்டில் மிக உயர் ரக வாசனை திரவியங்கள் மணம் வீசிக்கொண்டிருந்தன. இயேசுவானவர் காலைக் கழுவும் அந்த கால் கழுவும் பணியாளனைக் கடந்து வந்து அங்கே உட்கார்ந்திருந்தார். அவர் மிகவும் அழுக்குப் படிந்தவராக இருந்தார், மிருகங்கள் நடந்து சென்றிருந்த அந்த தடத்தின் மண்ணின் துர்நாற்றம் அவரின் மீது இருந்தது. அவருடைய வஸ்திரம் மண்ணில் பட்டிருந்தது. அதன் காரணமாகத் தான் அந்நாட்களிலே அவர்கள் கால்களைக் கழுவினர். ஆகவே, நீங்கள் பாருங்கள், முதலாவது காரியம் என்னவென்றால், அங்கே பாலஸ்தீனாவிலே உங்களை அவர்கள் வீட்டிற்கு வர அழைப்பு விடுப்பார்களானால், தங்கள் பாதரட்சைகளை அவர்கள் அணிந்திருக்கும்போது, அவர்கள் செய்த முதல் காரியம் என்னவென்றால் அவர்கள் உங்கள் கால்களைக் கழுவி, தங்களுடைய மகத்தான பெரிய நாட்டுக் கம்பள விரிப்புகளின் மீது நடந்து செல்ல உங்களுக்கு ஒன்றைக் கொடுப்பார்கள், அந்த உயர்ரக கம்பளங்கள் மற்றும் காரியங்கள் மிக அழகானவைகளாக இருக்கும். அடுத்ததாக அவர்கள் செய்தது என்னவென்றால், பிறகு அவர்கள் உங்கள் கையிலே சிறிது தைலத்தைத் தருவார்கள். அந்தத் தைலம் மலையின் உச்சியில் காணப்படுகின்ற ஒரு சிறிய ஜம்பு நாவல் பழத்திலிருந்து (rose apple) எடுக்கப்படும், அந்த ஜம்பு நாவல் பழத்திலிருந்து எடுக்கப்படும் அந்த பூவின் இதழ் விழுந்த பிறகு அந்த பழமும் அருமையான வாசனை தைலமும் காணப்படும். ஆகவே அவர்கள் - அவர்கள் அதை தங்கள் முகத்திலே பூசிக்கொள்வார்கள். மேலும், நேரடியாக பூமிக்கு வரும் அந்த பாலஸ்தீன சூரியனின் கதிர்கள் மிகப் பயங்கரமாக இருக்கும், பாருங்கள், அது உங்கள் உடம்பில் துர்நாற்றத்தை பிறப்பிக்கும். ஆகவே - ஆகவே நீங்கள் அந்த தைலத்தைப் பூசின பிறகு, அப்பொழுது விருந்தளிப்பவன் கதவண்டையில் வந்து வந்திருப்பவர்களின் கழுத்தில் முத்தமிட்டு, அவர்களை வரவேற்பின் சூழலுக்கு உட்படுத்துவான். ஆகவே எப்படி அந்த கால் கழுவும் பணியாளர்கள் இயேசுவின் பாதத்தைக் கழுவாமலும் அல்லது - அல்லது - அல்லது அவர்தம்மை தைலத்தால் பூசிக்கொள்ள அவருக்குத் தைலத்தையும் அல்லது அவருக்கு வரவேற்பின் முத்தத்தையும் அளிக்காமல் தங்களைக் கடந்து செல்ல எப்படி விட்டு விட்டார்கள்? 36ஆனால் அங்கே தெருவில் ஒரு சிறு விபச்சாரி இருந்தாள். அப்பொழுது அங்கே இருந்த எல்லா மதவாதிகளும் அந்த முழு குழுவும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஒரு கேவலப் பெயரைக் கொண்டிருந்த ஒரு சிறிய பெண், அவள் உள்ளே உற்றுப் பார்த்தாள், ஒருக்கால் வாசலிலிருந்து உற்றுப் பார்த்தாள், அங்கே இயேசுவானவர் யாராலும் கவனிக்கப்படாத ஒரு தனிமை மிக்க மனிதனாக அங்கே உட்கார்ந்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். அந்த விதமாகத்தான் இன்றைக்கும் கூட யாராலும் கவனிக்கப்படாத ஒரு தனிமை மிக்க மனிதனாக, வரவேற்கப் படாத, தேவையற்ற ஒருவராக இந்த மதசம்பந்தமான குழுவினரின் மத்தியில் அவர் இருக்கின்றார். “அசுத்தமாக, அழுக்குப் படிந்தவராக, பரிசுத்த உருளையராக”, அவ்விதம் தான் அவர்களை அதை அழைக்கின்றனர், “ஏதோ ஒரு - ஒரு விதமான சரியான மனநிலையில் இல்லாதிருக்கின்ற ஒரு மனிதன், குறி சொல்பவன், மனோதத்துவத்தினால் மனதிலுள்ளதை அறிந்து கொள்பவன்” அல்லது ஏதோ ஒரு விதமான இழிவான பெயரைக் கொண்டு அழைக்கின்றனர். 37ஆகவே இயேசு, இன்னும் சில நிமிடங்களில் நான் அதற்குச் செல்கிறேன், அவர், “மனுஷகுமாரனுக்கு விரோதமாக பேசினால் அது உங்களுக்கு மன்னிக்கப்படும்; ஆனால் அந்த அதே காரியத்தை செய்வதற்கு பரிசுத்த ஆவி திரும்ப வருகையில் ஒரு வார்த்தை எதிராகப் பேசினால் உங்களுக்கு அது மன்னிக்கப்படுவதில்லை'' என்று கூறினார், பாருங்கள்? ஆனால் அந்த சிறு ஸ்திரீயானவள் அவருக்கு சேவை தேவைப்படுகின்றது என்று கண்டாள். ஆகவே, அவள் உடனடியாக மிக வேகமாக ஓடினாள், அவள் சென்று முழுவதுமாக தைலத்தால் நிறைந்திருந்த வெள்ளைக்கல் பரணியை வாங்கினாள். தன்னுடைய விபச்சாரத் தொழிலினால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அதை அவள் வாங்கியிருக்கக் கூடும். ஆனால் அது என்னவாயிருந்தது? அவள், “அவர் ஒரு - அவர் ஒரு தீர்க்கதரிசி ஆவார். மேலும் என்னை போலவே இக்கட்டு நிலையில் இருந்த வேறொரு ஸ்திரீயை நினைவு கூருகிறேன், என்னைப் போலவே அவளும் என்னைப் போன்ற நடத்தையைக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீயாவாள்; அவளுக்கு தருணம் கிடைத்தது, அப்போது அவள் அவரை அடையாளம் கண்டு கொண்டாள், அப்பொழுது அவள் மன்னிக்கப் பட்டாள்” என்று நினைத்துப் பார்த்திருக்கக்கூடும். அங்கே சீகார் கிணற்றண்டையில், கடந்த இரவு நாம் அதைக்குறித்து நாம் பேசினோம். ''என்னால் மாத்திரம் அவரிடமாகச் செல்ல முடியுமானால் நலமாக இருக்கும், அவர் யார் என்று எனக்குத் தெரியும், நான் அவருக்கு ஒரு சேவையைச் செய்வேன். அங்குள்ள மற்றவர்கள் என்ன செய்தாலும் அதைக்குறித்து எனக்கு அக்கறையில்லை. நான் அவருக்கு ஓர் சேவையைச் செய்வேன். அவர் தான் அந்த மனுஷகுமாரன் என்று நான் அடையாளம் கண்டு கொள்வேன்.“ 38அவள் உள்ளே ஓடினாள். அவள் அவரிடமாக மிக அருகாமையிலே சென்றாள், அப்போது அவள் மிகவுமாக குற்ற உணர்ச்சி கொண்டாள். ஒரு உண்மையான மனந்திரும்புகின்ற பாவியானவன் அவருடைய பிரசன்னத்தில் அந்த விதமாகத்தான் உணருவான், அவன் தன்னைக் குற்றமுள்ளவனாக உணருவான். அப்பொழுது கண்ணீர் கீழே விழ ஆரம்பிக்கின்றது, அவள் அதை மறைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தாள். அவள் கண்ணீரோ அவருடைய பாதங்களின் மீது விழுந்தது. அவள் தைலத்தை அவர் மீது பூச விழைந்தாள், ஆனால் அக்கண்ணீர் துளிகளோ அவருடைய பாதங்களின் மீது விழுந்தன. அப்பொழுது அவள் அக்கண்ணீர் துளிகளை துடைக்க ஆரம்பித்தாள்; மேலும் - மேலும் அழுது கொண்டேயிருந்தாள், மேலும் - மேலும் கண்ணீரைத் தன்னுடைய கரங்களால் துடைத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது - அப்பொழுது அவருடைய பாதங்களின் மேல் இருந்த அழுக்குடன் அது கலந்து மிகவுமாக சக்தியைப் போலாகிவிட்டது; மேலும் நீங்கள் உண்மையாகவே நம்புவீர்களானால், மிருகங்கள் நடந்து சென்ற பாதையின் துர்நாற்றமும் கூட சேர்ந்து கொண்டது, எல்லாரும் அந்த ஒரே தடத்தில் தான் நடந்து சென்றனர். ஆகவே அங்கே பார்ப்பீர்களானால், அவரின் மீது துர்நாற்றம் வீசினது, அதனுடனே அவர் அமர்ந்திருந்தார். அவளுடைய கண்ணீர் துளிகள் அவருடைய பாதங்களின் மீது விழுந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அவள் அதை துடைத்துப் போட முயற்சி செய்துக் கொண்டிருந்தாள். அவளிடமாக எந்த துவாலைத்துண்டும் இல்லை. 39ஒரு ஸ்திரீயின் அழகும் கனமும் என்னவாயிருக்கின்றது? அது அவளுடைய தலைமயிர். அதன் காரணமாகத்தான் இன்றைக்கு பெண்களாகிய உங்களில் அநேகம் பேர் தங்கள் மயிரைக் கத்தரித்து விடுகின்றனர். அது தவறாகும். அவள், அவள் தன்னுடைய தலைமயிரைக்கொண்டு கழுவ ... அவருடைய பாதங்களைக் கழுவி அவைகளைத் துடைக்க ஆரம்பித்தாள். அவளுடைய அழகான தலைமயிர், இயேசுவின் மேல் இருந்த துர்நாற்றம் எடுக்கப்பட்டு அவளின் மீது வந்தது. அவருடைய நிந்தையை அவள் சுமந்தாள். ஓ, என்னே! நீங்கள் இருக்குமிடத்தில் உங்கள் பிரசன்னத்தில் இருப்பவர் யார் என்று நீங்கள் அடையாளம் கண்டுகொள்கையில் அப்படியாகும். பாருங்கள்? நம்முடைய சகோதரிகள் அவ்விதமாக தங்கள் தலைமயிரைக் கொண்டு செய்யவேண்டுமானால் ஏறக்குறைய தலைகீழாக நிற்கவேண்டியிருக்கும், அப்பொழுது தான் சிறிது தலைமயிராவது துடைக்கக் கிடைக்கும். ஆகவே அங்கே அவள் அவருடைய பாதங்களை கழுவினாள், அவைகளை தன்னுடைய தலைமயிரால் துடைத்தாள், அவருடைய பாதங்களை முத்தமிட்டாள். 40அப்பொழுது அந்த சரியாக இல்லாதிருந்த அந்த சீமோன் அங்கே பின்பாக நின்றுகொண்டு, “ஹுஹ்! ஹுஹ்!” என்றான். ஓ, அவன் கோபத்தால் வெடிப்பதை என்னால் காண முடிகின்றது. அவர் யார் என்பதை அவன் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. “அவர் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்று நான் உங்களுக்கு ஏற்கெனவே கூறியுள்ளேனே. அவர் ஒரு தீர்க்கதரிசி யானால், அவரண்டை இருக்கும் அந்த ஸ்திரீ எப்படிப்பட்டவள் என்று அவராலே அறிந்து கொள்ள முடியுமே.” என்று கூறினான். இயேசு தம்முடைய காலை அசைக்கவே இல்லை. அவளை அவர் பார்த்துக்கொண்டேயிருந்தார். அப்பொழுது அவள் பயந்திருந்தாள். அவள் அவருக்கு செய்த ஊழியத்தை அவள் செய்து முடிக்கும் வரைக்குமாகக் காத்திருந்து பிறகு அவர் நோக்கிப் பார்த்து, ''சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும். நான் இங்கு வரும்படிக்கு நீ தான் எனக்கு அழைப்பு விடுத்தாய். நீ தான் நான் இங்கே வரும்படிக்குச் செய்தாய்,“ என்றார். வேறு விதமாகக் கூறினால், அவருடைய முகத்திரையைக் கிழிக்க அவன் உபயோகித்த ஒரு தந்திர உபாயமாகும். மேலும் அவர், ”என் முகத்திரையை கிழிக்க நீ விரும்பினாய். நான் என்னவாக இருக்கின்றேனோ அதுவாக நான் இல்லை என்று நிரூபிக்கவே நீ விரும்பினாய். மேலும் நீ தான் என்னை இங்கே வரவழைத்தாய், நீ என்னுடைய பாதங்கள் கழுவப்படும்படிக்குக் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் நீ செய்யவில்லை. என் தலையில் எண்ணை பூசப்படும்படிக்கு எனக்கு நீ எண்ணெய் தர வேண்டும். ஆனால் நீ அதைத் தரவில்லை. நீ எனக்கு வரவேற்பின் முத்தத்தை அளிக்கவில்லை. ஆனால் இந்த ஸ்திரீயோ நான் இங்கே வந்த முதற்கொண்டு என் பாதங்களை தன்னுடைய கண்ணீரால் கழுவினாள், தன்னுடைய தலைமயிரினால் என் பாதங்களை துடைத்தாள், நான் இங்கே வந்த முதற்கொண்டு ஓயாமல் தொடர்ந்து என் பாதங்களை முத்தமிட்டாள். சீமோனே, ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்,“ என்று கூறினார். 41பிறகு அவர் அவளிடமாகத் திரும்புகிறார். அவள் அங்கே நின்றுக் கொண்டிருப்பதை என்னால் கற்பனை செய்துப் பார்க்க முடிகிறது. அவளுடைய அழகிய பெரிய கண்கள் முழுவதுமாக கறைபடிந்திருந்தது, மேலும் அவளுடைய முகத்தில் சேறும் மற்றும் பாதையில் இருந்த மண் புழுதி யெல்லாம் அவளுடைய முகத்தில் இருந்தது, அப்பொழுது அவள், “இப்பொழுது நான் ஏதேனும் தவறு புரிந்து விட்டேனா? ஏதாவது தவறு செய்து விட்டேனா?” என்று நினைக்கின்றாள். இயேசு, “ஆதலால் நான் இவளுக்குச் சொல்லுகிறேன், இவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது. சமாதானத்தோடே போ” என்று கூறினார். அது என்னவாயிருந்தது? அவள் அடையாளம் கண்டு கொண்டாள். அவள் தன்னுடைய தருணத்தை அடையாளம் கண்டு கொண்டாள். பாருங்கள்? அவள் அதைச் செய்தாள். அவள் அவருக்கு ஒரு சேவையைச் செய்தாள். பரிசேயர்கள் அதைச் செய்யவில்லை. அவள் அதைக் கண்டாள், அவருடைய பிரசன்னத்தை அவள் அடையாளம் கண்டு கொண்டாள், ஆகவே அது என்ன செய்தது? அது கழுவினது. அது அவளுக்கு எதை வெளிக்கொண்டு வந்தது? மன்னிப்பை, அவளுக்கென வெளியாக்கப்பட்டது. அவளுடைய பாவங்களுக்கான மன்னிப்பை அவளுக்கு வெளிக்கொண்டு வந்தது. மேலும் இன்னுமாக அது என்ன செய்தது? அந்த அவிசுவாசிகளுக்கு அவர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்பிக்கும்படியாக அது தேவனுடைய வல்லமையை வெளிக்கொண்டு வந்தது. அவள் யார் என்று அவர் அறிந்திருந்தார். அது மேலும் சந்தோஷம், வல்லமை, நித்திய ஜீவன் ஆகியவைகளையும் வெளிக்கொண்டு வந்தது. அது அக்காரியத்தை வெளியாக்கி வெளிக்கொண்டு வந்தது. 42ஆனால் அந்த விலையேறப்பெற்ற பாதங்களில் ஒரு மிகப் பெரிய ஆணியை அடித்துக் கடாவின அந்த மனிதன் தானே, அவருக்குள்ளாக இருந்த தேவனுடைய பிரசன்னத்தை அடையாளம் கண்டு கொள்ளவே இல்லை. மேலும் அவன் இயேசுவானவர் தனக்கென ஒரு மந்திர வித்தையை மற்றும் பொழுது போக்குக் காரியத்தை செய்ய வேண்டுமென விரும்பினான். இன்றைக்கு அதைத்தான் உலகமானது விரும்புகின்றது. அது சுவிசேஷத்தை விரும்பவில்லை. நிறைய கேளிக்கை, பொழுதுபோக்குக் காரியங்களை விரும்புகின்றது. அங்கே பிலாத்து, “அவர் ஒரு அற்புதத்தை அல்லது அதைப் போன்ற ஒன்றைச் செய்ய அதை நான் காண விரும்புகிறேன். ஆகவே அவனை இங்கேக் கொண்டு வாருங்கள்” என்று கூறினான். அவன் சரியாக தேவனுடைய பிரசன்னத்தில் இருந்தான், அவன் அதை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிப்போட்டான். ஏனென்றால் (எதினாலே?) அவன் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கின்ற தருணத்தை சீர்தூக்கிப் பார்ப்பதைக் காட்டிலும் பொது ஜனத்தின் அபிப்பிராயத்தை, கருத்துரையையே அவன் சீர்தூக்கிப் பார்த்தான். நடந்தது என்ன? அந்த ஸ்திரீ மன்னிக்கப்பட்டாள், அவளுக்கு நித்திய ஜீவன் அளிக்கப்பட்டது; ஆனால் அவனோ நினைவாற்றல் இழந்து, மனநிலைக் குலைந்து பித்துப் பிடித்த நிலைக்குச்சென்றான், அவன் ஸ்விட்சர்லாந்தில் தண்ணீரில் குதித்து மூழ்கித் தற்கொலை செய்துக்கொண்டான். 43இப்பொழுது, அவனோ அந்நாளின் பொது மக்களின் கருத்தினை மதித்து, அவர்களின் அபிப்பிராயத்தினாலே மிகவுமாக உணர்ச்சி வசப்பட்டு, “அவன் பெயெல்செபூல் ஆவான்; அவன் ஒரு பாவனை விசுவாசி மாத்திரமே; உண்மையாகவே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவனிடமாக ஒன்றுமே இல்லை” என்று கூறினான், அதினாலே அவன் செய்தது என்ன? அவன் அதை இழந்து போனான், தேவனுடைய பிரசன்னத்தில் தனக்கிருந்த தருணத்தை அவன் இழந்து போனான். அவனுக்கு மன்னிப்பு அருளப்பட்டிருக்கும். அவன், “உன்னை சிலுவையிலறைய எனக்கு அதிகாரம் இருக்கின்றது. உன்னை விடுதலையாக்கவும் எனக்கு அதிகார மிருக்கிறது” என்று கூறினான். அவர், “என் பிதாவினிடத்திலிருந்து வந்தால் தவிர உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என்று கூறினார். அவன் அதை அறிந்திருக்க வேண்டியவனாக இருந்தான், அவன் வேத வசனங்களை மாத்திரம் அறிந்திருப்பானானால் - அவன் ஒரு யூதனாயிருந்தபடியால் அவன் அதைக் கண்டிப்பாக அறிந்திருக்கத்தான் வேண்டும். ஆனால், நீங்கள் பாருங்கள், அந்த பாரம்பரியங்கள் அவனுக்கு மிகவுமாக போதிக்கப் பட்டிருந்தது. அதே விதமாகத் தான் இன்றும் கூட இருக்கின்றது. அவன் மாத்திரம் சரியாக போதிக்கப் பட்டிருந்தால்! வேத வாக்கியங்கள் என்ன கூறியுள்ளது என்பதை மாத்திரம் அந்த மனிதன் விசுவாசித்திருப்பானானால்! ஆனால் பாரம்பரியங்கள் அவனை அதிலிருந்து அகற்றிப் போட்டது. 44இன்றைக்கும் கூட அதே விதமாகத்தான் இருக்கின்றது. பரிசுத்த ஆவி தாமே உள்ளே வந்துக்கொண்டிருக்கின்ற, தேவனுடைய மகிமையும் வல்லமையும் பாவிகளை பாவத்திலிருந்து விடுவித்து அவர்களை கட்டுகளிலிருந்து விடுதலைப் பெறச் செய்து, பரிசுத்த ஆவியாலே அபிஷேகித்து, வியாதியஸ்தர்களை சுகமாக்கி, அடையாளங்களை அற்புதங்களை காண்பிக்கின்ற அந்த உண்மையான சுவிசேஷத்தை மக்கள் எடுக்கின்றார்கள்; ஆனாலும் அவர்கள் 'ஆஹ்! 'அது அர்த்தமற்றது' என்று என் சபை என்ன விசுவாசிக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமல்லவா!“ என்றுக் கூறிக் கடந்துச்சென்றுவிடுவார்கள். பாருங்கள், நீங்கள் இழந்து போகிறீர்கள் ; நீங்கள் உங்கள் சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போடுகின்றீர்கள். மற்றுமொரு ஏசா! அப்பொழுது அவர்களுக்கு இருந்தது போல இன்றைக்கும் கூட மிக அதிகம் பேர் அவருடைய பிரசன்னத்தில் நிற்கும்படிக்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். ஆனாலும், பொதுமக்களுடைய கருத்துரைக்கேற்ப அவர்கள் அதை வேண்டாம் என்று தள்ளிவிடுகின்றனர். தேவனுடைய பிரசன்னத்தில் நிற்பதானது! நண்பனே, இன்றிரவு, கிறிஸ்தவர்களாகிய நாம் அவருடைய பிரசன்னத்தில் இருக்கையில், நாம் வியாதிப்பட்டிருந்து அவரை விசுவாசிக்க மாத்திரம் செய்து அதினாலே சுகமாக்கப்படுகின்ற ஒரு தருணத்தை நாம் வேண்டாம் என்று தள்ளிப் போடுகிறோ மென்றால் எப்படியாக அது இருக்கும் என்று நான் வியக்கின்றேன். அவரை விசுவாசிக்கின்றோம் என்று உரிமை கோருகின்ற நாம் தாமே, அவருடைய பிரசன்னத்தையும். இன்றைக்கு அவர் செய்யப்போவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளதையும் உண்மையாகவே அடையாளம் கண்டுக் கொள்வதில்லை. 45அந்நாளுக்கான வாக்குத்தத்தத்தினாலே உறுதிப்படுத்தப் பட்டு இயேசுதாமே தம்முடைய மேசியாவின் அடையாளத்தை அந்த சந்ததியார் விசுவாசிக்காமல் இருந்ததற்காக அவர்களைக் கடிந்துக் கொண்டிருந்தார். இங்கே அதை நாம் காண்கிறோம். அவர் அவர்களைக் கடிந்துக் கொண்டிருந்தார். அவரை பெயெல்செபூல் என்று அழைத்துக் கொண்டிருந்தனர்! அவர் தாமே மோசேயின் அடையாளத்தைச் செய்துக் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினர், ஒருக்கால் சிவந்த சமுத்திரத்தைத் திறக்க வேண்டும் என்று விரும்பியிருப்பர். தாவீதின் அடையாளத்தை அவர் செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர், ராஜ்யத்தையும் சிங்காசனத்தையும் அவர் எடுக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் அவர் அதைச் செய்வார் என்று எந்த ஒரு வேத வசனமும் கூறவில்லை . அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டியவராக இருந்தார். அந்த ராஜாவாக அவர் வருகின்றார். அப்பொழுது அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டியவராக இருந்தார். மேலும் அந்நாட்களில் அவர் செய்வார் என்று தேவன் கூறியிருந்த அந்த அடையாளத்தை அவர் செய்திருந்தார், ஆனாலும் இன்னுமாக அவர்கள் தாமே தங்களைத் திருப்திப்படுத்துகின்ற ஒரு அடையாளத்தை இயேசு செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பாருங்கள்? சரியாக நம் அருகிலேயே இருக்கின்ற ஒன்றிற்காக நாம் எதிர்பார்த்து முன்னே நோக்கிப் பார்க்காதிருக்கிறோமென்றால் அது வியக்கத்தக்க ஒன்றாகும். நம்முடைய தருணத்தைப் பார்க்காமல் அப்படியே கடந்துச் சென்று விடுவோமானால் அதே விதமாகத் தான் அது இருக்குமல்லவா? நினைவில் கொள்ளுங்கள், பழைய காரியங்கள் இருக்கிறவண்ணமாகவே தான் இருக்கும். அது ஒரு போதும் மாறாது. இயேசுவானவர் கூறினதின்படியான அந்த கடைசி அடையாளமானது, அவர் கூறினதாவது, “சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியாக இருக்கும். இன்றைக்கு நாம் எங்கே இருக்கின்றோம் என்று சற்றுப் பாருங்கள்! நண்பர்களே, இங்கே இப்பொழுது நான் உங்களிடமாக சில காரியங்களை என்னால் உங்களுக்குக் கூற முடியும், அதை நான் உங்களிடமாகக் கூறுவது என்னைப் பொறுத்தவரைக்கும் சரியாக இல்லை, ஆனால் அது உங்களைத் திடுக்கிடச் செய்யும். 46இந்த ஆராதனையைத் தொடர்ந்து நடத்துவதற்கு முன்னர், நாம் சற்று நிறுத்துகையில், சில நிமிடங்கள் மாத்திரம் நான் உங்களிடமாக ஒரு சிறு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இதை உங்களிடமாக நான் கேட்க முடியுமா என்று நான் சற்று நினைக்கின்றேன். உலகமும் அது இருக்கின்ற நிலையும் மற்றும் எல்லாக்காரியமும் அவருடைய வருகையின் வரிசை முறையிலே சரியாக அமைந்திருக்கிறது என்பதை எந்த ஒருவரும் அறிவர். “பூமியதிர்ச்சிகள் பல இடங்களில் உண்டாகும்; சந்திரன் சிவப்பு இரத்தத்தைப் பீறித்தெரித்து, அல்லது சிவப்பு எரிமலைகள் எல்லாவிடங்களிலும் பீறித்தெரித்து, முழுவதுமாக மூடிற்று, ”இயேசு கூறினது போல கடைசி நாட்களில் அந்த அடையாளத்திற்காகக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருங்கள்; “சமுத்திரம் முழக்கமாயிருக்கும், மனுஷருடைய இருதயம் பயத்தினால் சோர்ந்து போகின்றது, நேரத்தைக் கண்டு கலக்கமடைகிறார்கள், நாடுகளுக்கிடையே தத்தளிப்பு இருக்கும்.” இன்றைக்கு தாறுமாறுகள் அதிகமாகிக்கொண்டே இருப்பதைப் பாருங்கள்! இன்றைக்கு அதைப் பாருங்கள், ஓரினச் சேர்க்கைக்காரர்கலிஃபோர்னியாவில் நாற்பது சதவீதம் அதிகரித்துள்ளனர். இயற்கையான விருப்பங்கள் ஏற்கெனவே இழக்கப்பட்டுப் போயிற்று. 47நோக்கிப் பாருங்கள்..... பாருங்கள். இன்றைக்கு மக்கள் எப்படி வீட்டிலேயே இருந்துக்கொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். பாட்பூன், எல்விஸ் பிரெஸ்லி, எர்னி ஃபோர்ட் போன்றவர்களையும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சபை பாமாலைகள் பாடுபவர்கள் பாடுவதைக் கேட்கின்றனர்; மற்றும் அதைப் போன்றவைகளையும் பார்க்கின்றனர், மேலும் அவர்கள் பெண்களை முத்தமிடுவதையும் மற்றும் அங்கே வெளியே நடக்கின்ற காரியங்களையும் பார்க்கின்றனர். எந்த ஒரு மனிதனும் அவளைத் திருமணம் செய்துக் கொள்ளும் வரைக்குமாக அவளுக்கு முத்தமளிக்கவே கூடாது என்பதாக உள்ளது. அப்படிச் செய்கையில் ஆண் சுரப்பிகளும் பெண் சுரப்பிகளும் ஒன்றோடொன்று சேர்தலாகும். அது எந்த இடமாயிருந்தாலும் சரி, அது தவறாகும். அச்செயல் நிச்சயமாக ஒரு உடலுறவுக்காரியமே. அது சரி, ஆண் பெண் சுரப்பிகள் ஒன்றோடொன்று சேர்தல் அது இனச்சேர்க்கை செயலாகும். அது உண்டாக்க .... ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் வாயில் முத்தமிடும்போது, அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணின் வாயில் முத்தமிடும் போது, அது அவர்களுக்கு வாந்தியை உண்டாக்கும். அது ஏன் வித்தியாசப்படுகிறது? அது நிச்சயமாக ஒரு உடலுறவுக் காரியமே ஆகும். அது சரியே. கிறிஸ்து தம்முடைய மணவாட்டியை முத்தமிடுவதன் நிழல் ஆகும், பாருங்கள். நீங்கள் அதைச் செய்யவேக்கூடாது. ஆனால் இன்றைக்குப் பாருங்கள், இந்த எல்லாத் திரைப்படங்களிலும் மற்றும் காரியங்களிலும் ஒரு கூட்ட மக்கள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் இருக்கின்றனர். அது ஏறக்குறைய முற்றிலுமாக முழுமையான பொது விபச்சாரம் ஆகும். எல்லாவிடங்களிலும், மேலும் மக்கள் மிகவும் குருடாக இருப்பதனால் அது என்னவென்பதைக் காண முடியவில்லை. சரி தானே! எல்லாக் காரியமும் சோதோமின் நிலையில் இருக்கின்றன, வேதாகமம் கூறியுள்ளபடி எல்லா இடங்களிலும் ஆண்புணர்ச்சிக்காரர் இருக்கின்றனர். 48ஆகவே அநேகக் காரியங்கள். இந்த நாட்களில் பாருங்கள். என்ன சம்பவிக்கும் என்று அவர் கூறியுள்ளவைகளைப் பாருங்கள்! இந்த நாளில் சம்பவிக்கும் என்று அவர் பண்ணியுள்ள வாக்குத்தத்தத்தைப் பாருங்கள்! நடந்துக் கொண்டிருப்பது என்னவென்று பார்த்து அதினுடன் அதை கூராராய்ந்து ஒப்பிட்டுப்பார்த்து, நாம் எங்கே இருக்கின்றோம் என்று பாருங்கள், பிறகு அவர் இன்னுமாக தம்முடைய வார்த்தையில் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்று பாருங்கள். அவர்கள் மோசேயின் அடையாளத்தையும், தாவீதின் அடையாளத்தையும் காணவேண்டுமென்று விரும்பினர். அது அவர்களுடைய காலத்திற்கு அல்ல; அது மோசேயின் காலத்திற்கும் மற்றும் அவர்களின் காலத்திற்கும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டது. இந்த காலத்திற்கான வாக்குத்தத்தம் நடந்தேற வேண்டியுள்ளது. அவர் அவைகளை மிகத் தெளிவாகக் காண்பித்துள்ளார். அவர், வேதாகமத்தின் படியாகக் காண்பித்து, வேத வசனத்தை ஆராய்ந்து பார்த்து அவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற நாள் என்னவாயிருக் கின்றது என்று பார்க்கும்படிக்கு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர் சரியாக இப்பொழுதும் அந்த அதே காரியத்தைத் தான் செய்துக் கொண்டிருக்கிறார்! வேதாகமத்தை விசுவாசிப் பவர்களே, வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவருடைய வருகைக்கு முன்னர் சரியாக இங்கே என்ன நடக்க வேண்டியுள்ளது? 49உலகம் எந்தவிதமான ஒரு நிலையில் உள்ளது என்று பாருங்கள்; இப்பொழுது உலகம் அவ்விதம் தான் உள்ளது. சபையைப் பாருங்கள், அது எங்கே உள்ளது என்று பாருங்கள். “லவோதிக்கேயா விழுந்துக்கொண்டிருக்கின்றது, அனலுமின்றி குளிருமின்றி இருக்கின்றது. வார்த்தையை வெளியேத் தள்ளி விட்டது. அந்த முழுக்காரியமும் அந்தப் பெரிய சபைகளின் ஆலோசனைச் சங்கத்திற்குள்ளாக, அந்த உலக சபைகளின் ஆலோசனைச் சங்கத்திற்குள்ளாகச் சென்று மிருகத்தின் முத்திரையை உருவாக்குகின்றன; அது தவறானது என்று வேதாகமம் அறிவிக்கின்றது. மற்றும் அந்த எல்லாக் காரியங்களும், ஆனாலும் இன்னுமாக பிராடெஸ்டெண்ட் ஸ்தாபனத்தாரும் கண்மூடித்தனமாக, வேதாகமத்தை அறியாமல் நேராக அதற்குள்ளாகச் சென்றுக் கொண்டிருக் கின்றனர். அவர்களுடைய பாரம்பரியம்! ஓ, அவர்களுக்கு ஒரு - ஒரு - ஒரு சூப்பர்மேன், அசாதாரணமான வல்லமை வலிமை படைத்த மனிதன் வேண்டும். அவ்வளவு தான், ஆம் அவர்கள் ஒருவனைப் பெற்றுக்கொள்ளப் போகின்றனர். அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று உறுதியுடன் செயல்படுவர். அவர் தாமே, கவனியுங்கள், தாம் யார் என்பதை சரியாக இயேசுவானவர் தாமே பரிபூரணமான விதத்தில் தெரியப்படுத்தினார். மேலும் தம்முடைய காலத்திலே, தாம் யார் என்பதையும் அவர்களுக்கு அவர் நிரூபித்துக் காண்பித்தார். 50அந்தக்காரியம் தான் இறைக்கும் கூட உள்ளதே! இப்பொழுது அதை சற்று கவனித்துப் பாருங்கள். லூக்கா17-ல் அமைக்கப்பட்டுள்ள அந்தக்காட்சியை நாம் பார்ப்போமாக, “சோதோமின் நாட்களில் நடந்தது போல.” உலகத்தைப் பாருங்கள். சபையைப் பாருங்கள், ஒரு சோதோமிய, ஒருபாலர் புணர்ச்சி நிலைமையில் உள்ளது! லோத்து எங்கே இருந்தான் என்று பாருங்கள்; அந்தத் தூதர்களை அந்த மனிதரை அடைய, அந்த மனிதர் தாமே மிகவும் நெருக்கிக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர் - முயற்சி செய்தனர். கவனியுங்கள், இங்கே சற்று கவனியுங்கள். அங்கே ஒரு... கவனியுங்கள், ஆபிரகாம் அங்கே மேலே மலையின் மீது இருந்தான். அவன் சோதோமில் இல்லை. அது ஒரு முன்னடை யாளமாக உள்ளது. 51ஒரு மத சம்பந்தமானக் கூட்டத்தில் எப்பொழுதுமே மூன்று வகையான மக்கள் பிரிவினர் இருப்பர்; விசுவாசிகள், பாவனை விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள். எப்போதுமே மூன்று வகையான மக்கள் இருப்பர்! ஆகவே அதோ அங்கேயும் அந்த விதமாக இருந்தனர்; அவிசுவாசிக்கின்ற சோதோமியர், பாவனை விசுவாசியாகிய லோத்து மற்றும் தெரிந்துக் கொள்ளப்பட்ட சபையாகிய ஆபிரகாம். இப்பொழுது, அந்த நாளிற்கான அவர்களுடைய செய்தியாளர்களை கவனியுங்கள். இரண்டு செய்தியாளர்கள் அங்கே சென்று சோதோமியருக்கு பிரசங்கம் செய்தனர். அவர்கள் எந்த விதமான அற்புதங்களையும் செய்யவில்லை, அவர்களுக்கு குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணின, அவர்கள் அதை மாத்திரமே செய்தனர். வார்த்தையை பிரசங்கம் செய்தல் அதைத்தான் செய்கின்றது. 52ஆனால் ஆபிரகாமுடன் தங்கின அந்தத் தூதன் எந்த விதமான ஒரு அற்புதத்தைச் செய்தான் என்று கவனியுங்கள். அவர் தம்முடைய முதுகைத் திருப்பியிருந்தார். அப்போது அவர் ஆபிரகாமிடமாக அவனுடைய பெயரானது மாற்றப் பட்டுள்ளது என்று கூறினார் ; ஆபிராம் என்பதற்குப் பதிலாக ''ஆபிரகாம்“ என்று அவனை அழைத்தார். அவனுடைய பெயர் மாற்றப்படுகின்றவரைக்குமாக அவனால் குழந்தையை பெற்றுக் கொள்ள முடியவில்லை, சாராளுக்கும் அந்த விதமாகத்தான் இருந்தது. அவர்களுடைய பெயர் என்ன வென்று அவர்களிடமாக அவர் கூறினார். அந்தத் தூதன் அவர்களிடமாக அதைக்கூறினார். மேலும் அவர் தாம் உற்பவ காலத்திட்டத்தில் தாம் சாராளை சந்திக்கப் போவதாகவும் கூறினார். அதைக்குறித்து சாராள் நகைத்தாள். சாராள் நகைத்த போது ...... தம்முடைய முதுகைக்கூடாரத்தின் பக்கமாகத் திருப்பியிருந்த அந்த மனிதன், இளங்கன்றின் இறைச்சியைப் புசித்து, மாட்டின் பாலைக்குடித்து, அப்பத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த மனிதன்; தம்முடைய ஆடைகளில் தூசி படிந்திருந்து பிரயாணம் பண்ணின ஒரு மனிதனானவர். அவர் தேவன் தாமே. தமக்குப் பின் இருந்த சாராளின் இருதயத்திலிருந்த எண்ணங்களை அவர் அறிந்திருந்தபடியால் ஆபிரகாம் அதை அடையாளம் கண்டுக்கொண்டான். அவர், ''சாராள் தனக்குள்ளாக 'இக்காரியங்கள் எப்படி நடந்தேறும்' என்று ஏன் சொல்வானேன்? தேவனால் ஆகாத காரியம் உண்டோ ?“ என்று கூறினார். பாருங்கள்? உடனடியாக சாராள் வெளியே ஓடி வந்து அதை மறுத்தாள். அவர், ”ஆமாம், நீ நகைத்தாய்“ என்றார். இப்பொழுது அவள் அவிசுவாசித்த தினாலே சரியாக அந்த இடத்திலேயே அவர் சாராளின் ஜீவனை எடுத்துப்போட்டிருக்க முடியும். அப்படியாக அவர் செய்திருக்க முடியும், ஆனால் பாருங்கள். அவள் ஆபிரகாமின் ஒரு பாகமாக இருந்தாள். 53இந்த மணி நேரத்தில் அவர் தம்மை மகத்தான விதத்தில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்ற இந்த ஒன்றில் நாம் அவிசுவாசப்படுதல்; நாம் கிறிஸ்துவின் ஒரு பாகமாக இருக்கின்றோம். அவர் மாத்திரம் நாம்- நாம் பாருங்கள், நம்முடைய . . . அவர் - அவர் அதைக் காத்துக்கொள்ள வேண்டியவராக இருக்கின்றார். இப்பொழுது, கவனியுங்கள், சபைக்கால சரித்திரத்தில் இந்தக் காலமானது இருந்ததே கிடையாது. எனக்குத் தெரிந்த வரைக்குமாக ஒரு உண்மையான மாணாக்கனிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர் ஒரு வரலாற்று வல்லுனர் ஆவார். இப்படியாக ஒன்று இருந்ததே இல்லை. கிறிஸ்துவின் சிலுவையேற்றத்திற்கு பிறகு சபையிலே, சபைக்காலத்திலே, ஒரு உலகளாவிய ஊழியத்தில் ஆ - பி -ர- ஹா - ம் (A-b-r-a-n-a-m) என்பதுபோல, இந்த நாள் வரைக்குமாக, ஹா- ம் (h-a-m), என்கின்ற விதத்தில் முடிவடையும் ஒரு பெயரைக் கொண்டுள்ள ஒரு மனிதனானவன் சபைக்காலத்திற்கென அனுப்பப்பட்டானா என்று என்னிடமாகக் கூறும்படிக்கு நான் எந்த ஒரு வேத மாணாக்கனையும் நோக்கிக் கேட்கின்றேன். சான்கி (Sankey) ஃபின்னி (Finney), மூடி (Moody), நாக்ஸ் (Knox), கால்வின் (Calvin) என்றவர்கள்தான் வந்துள்ளனர்; ஆனால் அங்கே சோதோமில் உள்ள ஸ்தாபனங்களில் இருக்கின்ற அந்த மகத்தான சுவிசேஷகர், பில்லி கிரஹாம், அதைப்போன்று இதற்கு முன்பான காலங்களில் கி-ர-ஹா- ம் (G-r-a-h-a-m) என்கின்ற ஒருவர் எங்காகிலும் காணப்பட்டுள்ளாரா? ஒரு போதும் கிடையாது. அங்கே பெந்தெகொஸ்தேயினருடன் இருக்கின்ற ஒரு நவீன ஓரல் ராபர்ட்ஸ் இருக்கின்றார், அதுவும் அந்தக் காரியமே. அது உங்களுக்குத் தெரியுமா? ஆனால், ஹா-ம் (h-a-m) இப்பொழுது, கிரஹாம் (G-r-a-h-am) என்பது ஆறு எழுத்துக்கள் மாத்திரமே. (ஆங்கிலத்தில் உள்ளவாறே -தமிழாக்கியோன்.) ஆனால் ஆபிரகாம், (A-b-r-a-ha-m) என்பது ஏழு எழுத்துக்கள் கொண்டதாகும். (ஆங்கிலத்தில் உள்ளவாறே - தமிழாக்கியோன்.) ஆறு என்பது மனிதனின் இலக்கமாகும், மனிதனின் ஸ்தாபனம், மனிதனின் செயல்பாடு; ஆனால் ஆபிரகாம் (A-b-r-a-h-a-m) ஏழு எழுத்துக்கள் ஆகும். இப்பொழுது கவனியுங்கள், வெளியே இழுக்கப்பட்டுள்ள தெரிந்துக் கொள்ளப்பட்டுள்ள சபையில், அங்கிருக்கின்ற ஸ்தாபனங்கள் அல்ல, வெளியே நிற்கத்தக்கதாகத் தெரிந்துக் கொள்ளப் பட்டுள்ள சபையானது கூட, இந்தக் கடைசி நாட்களில் ஒரு செய்தியாளனை பெற்றுக்கொள்ளப் போகின்றது. 54அங்கே நடந்துக் கொண்டிருப்பது என்ன? இங்கே நடந்துக் கொண்டிருப்பதும் என்ன? இயேசு கூறினதுடன் அதை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த விதமாக நம்மிடமாக அமைந்திருக்கும் காரியமானது சரித்திரத்திலேயே இதற்கு முன்னர் நடந்ததில்லை. ஆனால் செய்யப்படப்போகின்ற அந்த அதே அடையாளங்கள்! நண்பர்களே, நீங்கள் அதை உணருகிறீர்களா? நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த மணிநேரத்தை நீங்கள் அடையாளம் கண்டுக்கொள்கிறீர்களா? நாம் சற்று நம்முடைய கைகளைச் சிறிதுத் தட்டி, பியானோ கருவியை வாசித்து, இதை உச்சரித்துவிட்டு, அதற்கு குருடாகும் நிலையை அடையும் நிலைக்குள்ளாகும் வரைக்குமாக நாம் வார்த்தையை விட்டுக் கடந்துச் சென்று விடுகின்றோமா? நிச்சயமாக நாம் அப்படியாக அல்ல. நாம் வாழ்ந்துக் கொண் டிருக்கின்ற இந்த மணி நேரத்தை நாம் அடையாளம் கண்டுக்கொள்வோமாக. பேதுரு, நாத்தான், இல்லை .... நாத்தான்வேல், மற்றும் அந்த ஸ்திரீயானவள், அவர்கள் அதை அடையாளம் கண்டுக் கொண்டனரே, அவர்கள், அவர்கள் - அவர்கள் அவருடைய அடையாளத்தை, மேசியாவின் அடையாளத்தை அடையாளம் கண்டுக்கொண்டனர். இப்பொழுது நான் கூறிக்கொண்டிருக்கின்ற அந்த அதே காரியங்கள். அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரைக்குமாக, இயேசு கூறினார் . . . இப்பொழுது கவனியுங்கள், அவர் இப்பொழுதைய காலத்தைக் குறித்து மேற்கோள் கூறுகின்றார், ஒரு காலத்தைக்குறித்து அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக் கின்றார். எந்த ஒரு காலத்திலும் தேவன் தாமே தம்முடைய வார்த்தையாகிய தம்முடைய செய்தியை அனுப்பி அதை அந்த காலத்திற்கு அடையாளப்படுத்திக் காண்பிக்கையில்; அதை விசுவாசித்த மக்களுக்கு அது ஒரு மகத்தான காலமாக இருந்தது; செய்தியை விசுவாசியாத மக்கள் குழப்பத்திற் குள்ளாகச் சென்றனர். அது எப்பொழுதுமே அந்த விதமாகத் தான் இருந்து வருகின்றது. 55இயேசுவின் நாட்களிலே அதே காரியம் தான் இருந்தது. இப்பொழுது இங்கே அவர் நின்றுக்கொண்டிருப்பதைக் கவனியுங்கள். அவர், “யோனாவின் நாட்களில் நடந்தது போல, யோனாவின்; யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் அந்தவிதமாக இருக்கவேண்டும்” என்று கூறினார். அவர், “இந்த பொல்லாத விபச்சாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்” என்று கூறினார். அவர் என்ன செய்துக்கொண்டிருந்தார் என்று நான் நினைப்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தார், “ஒரு பொல்லாத விபச்சாரச் சந்ததியார்.” ஆண்புணர்ச்சிக்காரரும், தாறுமாறும் இருக்கின்ற ஒரு பலவீனமான மற்றும் விபச்சாரச் சந்ததியில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை சரியான மனநிலையைக் கொண்டிருக்கும் எந்த ஒரு மனிதனாலும் மறுதலிக்க முடியுமா என்று நான் வியக்கின்றேன்! அமெரிக்காவில் விவாகரத்து எண்ணிக்கையானது உலகத்திலுள்ள எந்த ஒரு தேசத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றது. முழு உலகமே அதன் ஒழுங்கற்ற நிலைக்குள்ளாகச் சென்று விட்டது. நான்கில் மூன்று பேர் ஏறக்குறைய விவாகரத்து செய்துள்ள நிலையில் உள்ளனர்; விவாகம் செய்து பத்து வருடங்களில் எல்லாவற்றையும் முடிவுறச் செய்கின்றனர். பாருங்கள்? அதைக்குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள்! விவாகரத்து செய்கின்றனர், மறுபடியுமாக விவாகம் செய்துக்கொள்கின்றனர், விவாகரத்து செய்கின்றனர், மறுபடியும் விவாகம் செய்துக் கொள்கின்றனர். ''அவர்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்.“ நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த மணி வேளையைப் பாருங்கள். எப்பொழுதாவது இவ்விதமான ஒரு ஒழுங்கற்ற குழப்பநிலையானது இதற்கு முன்னதாக இருந்துள்ளதா? 56“இந்தப் பொல்லாத விபச்சாரச்சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள், கவனியுங்கள், அவர்கள் ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.” என்ன? இந்த சந்ததியார், “யோனா இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.” அந்த பொல்லாத விபச்சார சந்ததியார் எதைப்பெற்றுக் கொள்வார்கள்? உயிர்த்தெழுதலின் அடையாளத்தை. ஆகவே இன்றைக்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இன்னுமாக இயேசு கிறிஸ்துவை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில், நம் மத்தியில் நின்றுக் கொண்டு அன்றைக்கு அவர் செய்த காரியங்களையும் மற்றும் அவர் செய்யப்போவதாக வாக்குத்தத்தம் செய்துள்ள காரியங்களையும் செய்வதை நாம் காண்கிறோம். “இந்த பொல்லாத விபச்சாரச் சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள், எப்பொழுதுமே அவர்களுக்கு, 'இந்தக் காரியத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றும் உங்களால் இதைச் செய்யமுடியுமா, அதைச் செய்யமுடியுமா' என்று காண்பது அவசியமாயுள்ளது. அவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள், உயிர்த்தெழுதலின் அடையாளத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்; நம் மத்தியில் வாசம் பண்ணிக்கொண்டிருக்கின்ற வெளிப்படுத்தப்பட்டுள்ள அந்த வார்த்தை. அவருடைய அந்த மகத்தான அடையாளத்திற்காக எவ்வளவாக தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர் களாக இருக்கின்றோம்! 57கவனியுங்கள். இயேசு அங்கே வேறே ஒன்றையும் அவர் மேற்கோள் காட்டுகின்றார். அவர், “தென் தேசத்து ராஜஸ்திரீ எழும்பும்போது” என்றார், அது சேபா நாட்டு ராஜஸ்திரீயாகும். இப்பொழுது இதைக் கூர்ந்து கவனியுங்கள். தென் தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள். கவனியுங்கள், சில நிமிடங்களுக்கு நாம் அதைக்குறித்து சற்று பேசுவோமாக. யோனாவைக் குறித்து நாம் வாசித்த அந்த அதே வேதாகமத்தை அவர் வாசித்துக்கொண்டிருந்தார். அவர் சாலொமோனைக் குறித்தும் வாசித்தார். இப்பொழுது, சாலொமோனின் காலம் வந்த போது, அவனிடமாக ஒரு ..... அவன் பகுத்தறிதலின் வரத்தைக் கொண்டிருந்தான். ஆகவே எல்லா மக்களும், அந்த முழு தேசமும் அதை விசுவாசித்தது. எல்லாரும் ஒரே இருதயத்துடனும் ஒரே மனதுடனும் இருந்தனர். எல்லாரும் அதை விசுவாசித்தனர். இன்றிரவு, எல்லாரும், முழு அமெரிக்காவும் தேவனிடமாகத் திரும்பி தேவனை விசுவாசிக்குமானால், நம்மிடையே இருக்கும் வெடி குண்டு பாதுகாப்பு பதுங்கு குழிகள் மற்றும் எல்லாக் காரியங்களைக் காட்டிலும் அது ஒரு மிகச்சிறந்த ஒரு பாதுகாப்பு உத்தரவாதம் ஆகும். 58சாலொமோனை யாருமே ஏமாற்ற முயலவில்லை. அவன் வரம் பெற்ற ஒரு மனிதனாக இருந்தபடியால் அவர்கள் அவனுக்கு பயந்திருந்தனர். மக்களும் அந்த விதமாகவே சாலொமோனை விசுவாசித்தனர், அவன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டவனாக இருந்தான், அதினால் தான் அவர்கள் அவனை தங்கள் ராஜாவாக ஆக்கினர். எல்லா தேசங்களும் அவர்களுக்கு பயந்திருந்தன; அவர்களுடைய இராணுவ பலத்தைக் கண்டல்ல, ஆனால் தேவன் அவர்களுடனே இருந்தார் என்பதினாலேயே. ஆகவே தன்னை ஒரு கிறிஸ்தவ தேசம் என்று கூறிக்கொள்கின்ற இந்த தேசமானது, எல்லாருமாக ஒன்று சேர்ந்து இந்த கடைசி நாட்களில் நமக்கென அளிக்கப்பட்டிருக் கின்ற இந்த மகத்தான வரத்தை, சபையின் மேல் இருக்கின்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை அப்படியே பற்றிக்கொள்ளு மானால், அப்படியாக அது செய்யுமானால் - சபை போதகத்தை அல்ல. தேவனுடைய ஆவியை! 'பராக்கிரமத் தினாலும் அல்ல, பலத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும்,“ என்று தேவன் சொல்லுகிறார். பரிசுத்த ஆவியானவர், இயேசு கிறிஸ்து ஆவியின் ரூபத்தில் ”நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக“ நம்மீது தங்கி, வார்த்தை இவ்விதமாகச் செய்யும் என்று அவர் கூறினவிதமாகவே இந்த வார்த்தையானது அப்படியாக ஜீவிக்கும்படிக்குச் செய்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது சற்றுக் கூர்ந்து கவனியுங்கள். 59ஓ, சாலொமோனைக் குறித்த செய்தியானது உலகம் முழுவதுமாகச் சென்றது! அந்த நாட்களிலே தொலைக்காட்சி, வானொலி போன்றவைகள் அவர்களிடமாகக் கிடையாது. ஆகவே அது ஒருவருக்கொருவராக ஒருவர் வாயிலிருந்து மற்றவர் காதுக்குச் சென்றது. சிறிது காலம் கழித்து அந்த மகத்தான ஒட்டகங்கள் கூட்டம் அங்கே அந்த சஹாரா பாலைவனத்தைக் கடந்து வந்தது, அந்த தென் தேசத்து ராஜஸ்திரீ வசித்த தேசமாகிய பாலஸ்தீனாவிலிருந்து மூன்று மாத பிரயாணமாகும். ஆகவே விசுவாசமானது (எதினாலே?) கேள்வியினாலே வரும், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினாலே வரும். ஆகவே அங்கே நடந்துக் கொண்டிருந்த இந்த மகத்தான கூட்டத்தைக் குறித்து அவள் கேள்விப் பட்டிருந்தாள், அந்த வழியாக பிரயாணிகள் ஒட்டகங்களில் கடந்து வந்த ஒவ்வொரு சமயத்திலும் அவள் அவர்களிடமாக, “நீங்கள் பாலஸ்தீனா வழியாக வந்தீர்களா?” என்று கேட்பாள். “ஆமாம்.'' “ஓ, அந்தக் காரியத்தைக் குறித்து என்ன?” “ஓ, அது - அது எந்த ஒரு காரியத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும்! அந்த விதமான ஒரு இருதய நினைவுகள் பகுத்தறியுதலை நீங்கள் கண்டிருக்கவே முடியாது. அது ஒரு தேவன் அங்கே உட்கார்ந்திருப்பதைப் போன்றிருக்கின்றது. அவர்களுடைய தேவன் சாலொமோன் என்னும் ஒரு மனிதனுக்குள்ளாக தம்மை பிரதி நிதித்துவமாக்கியிருக் கின்றார்.” 60சரி, “விசுவாசம் கேள்வியினாலே வரும்.'' அந்தச் சிறிய ராஜஸ்திரீயின் இருதயமானது அங்கே சென்று அது என்னவா யிருக்கும் என்று காணவேண்டுமென்று பெருவிருப்பங்கொள்ள ஆரம்பித்தது. பாருங்கள். அவள் ஜீவனுக்கென்று நியமிக்கப் பட்டவளாயிருந்தாள். இப்பொழுது கவனியுங்கள், அவள் ஒரு அஞ்ஞானியாக இருந்தபடியால் அவள் செய்யவேண்டிய முதலாவது காரியம் என்னவாக இருந்ததென்றால் அவள் அங்கே செல்வதற்காக தன்னுடைய மதத்தின் பூஜாரியிடம் அனுமதி பெறுவதே யாகும். ஆகவே அவள் தன்னுடைய ஆசாரியனிடமாகச் சென்று “பரிசுத்த பிதாவே, அங்கே பாலஸ்தீனாவில் ஒரு எழுப்புதலை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்று நான் கேள்விப் படுகின்றேன். ஆகவே நானே அங்கு சென்று அது என்னவென்று பார்க்கும்படிக்கு எனக்கு நீர் அனுமதியளிக்க வேண்டும்” என்று கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. “அப்படியா, என் மகளே, நீ ஒரு போதும் ஏதோ ஒரு ..... குழப்பத்திற்குள்ளாக சென்று அகப்பட்டுக்கொள்ளாதே. ஆம், அந்த எழுப்புதல் கூட்டத்திற்கு நாம் ஒத்துழைப்பு அளிப்ப தில்லை என்பது உண்மை தான், ஆகவே நீ - நீ அங்கே போகக் கூடாது. சற்று கவனி, அது ஒரு அர்த்தமற்ற மக்கள் கூட்டமே தவிர வேறொன்றுமல்ல. அதனுடன் - அதனுடன் அர்த்த முள்ளது என்று கூறிக்கொள்வதற்கு எதுவுமே கிடையாது. அந்த மக்கள் தாங்கள் சிவந்த சமுத்திரத்தினூடாகக் கடந்து வந்துள்ளனர் என்றும் இதை மற்றும் அதை செய்துள்ளனர் என்றும் உரிமை கோரிக்கொள்கின்றனர். அதனுடன் எதுவுமே கிடையாது. அந்த விதமான ஒன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்றால், சரியாக அது இங்கே நம்முடைய சபையில் தான் நடக்க வேண்டும். நாம் இன்னுமாக அஞ்ஞானிகளைக் கொண்டுள்ளோம். 61அவள் பெருவிருப்பங்கொள்ள ஆரம்பித்தாள் என்று நாம் பார்த்தோம். அவள் “இப்பொழுது சற்று கவனியுங்கள்,” என்றாள். மேலும் அவள், “மக்கள் என்னிடமாக ”அவர் களுடைய தேவனானவர் ஒரு மானிட மனிதனுக் குள்ளாக பிரதிநிதித்துவப்பட்டிருக்கின்றார். ஆகவே அந்த மனிதனின் ஞானமானது எந்த ஒன்றைக் காட்டிலும் அப்பாற்பட்ட ஒன்றாயுள்ளது. அந்த மனிதன் இருதயத்தின் நினைவைப் பகுத்தறிந்துக் கூறும் காரியமானது அற்புதமான ஒன்றாக உள்ளது' என்று கூறுகின்றனரே,“ என்று கூறினாள். “ஓ, அதனுடன் ஒன்றுமே கிடையாது.” அதற்கு அவள், “ஆனால் நான் - நான் சற்று ....” “சரி, சற்று கவனி, நீ ஒரு ராணியாவாய், அந்தவிதமான மக்களுடன் நீ தொடர்புடையவளாக இருக்கக்கூடாது. ஆம், நீ அதைச் செய்யவே கூடாது. அந்த மக்கள் கூட்டம் அதிதீவிர மதபக்தி கொண்டவர்கள் என முழு உலகமே அறிந்திருக் கின்றது. ஆகவே நீ அங்கே செல்லக்கூடாது.” ஆனால் நீங்கள் பாருங்கள், தேவன் மனித இருதயத்துடன் செயல்படுவாரானால் அதை நிறுத்த எந்த ஒன்றுமே கிடையாது. ஒரு மனிதன் உண்மையாகவே தேவனுக்கென பசி கொள்வானானால் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ, மேய்ப்பரோ, எந்த ஒன்றினாலேயும் அவனை நிறுத்தவே முடியாது. எப்படியாயினும் அவர்கள் செல்லத்தான் போகிறார்கள். ஆகவே, அந்த ராஜஸ்திரீ செல்ல ஆயத்த மானாள், எல்லாவற்றையும் ஆயத்தம் செய்யத் தயாரானாள். 62அப்போது அந்த மதகுரு, “சரி, நான் உனக்கு சற்று ... நான் - நான் உன்னை எங்களுடைய ஐக்கியத்திலிருந்து புறம்பாக்கி வெளியேற்ற வேண்டியிருக்கும்” என்றான். “சரி, நீங்கள் அதை தாராளமாகச் செய்யலாம். எப்படியாயினும் நான் அங்கே செல்லப்போகிறேன். நானே அங்கே சென்று அது என்னவென்று நானே பார்த்து அறிந்துக் கொள்ளப்போகிறேன்.” அவள் அந்த சுருள்களை எல்லாம் வரவழைத்து யெகோவா எப்படிப்பட்டவராக இருக்கவேண்டுமென்றும், அவருடைய தீர்க்கதரிசிகளைக் குறித்தும், தீர்க்கதரிசி என்னவெல்லாம் செய்வான் என்றும், தேனுடைய வார்த்தை எப்படி வெளிப்படுத்தப்படும் என்றும், வார்த்தை மானிட மாம்சத்திற்குள்ளாக திரையிடப்பட்டு பிரதிநிதித்துவப் படுத்தப்படும் போது காரியங்கள் எப்படியாக இருக்கும் என்றும், அது என்ன செய்யும் என்றும் அவள் வாசித்தாள், அவள் எல்லாக் காரியங்களையும் வாசித்தாள். அந்த மதகுரு, “இதோ பார், நம்முடைய புத்தகம் இந்த விதமாகக் கூறுகின்றது” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகின்றது. “ஆம், இதோ பாருங்கள் நான். என்னுடைய பழைய - பழைய - முப்பாட்டியானவள் அந்த அதே விக்கிரகங்கள் முன்பாக நின்றாள். அவள் அதற்கு முன்பாக நின்று ஒவ்வொரு நாளும் ஜெபத்தை உச்சரித்தாள். ஆனால் எந்த ஒரு அசைவோ, ஒரு சிறு வாய் அசைவோ அல்லது எந்த ஒரு காரியமோ அந்த விக்கிரகங்களிடம் இருந்தே தேயில்லை. இந்த பழைய ஆராதனை முறையை செய்து செய்து மிகவுமாக களைத்துப் போயிருக்கின்றேன். ஆகவே ஜீவிக்கின்ற தேவனானவர் இருக்கின்றாரா என்று நான் சென்று காண விரும்புகிறேன்,” அந்தவிதமான ராஜஸ்திரீகள் அநேகம் பேர் இன்று நம்மிடம் இல்லாதிருப்பது மிகவுமாக குறைபாடுடைய ஒன்றாகும். 63ஆகவே அவள் செல்வதற்கு தயாரானாள். இப்பொழுது அவள் சென்றுத்தானாக வேண்டும் என்கின்ற ஒரு நிலைக்கு அவள் வந்தாள், ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அவளுக்கு அது மிக எளிதில் மேற்கொள்ளமுடியாத ஒரு காரியமாகும். உங்களுக்கும் எனக்கும் சுலபமானதாக அது இருப்பது போல அது அவளுக்கு சுலபமான ஒரு காரியமல்ல. இப்பொழுது அவள் என்ன செய்யவேண்டியவளாக இருந்தாள் என்று சற்று கவனியுங்கள். நான் கூறவேண்டியுள்ள இன்னொரு காரியம் இதோ, இதைச் சொல்லாமல் விட்டுவிட எனக்கு மனதில்லை. அவள், “நான் அங்கே செல்லப்போகிறேன், ஆகவே நான் பணம் எடுத்துச் செல்லப்போகிறேன், நான் சில வெகுமதிகளை எடுத்துச் செல்லப்போகிறேன். அது உண்மையான ஒன்றாக இருக்குமென்றால் நான் அதனுடைய தேவைகளை சந்தித்து அதை ஆதரிக்க விரும்புகிறேன். அது உண்மையான ஒன்றாக இல்லாதிருக்குமானால், அப்பொழுது நான் எனது பணத்தை திரும்பக் கொண்டு வந்துவிடலாம்” என்று கூறினாள். அந்த ராஜஸ்திரீபெந்தெகொஸ்தேயினருக்கு உபதேசிக்கக் கூடும். ஆம், ஐயா, தெய்வீக சுகமளித்தலை கேலி பரியாசம் செய்து ஏளனம் செய்யும் காரியங்களை பண உதவியினால் ஆதரிப்பது, ஆம், உங்கள் சபையின் தேவைகளைச் சந்தித்து ஆதரிப்பதற்கு பதிலாக வானொலி நிகழ்ச்சிகளுக்கு பண பொருளுதவி செய்து நீங்கள் ஆதரிக்கிறீர்கள், ஆம், அது சரியே, நீங்கள் விசுவாசிக்கின்ற காரியங்களின் பேரிலேயே நீங்கள் கேலி பரியாசம் செய்து சிரிக்கின்றீர்களே. ஆனால் அவளோ, “நான் அதை எடுத்துச் செல்வேன். அந்தக் காரியம் சரியான ஒன்றாக இல்லாதிருக்குமானால் அதை நான் திரும்பக் கொண்டு வந்துவிடுவேன்” என்றாள். 64இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அங்கே இருந்த இந்த எல்லா செல்வங்களையும் அந்த ஒட்டகங்களின் மேல் ஏற்றிக்கொண்டு சென்றாள். ஆகவே இப்பொழுது இதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே இருந்த இஸ்மவேலர் ஒட்டகங்களில் சவாரி செய்கின்ற பாலைவனக் கொள்ளைக்காரர்கள் ஆவர். இந்தக் குழுவினரைத் தாக்குவது என்பது இஸ்மவேலருக்கு எவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருந்திருக்கும், இந்த ராஜஸ்திரீயும் அவளுடன் சென்ற சில அண்ணகர்களும் அந்த இஸ்மவேலருக்கு மிகவும் எளிதான வேட்டைப் பொருளாக இருந்திருப்பர், அவர்களை மிக எளிதாகக் கொன்றுபோட்டு அவர்களுடைய பணத்தை எடுத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் அதைக்குறித்து ஏதோ ஒன்று இருந்தது, உண்மையாக நீங்கள் செல்லவேண்டுமென்ற உறுதியைக் கொண்டிருந்து, தேவன் தம்மைத்தாமே வெளிப்படுத்திக் கொண்டிருந்து, கிறிஸ்துவைக் காணவேண்டுமென்று நீங்கள் உறுதி கொண்டிருப்பீர்களானால், அப்பொழுது உங்களுக்கு முன்பாக எந்த ஒரு ஆபத்தும் இருக்காது. அதற்கு நீங்கள் எந்த ஒரு கவனத்தையும் செலுத்தாதீர்கள்! நீங்கள் மரிக்கப் போகிறீர்கள் என்று மருத்துவர்கள் கூறலாம், நீங்கள் அதன் மேல் ஒரு துளி கவனத்தைக் கூட செலுத்தவேண்டாம். நீங்கள் முன்னே தொடர்ந்து செல்ல தீவிரிப்பீர்களானால், அங்கே ஏதோ ஒன்று உள்ளதென்று உங்களுக்குத் தெரியும். 65அவளுடைய இருதயத்தின் ஆழத்தில் ஏதோ ஒன்று கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தது. அந்த தேவனில் விசுவாசம் கொண்டிருந்தது! (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.] . . . சஹாரா பாலைவனத்தில் மூன்று மாதம் பிரயாணம் செய்தாள். ஏசி பொருத்தப்பட்ட குளிர்சாதன வசதியுள்ள காடிலாக் காரில் அவள் செல்லவில்லை. இல்லவே இல்லை. சஹாரா பாலைவனத்தினூடாகக் கடந்துச் செல்ல அவளுக்கு மூன்று மாதங்களானது. ஒருக்கால் அவள் இரவில் பிரயாணித் திருப்பாள், பகலில் பாலைவனத்தில் இருந்த சோலைகளில் தங்கி சுருள்களை வாசித்திருப்பாள், அவள் வந்து சேருமட்டும் அவ்விதமாகச் செய்தாள். இப்பொழுது, அவள் இந்த கடைசி நாட்களில் நின்று இந்த சந்ததியின் மேல் குற்றஞ்சுமத்துவாள் என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை, ஏனெனில் அவர்களில் சிலர் நடந்து தெருவைத் தாண்டிச்செல்வதில்லை; ஆனால் அந்த பரிசுத்த ஆவியானவர், சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார். பாருங்கள்? அவள் இந்த கடைசி நாட்களில் எழும்பி இந்த சந்ததியின் மேல் குற்றஞ்சுமத்துவாள் என்பதில் வியப்பொன்றுமில்லை! 66கவனியுங்கள், முடிவில் அவள் வந்து சேர்ந்தாள். மற்ற மக்களைப் போல அவள் வரவில்லை, சில மக்கள் ஒரு முன்பின் தெரியவராத கூட்டத்திற்கு வருவதுண்டு. அவள் வந்து தன்னுடைய ஒட்டகங்களை நேராக அரண்மனை முற்றத்திற்குக் கொண்டுச் சென்று தன்னுடைய கூடாரங்களை அங்கு அமைத்தாள், அவள் உறுதிகொள்ளும் வரைக்குமாக அங்கே அவள் தங்கப் போகின்றாள். அநேக மக்கள் வருவார்கள், வந்து சுமார் ஐந்து நிமிடங்களுக்கு உட்காருவார்கள். அந்த சுவிசேஷகனோ அல்லது யாராவதொருவர் வந்து அவள் - அவள் நினைப்பதற்கு முரணான ஒன்றைக் கூறுவார்களானால், அவளுடைய அல்லது அவளுடைய சபை உபதேசத்திற்கு முரணாக ஏதாவதொன்றைக் கூறுவார்களானால் உடனடியாக எழுந்து வெளியே சென்று விடுவார்கள். பாருங்கள், ஒரு ஒழுக்கப்பண்பைக் கூட கடை பிடிக்க மாட்டார்கள். அவள் எழும்பி இந்த சந்ததியின் மேல் குற்றஞ்சுமத்துவாள் என்பதில் வியப்பொன்றுமில்லை; ஆகவே அவள் உறுதிகொள்ளும் வரைக்குமாக அங்கு தங்கும்படிக்கு அவள் வந்திருந்தாள். 67167, அக்காலையின் முதல் ஆராதனையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது, எக்காளங்கள் எல்லாம் தொனிக்கையில், பாஸ்டர் சாலொமோன் வெளியே வந்தார். ஒருக்கால் அவள் கூட்டத்தின் பின்பகுதியில் பின்னாலே உட்கார்ந்திருந்திருப்பாள். அவள், “இப்பொழுது, நானே பார்ப்பேன். யெகோவா அப்படிப்பட்டவராகத் தான் இருக்கவேண்டுமென்று எனக்குத் தெரியும். மனிதர்கள் அப்படி இப்படி என்று கூறிக்கொள்ளலாம், ஆனால் நானே அது என்னவென்று பார்த்து அறிந்துக்கொள்ளப்போகிறேன்” என்று கூறினாள். ஆகவே அந்த நாளிலே அவள் அங்கே உட்கார்ந்திருந்தாள், அவள் அதை கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், மேடைக்கு ஒவ்வொருவரும் வருவதை அவள் பார்த்தாள். அங்கு நடந்த இருதயத்தின் நினைவுகள் பகுத்தறிந்து கூறப்படுதலைக் கண்டாள். முடிவில், அவளுடைய ஜெப அட்டையானது அழைக்கப்பட்டிருக்கும், ஒருவேளை அப்படியாக இருந்திருக் காது, ஆனால் அவள் சாலோமோனுக்கு முன்பாக வரவேண்டிய தருணமானது வந்தது. ''அவள் சாலோமோனுக்கு முன்பாக வந்து நின்றபோது அவளுடைய மனதின் எல்லா இரகசியங் களை சாலொமோனுக்கு தேவன் தெரியப் படுத்தினார். ஒன்றாகிலும் மறைபொருளாயிருக்கவில்லை“ என்று வேதாகமம் கூறுகின்றது. பிறகு அவளுடைய காரியங்களின் பேரில் சில அற்புதங்களும் செய்யப்பட்டன. பிறகு அவள் ஜனக்கூட்டத்தினிடமாகத் திரும்பி, “இக்காரியங்களைக் குறித்து நான் கேட்ட செய்தியானது மெய்யானதே, நான் கேள்விப்பட்டதைக் காட்டிலும் இன்னும் மகத்தானதாக இது இருக்கின்றது” என்று கூறினாள். பாருங்கள்? ஓ, அவளுக்குள்ளாக இன்னுமாக சிறிது ஜீவன் கூட மீதியாயிருக்கவில்லை , அவளுடைய மூச்சு அவளிடமிருந்து எடுக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் தன்னைக் குறித்து ஒன்றுமே அறிந்திருந்திராத ஒரு மனிதன், முன்பின் தெரியாத ஒரு அந்நியன் அவள் அறிந்துக் கொள்ளவேண்டுமென்று விரும்பியிருந்த எல்லாக் காரியங்களையும் அவளுக்கு வெளிப் படுத்தினான். 68ஓ, சாலொமோனிலும் மிக மிகுதியானவராகிய இயேசு அங்கே நின்றிருந்தார்! அவர் சரீரப்பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமாக இருந்தார். கன்னிப்பிறப்பான தேவனுடைய குமாரனாக அவர் இருந்தார். அவர் தம்மைத்தாமே மறைத்து வெளியாக்கினார், யெகோவா தம்மைத் தாமே மாம்சத்தில் வெளிப்படுத்திக்கொண்டார். ஆகவே, அங்கே அவர் அந்த பரிபூரணத்திலே நின்றுக் கொண்டிருந்தார், ஆனால் அவர்களோ தாங்கள் அவரை விசுவாசிக்கமாட்டோம் என்று கூறினர். அவரது காரியமானது இன்னும் மகத்தான பகுதறியுதலாக இருந்தது. பாருங்கள், அவர் சாலொமோன் மற்றும் தாவீது மற்றும் ஏனைய மற்ற எல்லாருமே சேர்ந்து ஒருங்கே அவருக்குள்ளாக சங்கமித்தனர். எல்லாத் தீர்க்க தரிசிகளும் சாலொமோனிலும் பெரியவராகிய அவருக்குள்ளாக சங்கமித்து நிறைவாகினர். ஆம் இன்னுமாக அந்த நாளிலும் கூட அவர், “நீங்கள் எனக்கு எதிராக வார்த்தைகளைச் சொல்வீர்களானால், நான் உங்களை மன்னிப்பேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும் போது, அது இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் அது மிக மகத்தானதாக இருக்கும், ஆகவே அதிக ஆக்கினைக் குள்ளாக்கப்படுவீர்கள்” என்று கூறினார். ஆகவே, இதோ நாம் இங்கு நின்றுக் கொண்டு அந்த அதே தேவன் இன்றைக்கு அந்த அதே காரியத்தைச் செய்வதை நாம் காண்கின்றோம்! அந்த ராஜஸ்திரீ நியாயத்தீர்ப்பின் நாளிலே எழுந்து இந்த சந்ததியை குற்றஞ்சாட்டுவாள், ஏனென்றால் அவள் மனந்திரும்பினாள், தேவன் பேரில் விசுவாசம் வைத்தாள். உண்மையான ஒன்றை அவள் கண்டிருந்தாள். 69இன்றைக்குள்ள தொல்லை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, மக்கள், அநேக மக்கள் சபையைச் சார்ந்துக் கொண்டு, சபைக்கு மாத்திரம் சென்று ஒரு சபை போதகத்தை மாத்திரமே கொண்டிருக்கின்றனர். பாருங்கள், அவர்கள் மிகவுமாக பொய்யையும், வெறும் சிலைகளையும் மற்றும் பெரிய அருமையான கட்டிடங்களை மாத்திரமே கண்டுள்ளனர். ஆகவே-ஆகவே, நாம்தாமே, அந்த ஒரு விதமான வெறி யெழுச்சிக் குள்ளாக ஒரு போதும் செல்லவே வேண்டாம். பாருங்கள். தேவன் ஒருபோதும் பெரிய கட்டிடங்களில் வாசம் செய்யமாட்டார்; அவர் உங்களுடைய இருதயத்தில் தான் வாசம் செய்கின்றார். பாருங்கள், தேவன் ஒரு போதும் அறிவுத் திறனுடையார் கல்விப்பயிற்றலில் வாசம்பண்ணுவதில்லை ; அவர் அதற்கு அப்பாற்பட்டு வெகு தூரத்திலே இருக்கின்றார். அவர் உங்களுடைய இருதயத்தில் தாழ்மையில் வாசம் செய்கின்றார். அவர் தம்முடைய வார்த்தையில் வாசம் பண்ணு கிறார், மேலும் அவருடைய வார்த்தை தான் உங்களுடைய இருதயத்துக்குள்ளாக வந்து அது தன்னை ஒளிவின்றி வெளியாக்கி பிரஸ்தாபப்படுத்துகிறது, அறிக்கை செய்கின்றது. அவர் தம்முடைய சொந்த வார்த்தையை உங்கள் மூலமாக வியாக்கியானம் செய்கின்றார். அவரால் தம் கரத்தில் கொண்டிருக்க முடிகின்ற ஒருவனை அவர் கண்டுபிடிக்க முயல்கின்றார். ஏனென்றால் அவர் தாம் இன்னுமாக தேவனாக இருக்கின்றார் என்பதை காண்பிக்கும்படிக்கு ஏதுவாக அப்படி செய்கின்றார். பாருங்கள்? அவர் இன்னுமாக தேவனாக இருக்கின்றார், தம்மால் பேச முடிகின்ற ஒரு மனிதனை தம் வசமாக பெற்றுக்கொள்வாரானால் அவர் அப்படியாக அதைச் செய்வார். பெரும்பாடுள்ள இன்னொரு ஸ்திரீயை பெறுவாரானால், அந்த அதே காரியத்தை அவராலே பேச முடியும். அதே காரியத்தை இன்னுமாக அவராலே செய்ய முடியும், தம்மைத் தெரியப்படுத்துதல், தம்மை மெய்மை யாக்கி பிரஸ்தாபப்படுத்துதலைச் செய்ய முடியும். நாம் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கின்றோம். அதை அடையாளம் கண்டு கொள்வதில்லை. 70ஒரு சிறு சம்பவத்தை அது எனக்கு நினைவுப்படுத்துகிறது. நான் அதை ஒரு முறை உங்களிடமாகக் கூறியிருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. இதைக் கூறுவது இப்பொழுது பொருத்தமாக இருக்கும். நீங்களெல்லாரும் அறிந்துள்ளபடி, நான் - நான் வேட்டையாடுவதுண்டு, நான் அங்கே மேலே மேற்கு காடுகளில் இருந்தேன், எல்லா நேரத்திலும் வேட்டை யாடுவதற்கு வழக்கமாக அங்கே செல்வேன். அங்கே பெர்ட் கால் என்னும் பெயரைக் கொண்ட ஒரு நண்பன் எனக்கு இருந்தான். ஒரு பாதி இந்தியனாக இருந்த அவன் ஒரு அருமையான வேட்டைக்காரன் ஆவான். அவனைக் குறித்து எந்த ஒரு கவலையும் கொள்ளத் தேவையில்லை, அக்காட்டில் அவன் தொலைந்து போகவே மாட்டான். ஆகவே நாங்கள் உண்மையாகவே மிகவுமாக நண்பர்களாக இருந்தோம், ஆனால் நான் கண்டதிலேயே இருதயத்தில் மிகவும் கொடிதான ஒருவன் என்றால் அது அவனாகத்தான் இருந்தது. அவனிடம் இருதயம் என்பது கிடையவே கிடையாது. அவன் சிறு மான் குட்டிகளை சுடுவது வழக்கம், எனக்கு வருத்தம் உண்டாக வேண்டும் என்பதற்காகவே அந்த சிறு குட்டிமான்களை சுடுவான், அப்பொழுது அவன், ''ஓ பிரசங்கிகளாகிய நீங்கள் கோழிக்குஞ்சு இருதயம் போல மிகவும் இளகின இருதயம் படைத்தவர்கள். பில்லி, நீங்கள் மாத்திரம் போதகராயிராமல் இருந்தால் மிகச்சிறந்த ஒரு வேட்டைக்காரராக இருந்திருப்பீர்“ என்று கூறுவான். அதற்கு நான், “பெர்ட், அது கோழிக்குஞ்சு இருதயம் என்றல்ல” என்றேன். இப்பொழுதும் மான் குட்டியைக் கொல்லலாம் என்று சட்டம் கூறியிருக்குமானால், அதைக் கொல்வதனால் தவறொன்றுமில்லை. ஆபிரகாம் ஒரு கன்றுக்குட்டியைக் கொன்று அதைக்கொண்டு தேவனை போஷித்தான். அது எந்த பாலினத்தைச் சார்ந்த ஒன்று அல்லது அது எவ்வளவு பெரியது என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் அப்படியாக தீமை விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே அவன் அந்த சிறு மான் குட்டிகளை சுட்டுக் கொன்று விட்டு சிரிப்பான், அவ்விதம் அவன் செய்வதைக் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்பதனாலே அவன் சிரிப்பான். ஆகவே, இப்பொழுதும் அவன் - அவன் அவ்விதமாகச் செய்தான். 71ஒரு குறிப்பிட்ட வருடத்திலே நான் அங்கே மேலே சென்றேன். அவன் ஒரு சிறு மான் குட்டி தன் தாய் மானை எப்படியாக சத்தமிட்டுக் கூப்பிடுகிறதோ அதே போன்று சத்தத்தைக் கொடுக்கும் ஒரு சிறு ஊதலை, தன் வாயினால் ஊதும் அந்த ஊதலை செய்யும் முறையை அவன் கண்டுபிடித்து அதைச் செய்து எடுத்து வந்திருந்தான். ஆகவே அவன் “ஹே, பில்லி, இக்காலை நாம் வேட்டையை ஆரம்பிக்கும் முன்னர் நான் வைத்திருக்கும் ஒன்றை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன்” என்றான். அவன் அதை எனக்குக் காண்பித்தான். நான், “பெர்ட், அதைப் போன்ற ஒன்றை நீ உபயோகிக்கக் கூடாது” என்றேன். அவன் “ஓ. நீங்கள் சற்றுப் பேசாமலிருங்கள்” என்றான். அவனுக்கு பல்லியின் கண்களைப் போன்ற கண்கள் இருந்தது. நீங்கள் அறிந்துள்ளபடியே, இந்த பெண்களில் சிலர் தங்கள் கண்களுக்கு வர்ணம் தீட்டி வைத்துக்கொள்வது போல அவனுடைய கண்களும் இருந்தன. அவன் தன் பல்லியின் கண்களைப் போன்றிருந்த கண்களைக் கொண்டு என்னை நோக்கிப்பார்த்தான், அந்தக்கண், அது ஏறக்குறைய என்னை பயங்கொள்ளச் செய்யும் என்று உங்களுக்குத் தெரியுமா. அப்பொழுது - அப்பொழுது நான், “பெர்ட், நீ அதைச் செய்யாதே” என்றேன். அதற்கு அவன், “ஓ, கோழிக்குஞ்சு இருதயம் கொண்டுள்ள பிரசங்கிகளே!” என்றான். 72ஆகவே நாங்கள் - நாங்கள் அங்கே ...அப்பொழுது மேலே சிறிது தாமதமாக நான் சென்றேன். அங்கே இருந்த அந்த வடக்கு வெள்ளை வால் ...... இங்கே இருக்கும் உங்கள் பிராந்தியத்தை சேர்ந்த மேற்கு வட அமெரிக்க மியூல் மான், அது நேராக உங்கள் முன்னால் வந்து நிற்கும், ஆனால் அங்கே இருந்த மான்கள் அப்படிப்பட்டவைகளல்ல, அது துப்பாக்கி யால் சுடப்பட்டாலும் அது ஒரு ... எந்த நிலையில் இருந்தாலும் தப்பித்துக்கொள்ளும். மாயாஜால வித்தைக்காரனான ஹுடினியைக் குறித்து நீங்கள் கூறுகிறீர்கள். (Houdini, ஹுடினி என்பவன் ஒரு அமெரிக்க மந்திரவாதி ஆவான், அவனைக் கயிற்றினால் கட்டினாலும், கைவிலங்கிடப்பட்டாலும், பூட்டப்பட்டிருக்கும் அறையில் அடைத்துப் போட்டாலும் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் மாயாஜால வித்தை செய்பவன் ஆவான்-தமிழாக்கியோன்) ஆனால் அந்த மந்திரவாதியாகிய ஹூடினி, அந்த மான்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்த மான்கள் ஓடி மறையும் வேகத்தைப் பார்க்கும் போது அவன் அவைகளுக்கு முன்பாக ஒரு கத்துக் குட்டியாக இருப்பான், ஆகவே நேரமானது கடந்துச் சென்று விட்டிருந்தது. அவைகளை நோக்கித் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. ஆகவே அந்த மான்கள் அங்கே மறைந்து ஒளிந்துக்கொண்டிருந்தன, இரவிலே நிலவு வெளிச்சத்தில் ஆகாரம் தின்று பகலில் படுத்துக்கிடந்தன. நாங்கள் மேலே உள்ள அந்த ஓல்ட் ஜெபெர்சன் நாட்ச், இடத்திற்கு நடந்து மேலேறிச் சென்று, நேராக கீழே மவுன்ட் வாஷிங்டனிற்கு சென்றோம். அங்கே தரையிலிருந்து சுமார் ஆறு அங்குலம் உயரம் அளவிற்கு பனி இருந்தது. விலங்குகளின் கால் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு சீதோஷணமாக இருந்தது; ஆனால் ஒரு காலடித்தடத்தைக் கூட நாங்கள் காணவில்லை. அப்போது அவன், “பில்லி, நீங்கள் என்ன நினைக் கிறீர்கள்? என்றான். 73நான், ''நீ அந்த இயந்திர துப்பாக்கியால் சுடுவதால் அவைகளெல்லாம் பயந்து ஓடும்படிக்குச் செய்து விட்டாய்“ என்றேன். ஆகவே, நாங்கள் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந் தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு சுமார் பதினொன்று மணியானது. நாங்கள் எப்பொழுதும் ஒரு பானத்தின் தட்ப வெப்பநிலையைக் காக்கும் தெர்மாஸ் பாட்டில்கள் நிரம்ப சூடான சாக்லெட் பானம் வைத்துக்கொண்டிருப்போம். உங்களுக்கு சிறிது காயம் படுமானால் அல்லது வேறொன்று நிகழுமானால், அப்பானம் மற்றும் ஒரு சாண்ட்விச் சிறிது பலத்தைத் தரும். ஆகவே நேரம் சுமார் பதினொன்று அல்லது பதினொன்றரை மணியானது என்று நான் நினைக்கின்றேன். பிறகு இந்த அரங்கத்தைப் போன்றளவில் அல்லது இந்த மரப்பொருள் இல்லாத கட்டிட அளவில் இருந்த ஒரு வெட்ட வெளிக்கு வந்தடைந்தோம். ஆகவே அவன் சற்று உட்கார்ந் தான், தன்னுடைய துப்பாக்கியை மரத்திலே சாய்த்து நிறுத்தி வைத்து, அங்கே பின்னால் இருந்த இடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். அவன் தன்னுடைய தெர்மாஸ் பாட்டில்களை எடுக்கச் செல்கின்றான் போலும் என்று நான் நினைத்தேன். ஆகவே நான், “சரி, நாம் சாப்பிடலாம்” என்று நினைத்தேன். வழக்கமாக நாங்கள் அந்த மலையின் மீது சென்று சாப்பிட்டு விட்டு, ஒருவர் இந்த புறமாகவும், மற்றவர் மறுபுறமாகவும் சென்று பிறகு திரும்பி வருவோம். ஆகவே வழியை நாங்கள் மிக நன்றாக அறிந்திருந்தோம். எங்களுக்கு ஒரு மான் கிடைக்குமானால், அதை நாங்கள் தொங்கவிட்டு, பிறகு நாங்கள் சந்தித்து அந்த இடத்திற்குச் சென்று ஒவ்வொருவரும் வேட்டையாடி வைத்துள்ளதை அந்தந்த இடத்திற்குச் சென்று சேர்ந்துக்கொண்டு வருவோம். இவ்விதமாக ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொள்வோம். ஆகவே அவன் தன்னுடைய மத்திய ஆகாரத்தை சாப்பிடச்செல்கின்றான் என்று நினைத்தேன், பிறகு நாங்கள் பிரிந்து செல்வோம். ஏனென்றால் இருந்த இடம் மரங்களின் ஓரத்தில் அமைந்த இடமாக இருந்தது. ஆகவே நான்..... 74அவன் பின்னாலே சென்றான். அப்பொழுது நான் என்னுடைய தெர்மாஸ் பாட்டிலை எடுக்கச் சென்றேன். என்னுடைய சாக்லெட் பானத்தை எடுக்கச் சென்றேன், அவ்விதமாக அதை எடுக்க ஆரம்பித்தேன். அவன் தன்னுடைய ஊதலை தன்னுடைய சட்டைப்பையிலிருந்து கெரியே இழுத்தான், அதைக்கொண்டு அந்த விதமாக ஒரு பெரிய சத்தத்தை ஊதினான். பிறகு பல்லி போன்று காணப்பட்ட தன் கண்களைக் கொண்டு மறுபடியுமாக என்னை நோக்கிப் பார்த்தான், மறுபடியுமாக அந்த ஊதலை ஊதினான். அப்படியாக அவன் செய்தபோது, இந்தக்கட்டத்தைக் கடந்து அந்த புறத்தில் இருக்கும் தூரம் அளவிற்கு இருந்த தூரத்திலிருந்து ஒரு மகத்தான பெரிய “டோ, (doe),” பெண் மான் எழுந்து நின்றது. இப்பொழுது ஒருக்கால் நம்முடைய சகோதரிகளுக்குத் தெரியாமல் இருக்க வகையுண்டு. “டோ, doe என்றழைக்கப் படும் அது ஒரு பெண் மானாகும். ஆகவே, பாருங்கள், அந்த ஊதலானது ஒரு மான் குட்டியின் சத்தம் போல இருந்தது. அந்த மான் குட்டியின் சத்தம், ஆகவே இந்த பெரிய பெண் மான் எழுந்து நின்றது. நேரமானது சுமார் பகல் பதினொன்று மணியளவில் இருக்கும், மான் வேட்டையாடும் எந்த நபருக்கும் அந்த பகல் மணி வேளையானது மான் வேட்டையாடுவதற்கு உகந்த ஒரு நேரம் அல்ல என்று தெரியும். அந்த மான்கள் எல்லாம் படுத்துக் கிடக்கும். 75ஆகவே, அந்த மான் எழுந்து நின்றது. சுற்றுமுற்றும் பார்த்தது. என்னால் அந்த மானை மிகத்தெளிவாகப் பார்க்க முடிந்தது. அப்பொழுது அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான், மறுபடியுமாக அந்த ஊழலை ஊதினான். அப்பொழுது அந்த மான் திரும்பி ஓடுவதற்கு பதிலாக மறைவிலிருந்து சரியாக நேராக அந்த திறந்த வெளிக்கு நடந்து வந்தது. இப்பொழுது அவ்விதம் ஒரு மானானது செய்வது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். அவை அவ்விதமாகச் செய்யாது. எந்த ஒரு வேட்டைக்காரனுக்கும் அது தெரியும். அவைகள் அவ்விதமாக திறந்த வெளிக்கு வராது. அவ்விதமாக அவைகள் செய்யாது. ஆனால் அந்த பெண் மான் நேராக அங்கே வெளியே நடந்து வந்தது. ஏன்? அது ஒரு தாயாக இருந்தது. அங்கே ஒரு குட்டியின் சத்தம் கேட்டது. ஆம் அது மான் குட்டியின் சத்தம் போன்று இருந்தது. பாருங்கள். அந்தக்குட்டியை அப்பொழுது தான் அந்தத் தாய் மான் ஈன்றிருந்தது. அது ஒரு தாயாக இருந்தது. அப்பொழுது பெர்ட் கீழே நோக்கிப்பார்த்து, தன்னுடைய துப்பாக்கியின் போல்ட்டை பின்பாக இழுத்து, அந்த முப்பது - 0 - ஆறு துப்பாக்கியால் நேராக மானை சுடத் தயாரானான். ஒரே தோட்டாவில் அந்த மான் கொல்லப்படும். அவன் இந்த விதமாக துப்பாக்கியை சமமாக நிறுத்தி குறி பார்ப்பதை நான் கண்டேன். அது அந்த மானின் நேர்மையான இருதயத்தை இருபக்கமும் சுக்குநூறாக்கிவிடும் என்று எனக்குத் தெரியும், அது நூற்று எண்பது குன்றிமணியளவு எடையுள்ள மஷ்ரூம் தோட்டாவாகும். அப்பொழுது நான், “'பெர்ட், நீ எப்படி அதைச் செய்யலாம்? நீ அந்த தாய் மானை வெளியே அழைத்து, தன் குழந்தையைக் கண்டுபிடிக்க முயன்றுக் கொண்டிருக்கும் அந்த தாய் மானை சுட்டு அதன் இருதயத்தை வெளியே தள்ளும் அளவிற்கு உன்னால் அவ்வளவு கொடியவனாக எப்படி இருக்க முடிகின்றது? எப்படியாக நீ அந்த விதமாக மிகக் கொடூரமானவனாக இருக்க முடிகின்றது?” என்று நினைத்தேன். அவ்விதமாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவன் துப்பாக்கியினால் குறி பார்ப்பதை நான் பார்த்தேன். 76என்னால் அதைப் பார்க்க முடியவில்லை, என்னால் அதைப் பார்க்க முடியவில்லை. அது தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. நான் கோழிக்குஞ்சு இருதயம் போன்று இளகின மனம் படைத்தவன் என்று யூகிக்கின்றேன். நான் அப்படியே முதுகு புறமாகத் திரும்பிக் கொண்டேன். அப்போது நான், “தேவனே, அவன் எப்படி அதைச் செய்யலாம்? ஒரு மானிடன் இவ்வளவு நீசமானவனாக இருக்க முடியும், அந்த நேர்மையான பரிதாபத்திற்குரிய தாயின் இருதயத்தை அதனிடமிருந்து சுட்டு வெளியே தள்ளும் அளவிற்கு எப்படியாக முடியும்?” என்று நினைத்தேன். இப்பொழுது, அந்தத் தாய் மான் ஏதோ ஒரு நாடகமாடிக் கொண்டிருக்கவில்லை. அது ஒரு புறப்பகட்டு காட்சியைக் காட்டும்படிக்கு இருக்கவில்லை. அந்த மான் ஒரு தாய் ஆகும். அந்தத் தாய் மான் அந்த வேட்டைக்காரன் தன்னுடைய துப்பாக்கியினால் குறி பார்ப்பதைக் கண்டது, ஆனால் அது ஓடினதா? இல்லை, ஐயா, அதனுடைய குட்டி சிக்கலில் இருந்தது, ஆகவே அது தன்னுடைய குட்டியைக் கண்டு பிடிக்க முயன்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது நான் திரும்பிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தேன். நான், ''கர்த்தராகிய தேவனே, அவன் எப்படி அதைச் செய்யலாம்?“ என்றேன். நான் கவனித்தேன், காத்திருந்தேன், காத்திருந்தேன், காத்திருந்தேன், அந்தத் துப்பாக்கி சுடப்படவேயில்லை. அப்பொழுது நான் திரும்பினேன் அங்கே பார்த்தேன், அந்தத் துப்பாக்கி இந்த விதமாகக் கீழே சென்றுக் கொண்டிருந்தது. இனியும் அவனால் அந்தத் துப்பாக்கியைக் கையில் வைத்திருக்க முடியவில்லை. அவன் திரும்பினான், அவனுடைய பெரிய பல்லியின் கண்கள் மாறிப்போயிருந்தது, கண்ணீர் அவன் கன்னங்களில் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அவன் அந்தத் துப்பாக்கியை மண்திட்டின் மேல் வீசினான். அவன், “பில்லி, இது எனக்குப் போதும். நீங்கள் யாரைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தீரோ, அந்த இயேசுவினிடமாக என்னை வழி நடத்தும்” என்றான். 77சரியாக அந்த பனிகுவியலின் மேல் நான் அவனை கிறிஸ்துவினிடமாக வழி நடத்தினேன். ஏன்? அவன் உண்மையான ஒன்றைக் கண்டான். மெய்யான ஒன்றை அவன் பார்த்தான். “இவர்கள் பேசாதிருக்கும்படி ... பேசாம லிருந்தால், கல்லுகளே கூப்பிடும்.” அந்தத் தாய் மான் எந்த ஒரு காட்சியையும் அரங்கேற்றிக்கொண்டிருக்கவில்லை. அது ஒரு உண்மையான தாயாக மாத்திரம் இருந்தது. மரணமானாலும் சரி, அல்லது என்னவாயிருந்தாலும் சரி, அந்தத் தாய் மான் மரணத்துக்கு நேராக நின்றுக்கொண்டிருந்தது. எந்த நிமிடத்திலும் அந்தத் தோட்டாவானது தன்னுடைய இருதயத்தைப் பிளந்து நொறுக்கிப் போடும் என்று அறிந்திருந்தது. ஆனாலும் அது தன்னுடைய குட்டியைத் தேடிக் கொண்டிருந்தது. ஓ, அந்தத் தாய் மான் இருந்தது போல, நாமும்கூட அவ்வளவாக கிறிஸ்தவர்களாக இருப்போமானால்! ஏன்?அது ஒரு தாயாகவே பிறந்தது, ஒரு தாயாக இருக்கத்தான் அது பிறந்திருந்தது. நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கத் தான் பிறந்திருக்கின்றோம். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கத் தான் நாம் பிறந்திருக்கின்றோம். 78இப்பொழுது இங்கே உள்ள எத்தனைப் பேர், தங்கள் கரத்தை உயர்த்தினவர்களாக, “சகோதரன் பிரன்ஹாம், அந்தப்பெண்மான் எப்படியாக ஒரு தாயாக இருந்ததோ அதே போன்று உண்மையாகவே நானும் கூட அந்தவிதமான ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகின்றேன். என்னுடைய இருதயம் முழுவதுமாக கிறிஸ்துவினால் நிரப்பப்பட்டு, அதினால் நான்தானே எந்த ஒரு காரியத்திற்கும் எதிராக தைரியமாக நிற்க ஏதுவாயிருந்து, ஒரு தாயாகிய அந்த மான் எவ்விதமாக இருந்ததோ அதே போல நானும் ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருக்க நான் - நான் வாஞ்சிக் கின்றேன். அந்த விதமான ஒரு அனுபவம் மட்டுமே எனக்குத் தேவைப்படுகின்றது” என்று எத்தனைப் பேர் கூறுவீர்கள். உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லாவிடங்களிலும் அநேகர் உள்ளனர். உங்களை விசுவாசிக்கும்படிக்குச் செய்கின்ற உண்மையான ஒன்றினை உங்கள் இருதயங்களில் இன்னுமாகக் கொண்டிருப்பதற்காக நான் மிகவுமாக நன்றியுள்ளவனாக இருக்கின்றேன். பாருங்கள், நீங்கள் விசுவாசிக்கவில்லையெனில் எப்படியாகக் காரியமானது இருக்கும்? தங்களுடைய இருதயங்கள் மிகவுமாக கடினப்பட்டு விசுவாசிக்கவே முடியாத ஒரு நிலைக்குள் சென்று, முடிவிலே அழிவிற்கென தங்கள் வழியை வகுத்துக் கொண்டு, வழி தவறி, இழக்கப்பட்டு ஆனாலும் அதைக்குறித்து ஒன்றும் அறியாதவர்களாக இருந்து, எந்த மணி நேரத்தில் மரணமானது கதவைத் தட்டும் என்று அறியாதவர்களாக இருக்கும் நிலையில் உள்ள ஒரு அவிசுவாசியைக் காண்பது மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு காரியமல்லவா? நித்தியத்திற்கென நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள்? 79அதினால் தான் இயேசு, “ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால்” என்றார், அந்த மான் எப்படியாக ஒரு தாயாக இருந்ததோ அந்த அளவிற்கு கிறிஸ்தவனாக இருக்க வேண்டும், “தேவனை நீ காணமாட்டாய்; நீ எத்தனை சபைகளைச் சேர்ந்துக் கொண்டாலும் சரி, நீ இழந்து போகப்பட்டாய் எனக் குறிக்கப்பட்டுவிட்டது.” என்றார். அந்நாளின் மதத்தலைவ னாகிய, எண்பது வயது நிரம்பின நிக்கொதேமு விடமாக அவர் பேசிக்கொண்டிருந்தார். அக்காட்டில் இருந்த மான் ஒரு தாயாக எப்படி இருந்ததோ அந்த விதமான ஒரு கிறிஸ்தவனாக அவன் மாறவேண்டும் என்றும், அவன் மறுபடியும் பிறக்க வேண்டும் என்றும் அவனிடமாகக் கூறினார். 80தேவனுடைய பிரசன்னத்தை உண்மையாகவே அறிந்து, அங்கே தங்கள் கரங்களை உயர்த்தாதவர்கள் அதை அடையாளங்கண்டுக் கொண்டு, “நான் தவறாயிருக்கின்றேன் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறுவீர்களா? நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்று உண்மையாகவே உணர்வீர் களானால், நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தை உணர்கிறீர்கள். ஆனால், நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்பதை அறியாதிருப்பீர்களானால், வேதாகமம், “நீ நிர்பாக்கிய முள்ளவன்” என்று கூறுகின்றது. இந்தக்காலத்தில் சபையானது “நிர்பாக்கியமுள்ளதாகவும், பரிதபிக்கப்படத்தக்கதும், தரித்திரமாகவும், குருடாகவும், நிர்வாணியாகவுமிருக்கிறதை அறியாமல் இருக்கின்றது” என்று கூறுகின்றது. ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ தெருவில், நிர்பாக்கியமுள்ளவர்களாயும், குருடராயும், பரிதபிக்கப்படத் தக்கவர்களாகவும், நிர்வாணிகளுமாயிருக்கையில் நீங்கள் அவர்களிடமாகச் சென்று நீங்கள் நிர்வாணிகளாக இருக்கிறீர்கள் என்று கூறினால் அவர்கள் உங்களுக்குச் செவி கொடுப்பார்கள், ஆனால் அவர்கள் நிர்வாணிகளாயிருந்து, நீங்கள் சொல்வதை நம்பாமல் போனால் எப்படியிருக்கும் என்று சற்று நினைத்துப்பாருங்கள்? எந்தவிதமான ஒரு மன நிலையாக அது இருக்கும்! ஆம், இப்பொழுது அந்த விதமாகத்தான் ஆவிக்குரிய நிலையும் உள்ளது. தேவனுக்கு முன்பாக மக்கள் ஆவிக்குரிய குருடராயும், நிர்பாக்கியமுள்ளவர்களும், பரிதபிக்கப்படத் தக்கவர்களும், நிர்வாணிகளுமாயும், ஏதோ ஒரு ஸ்தாபன அத்தி இலைகளுக்கு பின்னால் தங்களை மறைத்துக் கொள்ள முயல்கின்ற பாவிகளுமாயிருந்து ஆனால் அதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். 81இன்னும் வேறு சிலர் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் தாமே .... ஒருக்கால் இங்கே நீங்கள் வெளியாளாக, தேவன் எந்த ஒரு காரியத்தையும் செய்வதை நீங்கள் காணாதவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எந்த ஒன்றையும் காணும் முன்பாக, நீங்கள் இதை இன்னுமாக, ''வார்த்தையின் பேரில் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கின்றார் என்றும்; அந்த மகத்தான தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் பிரசன்னமாயிருக்கிறார் என்றும் அறிந்திருக் கின்றேன். அதை நான் இயலுணர்வால் (sense) கண்டுக் கொள்கிறேன். அதை நான் விசுவாசிக்கின்றேன், நான் என் கரத்தை உயர்த்துகிறேன். நான் ஒரு பாவி ; நான் இரட்சிப்பைக் கேட்கின்றேன்.“ என்று கூறுங்கள். பரலோகப் பிதாவே, தங்கள் கரங்களை உயர்த்தியிருக் கின்ற இவர்களை ஆசீர்வதியும். பாவிகளாக இருக்கின்றவர் களுக்கு உம்முடைய கிருபை தாமே அருளப்பட வேண்டு மென்று நாங்கள் கேட்கின்றோம். அவர்கள் ஒரு சபையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர், இரட்சிக்கப்படவேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். கர்த்தாவே, அவர்கள் அருகிலே ஏதோ ஒன்று இருந்தது. அங்கே அவர்கள் அந்த பரிசுத்த ஆவியை அடையாளம் கண்டுக்கொண்டனர். அது தேவன் தான் என்று அவர்கள் அடையாளம் கண்டுக் கொண்டனர். அவர்கள் கொண்டிருக்கவேண்டிய அந்த அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை என்று அது தாமே அவர்களுடனே பேசிக் கொண்டிருந்தது, ஆகவே அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர். “ என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்று நீர் கூறியிருக்கின்றீர். அது உண்மை என்று நான் அறிந்திருக்கின்றேன். நீர்தாமே பரிசுத்த யோவான் 5:24ல் இவ்விதமாகக் கூறியிருக்கின்றீர், “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். என்னிடத்தில் வருகிறவனுக்கு நான் நித்திய ஜீவனை அளிப்பேன். கடைசி நாட்களில் அவனை எழுப்புவேன்” பிதாவே, அவைகளெல்லாம் உம்முடைய வாக்குத்தத்தங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நான் உரிமை கோருகிறேன். ஒருக்கால் சில கிறிஸ்தவர் தாமே, கர்த்தாவே, வாழ்க்கை யினூடாக நடக்கவும், ஒவ்வொரு நாளும் சிறந்த விதத்தில் வாழ முயற்சிப்பர், மேலும் அவர்கள் - அவர்கள் தாமே நல்லதொரு நடையின் அனுபவத்தைப் பெற விரும்புவர், அவர்களும் கூட தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர், பிதாவே, நீர் தாமே இன்றிரவில், எல்லாவற்றிற்கும் போதுமானதை எங்கள் மத்தியில் மாம்சமாக்கப்பட்டுள்ள அந்த வார்த்தையாகிய கிறிஸ்துவுக்குள் அவர்கள் கண்டுக்கொள்ளட்டும். கர்த்தாவே, அதை அருளும். அவர்களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடமாக சமர்ப்பிக்கின்றேன். ஆமென். 82தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கையில், ஒரு நிமிடம் கவனியுங்கள்; ஓ என்னே, எனக்களிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் ஐந்து நிமிடங்கள் மேலாக ஆகிவிட்டது. என்னை மன்னியுங்கள், நான் இவ்வளவு நேரம் பேச வேண்டுமென்றிருக்கவில்லை. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இன்னும் சில நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியுமானால் எனக்கு இன்னும் ஐந்து நிமிடம் கொடுங்கள். தேவன் எப்படியானவர் என்று எத்தனைப் பேர் அறிவீர்கள்? அவர் எப்படியாக இருக்கின்றார் என்று வேதாகமம் கூறியிருப்பதை நாம் அறிவோம், வேதாகமம், 'அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்“ என்று கூறுகின்றது. மேலும் இயேசு பரிசுத்த யோவான்14-ஆம் அதிகாரம், 12ஆம் வசனத்தில், ”என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்“ என்று கூறியிருக்கின்றார். பாவனையாக விசுவாசிக்கிறவன் அல்ல, ஆனால் ”என்னை விசுவாசிக்கிறவன்,“ போதகர் நண்பர்களே, அது உண்மை தானே? அது உண்மை. வேதாகமத்தை வாசிப்பவர் எத்தனைபேர் அது உண்மை என்று அறிந்திருக் கிறீர்கள்? ”வானமும் பூமியும் ஒழிந்து போம்“ ஆனால் அவருடைய வார்த்தைகள் தவறவே முடியாதது. அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். 83இப்பொழுது இதோ அங்கே உங்கள் மத்தியில் வியாதியிருக்கின்ற மக்கள் உள்ளனர் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. சற்று முன்னர் நான் கூறிக்கொண்டிருந்ததை நிரூபிக்கும் வகையில், கடந்த நாட்களில் கர்த்தருடைய தூதனானவர் கடந்து சென்ற நாட்களிலே, இயேசு“லோத்தின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” என்று கூறினார். நான் அந்த பெயர்களைக்குறித்தும் மற்றும் எல்லாக் காரியத்தைக் குறித்தும் அதினதின் ஸ்தானத்தின் படியே நான் பேசிக்கொண்டிருந்தது உங்களால் காண முடிகின்றதா? இப்பொழுது நாம் பேசாமல் விட்டக் காரியங்களை உங்களால் அர்த்தங்கொண்டு காண முடிகின்றது என்று நிச்சயிக்கின்றேன், நான் என்ன கூற விழைகின்றேன் என்று உங்களாலே காணமுடிகின்றதா. இப்பொழுது வியாதியாயும் மற்றும் தேவையுடையவர்களாகவும் இருக்கின்ற, இங்கிருக் கின்ற மக்களாகிய நீங்கள் தானே, நான்..... நான் இங்கே எதற்காக இருக்க வேண்டும்? நான் ஒரு வஞ்சகனாக இங்கே நின்றுக் கொண்டிருப்பேனானால், எனக்கு நேரமானது வந்து விட்டு ..... நான், நான் அப்படியாக செய்ய மாட்டேன், நான் அவ்விதமாகச் செய்து வாழ எனக்கு விருப்பமில்லை. நான், நான் மரித்துப்போவதையே விரும்புவேன். ஒரு வஞ்சகனாயிருப்பதைக் காட்டிலும் நான் வெளியே சென்று வேறெதாவதொன்றாக இருக்கவே செய்வேன். மேலும் தேவன் எனக்கு என்ன செய்வார்? இன்றிரவு முழுவதுமாக நான் உயிர் வாழ்வேனா என்று எனக்குத் தெரியாது, உங்களுக்கும் கூடத் தெரியாது. ஆனால் ஒரு வஞ்சகனோ, நாம் ... உங்களால் உண்மையானவர்களாக இருக்க முடியும் என்கின்ற நிலையில், ஒரு வஞ்சகனாக இருப்பதினால் என்ன பயன்? ஆனால், நீங்கள் பாருங்கள், அது உங்களுக்கு வினோதமான ஒன்றாக இருக்கின்றது. 84இப்பொழுது, கவனியுங்கள், இயேசு என்னவாக இருக்கிறார் என்றும், இப்பொழுது அவருடைய பிரசன்னம் என்ன என்றும், கடந்த இரண்டு நாட்களாக நான் வாசித்தும் உங்களுக்குக் காண்பித்தும் இருக்கின்ற இந்த வேத வாக்கியங்கள் நிறைவேறியிருக்க வேண்டும் என்று நான் உரிமை கோருவேனானால்! மேலும் அவர் இந்தக் கடைசி நாட்களிலே அவர் மானிட மாம்சத்திலே மறுபடியுமாக வந்து அந்த அதே விதமாகத் தம்மை பிரகடனப்படுத்த வேண்டியவராக இருக்கின்றார் என்பதை நாம் அறிவோம். நாமெல்லாரும் அதை அறிவோம். அதைக்குறித்து நாம் அறிந்துள்ளோம் அல்லவா? அப்படியானால் “ஆமென்” என்று கூறுங்கள் [சபையார் “ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசி.) சரி. இப்பொழுது உங்களுடைய ஆறுதலுக்காக, நான் உங்களுக்குக் கூறுகிறேன், இதை நான் அவருடைய நாமத்தில் உங்களுக்குக் கூறுகிறேன். அவர் இங்கே இருக்கின்றார், கீழிறங்கி வந்து ஆபிரகாமுடன் பேசின: சாராள் கூடாரத்துக்குள்ளே இருக்கையில், தம்முடைய முதுகுபுறத்தை கூடாரப்பக்கமாக திருப்பிக் கொண்டு, கூடாரத்துக்குள் சாராள் நினைத்துக் கொண்டிருந்தவைகளை அறிந்திருந்த அந்த அதே தேவன் இங்கே இருக்கின்றார். அவர் இங்கே வந்த போது அந்த அதே காரியத்தைக் கூறினார். அவர் ஜனக்கூட்டத்தை நோக்கிப் பார்த்து அவர்களுடைய இருதயத்தில் இருந்தவைகளை பகுத்தறிந்தார். ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள் ; அவர் திரும்பிப் பார்த்து அவளைக் கண்டுப்பிடித்தார், அவளுடைய காரியத்தை அவளிடமாகக் கூறினார். 85குருடனான பர்திமேயு, “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று கூறினபோது, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டான். அவர் கடந்துச் சென்ற இடத்திலிருந்து இருநூறு கஜம் தூரத்தில் அவன் நின்றுக் கொண்டிருந்தான். அவனுடைய விசுவாசம் தேவனுடைய குமாரனை அந்த சாலையிலே நிறுத்தினது, அப்பொழுது அவர் திரும்பிப்பார்த்து, “அவனை இங்கே அழைத்து வாருங்கள்” என்றார். சிறிய சகேயு அங்கே மரத்தின் மேலே தன்னை மறைத்துக் கொண்டான், அவர் தீர்க்கதரிசி என்று நான் விசுவாசிக்கிற தில்லை என்று கூறினான். ஆனால் இயேசு சரியாக அங்கே வந்து அந்த மரத்தின் கீழே நின்று மேலே நோக்கிப் பார்த்து, ''சகேயுவே கீழே இறங்கி வா“ என்றார், அவன் பெயரைச் சொல்லி அழைத்தார். பேதுரு இயேசுவை அதற்கு முன்னர் பார்த்தது கூட கிடையாது. அந்திரேயா அவனை அங்கே அழைத்துக் கொண்டு வந்தான். அவன் வருவதை இயேசு கண்டபோது, 'உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்“ என்று கூறினார். அவனுக்கு பெயரையும் அளித்து, அவன் யார் என்பதையும் அவனுக்குக் கூறினார். அவன் எங்கே இருந்தான் என்றும், அவன் என்ன செய்திருந்தான் என்றும் நாத்தான்வேலிடமாகக் கூறினார். அந்த ஸ்திரீ, அவள் எந்தவிதமான ஒரு நிலையில் இருந்தாள் என்றும் அவளுடைய பிரச்சனை என்ன என்றும், அவளுடைய வியாதி என்னவென்றும் கூறினார். நண்பர்களே, அது தேவனாகும்! எத்தனைப் பேர் அதை உங்கள் முழு இருதயத்துடனே விசுவாசித்து, “அது தேவனாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறுகிறீர்கள்? 86உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்று இங்கிருக்கின்ற உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள், உங்கள் கரத்தை உயர்த்துங்கள், “அந்த மனிதனுக்கு என்னைக் குறித்து ஒரு காரியம் கூடத் தெரியாது, அவர் ஒரு மனிதன் மாத்திரமே - மாத்திரமே” என்று கூறுவீர்களா? அப்படியாகவே நான் இருக்கின்றேன், நான் உங்கள் சகோதரன் மாத்திரமே. நான் இங்கே இருந்து உங்களுக்கு உதவி செய்யவே முயன்றுக் கொண்டிருக்கின்றேன். ஆனால், நான் அறிவிக்கின்றேன்! எத்தனை பேர் என்னுடைய புத்தகங்களையும் மற்றும் காரியங்களையும் வாசித்திருக்கிறீர்கள்? அதை நீங்கள் அறிவீர்கள், அது சத்தியம் என்று உங்களுக்குத் தெரியுமா? இது இந்த கடைசி நாட்களாகும். ஆகவே கர்த்தராகிய இயேசு இப்பொழுது நமக்கு உதவி செய்வாராக. 87ஆகவே இன்றிரவு அவர் வருவாரானால் ....... நீங்கள் ஒருவரும் இங்குமங்குமாக அசையவே கூடாது. நீங்கள் இருக்கும் இடத்திலேயே அப்படியே உங்கள் இருக்கைகளில் அமர்ந்திருங்கள், விசுவாசியுங்கள், அப்பொழுது கர்த்தராகிய இயேசு இன்றிரவு வந்து அவர் கூறியுள்ள காரியங்களையும் மற்றும் அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள இந்தக்காரியங்களை உறுதிப்படுத்துவார். அவைகள் சத்தியம் தான் என்று அவர் உறுதிப்படுத்துவாரென்றால் நீங்கள் அவர் மேல் விசுவாசம் வைப்பீர்களா? [சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) விசுவாசியுங்கள்! பரலோகப் பிதாவே, நீர் என்னவாயிருந்தீர் என்றும், நீர் என்னவாக இருக்கின்றீர் என்றும் இப்பொழுது நான் உம்மைக் குறித்துப் பேசினேன், ஆகவே நீர் தாமே இப்பொழுது காட்சியிலே வருவீராக. மேலும் அங்கே ஜனக்கூட்டத்தில் உட்கார்ந்திருக்கின்ற அந்த மக்கள் எனக்கு முற்றிலுமாக அந்நியர் ஆவர், ஆகவே கர்த்தாவே, இன்றிரவில் நீர் தாமே உம்மை எங்களுக்குத் தெரியப்படுத்தும், அதினாலே நாங்கள் தாமே இந்த வேதவாக்கியங்கள் நிறைவேறின என்றும் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” எனவும் நாங்கள் அறிந்து மற்றும் அடையாளம் கண்டுக் கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் நாம் இந்தக் கடைசி நாட்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றால், ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட குமாரன் வருவதற்கு முன்னர் சோதோமில் அவர் செய்தது போலவே கடைசி நாட்களில் அவர் தம்மைத் தாமே வெளிப்படுத்துவார் என்று அவர் கூறியிருக்கின்றார். ஆம், ராஜரீக குமாரனுக்காக எதிர்ப்பார்த்து நோக்கிக் கொண்டிருக்கின்ற ஆபிரகாமின் ராஜரீக வித்திற்கும் அந்த அதே காரியமானது சம்பவிக்கும். ஆகவே இடச்சூழல்களையும், காலத்தையும், பெயர்களையும் கூட கவனிக்கின்றோம், எல்லாக்காரியமும் பரிபூரணமாக சீரான வகையில் அமைந்துள்ளன, பிதாவே, எங்களுக்கு உதவி செய்யுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கின்றோம். ஆமென். 88இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என்ன கோளாறாக இருந்தாலும் சரி, அவரை மாத்திரமே கேளுங்கள். இப்பொழுது அவர் தாம் அந்த பிரதான ஆசாரியராக இருக்கின்றார். சரி, கட்டிடத்தில் எத்தனை ஊழியக்காரர்கள் இருக்கின்றீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள், எல்லா விடங்களிலும் உள்ளனர். முப்பது அல்லது நாற்பது பேர் என்று நான் யூகிக்கின்றேன். இப்பொழுது உங்களில் அதிகம் பேருக்கு இது தெரியும், அது எபிரேயர் புஸ்தகத்தில், புதிய ஏற்பாடு கூறுவது என்னவென்றால், சரியாக இப்பொழுது, “நம்முடைய பலவீனங்களுக்காக பரிதபிக்கக்கூடிய மகா பிரதான ஆசாரியராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருக்கின்றார்” என்று கூறுவது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, “அது சத்தியம் என்று எனக்குத் தெரியும். வேதாகமம் அதைக் கூறுகின்றது” என்றுக் கூறுவீர்களா? அது சரியே. அது சரி. அப்படியானால் அவர் அந்த பிரதான ஆசாரியராக இருக்கிறாரென்றால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத வராயிருக்கிறார். ஆகவே இன்றிரவு நீங்கள் அவரைத் தொடுவீர்களானால், அன்றைக்கு அவர் அங்கே செய்த விதமாகவே இப்பொழுதும் அவர் செய்வார். அது சரியல்லவா? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.] அவர் நேற்று செய்தது போலவே! 89சரி, அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட போது, ''ஓ, என்னால் அவ்விதமாகச் செய்யக்கூடுமானால்!'' என்று நீங்கள் கூறலாம். உங்கள் விசுவாசம் அதைத் தொடுகின்றது. சரீரப்பிரகாரமான தொடுதலை அவர் உணரவில்லை. அந்த வஸ்திரத்தைத் தொட்ட ஸ்திரீயின் விசுவாசம் தான் அதைச் செய்தது. இப்பொழுதும் கூட உங்கள் விசுவாசமானது அவரைத்தொடும். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? அப்படியானால் தேவனுடைய வார்த்தையானது வெளிப்படுத்தப்படும் போது, அந்த அதே காரியத்தை அவர் வெளிப்படுத்தி அந்த அதே காரியத்தை அவர் காண்பிப்பார். உங்கள் முழு இருதயத்தோடும் அதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) சரி. இப்பொழுது அவரை நம்ப மாத்திரம் செய்யுங்கள், அவரை விசுவாசியுங்கள். சந்தேகப்படாதீர்கள். அவர் அதைச் செய்வார் என்று தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். இந்த பக்கமாக இருக்கின்ற ஒருவர், ஜெபியுங்கள், உங்களுடய முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், அதோ இந்த திசையில் இருக்கும் ஒரு நபர். ஆகவே நீங்கள் அறிந்துள்ள ஒன்று அல்லது இரண்டு பேரிடமாக அது தவறிழைக்காத ஒன்று என தேவன் தெரியப்படுத்து வாரென்றால், நாங்கள் அவருடைய பிரசன்னத்தை அடையாளம் கண்டுக்கொள்கிறோம் என்று உங்களில் எத்தனைப்பேர் விசுவாசிப்பீர்கள்? (“ஆமென்.”] ஆகவே அது மாத்திரமே தேவையான ஒன்றாயிருக்கின்றது. அது மாத்திரமே தேவையானதாயிருக்கின்றது. 90சரியாக அங்கே உட்கார்ந்திருக்கின்ற பெண், அதோ என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் பெண், அவளுக்கு இருதயக்கோளாறு உள்ளது. அந்த இருதயத்தை தேவன் சுகமளித்து உங்களை நலமாக ஆக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு இருதயக்கோளாறு உள்ளது. அது சரியென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நான் உங்களுக்கு அந்நியன் என்பதை நீங்கள் அறிவீர்களா? அது உண்மையே, சரி, நீங்கள் - அங்கே உட்கார்ந்துள்ள நரைத்த மயிரைக் கொண்ட பெண். அது சரியே. பச்சை நிற ஆடையைக் கொண்ட அந்த பெண், அங்கே உங்கள் கரத்தை உயர்த்தியுள்ள நீங்கள் தான், அது நீங்கள் - நீங்கள்... உங்கள் பிரச்சனை மூட்டுவாதம் ஆகும். அந்த மூட்டு வாதத்திலிருந்து தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது சரி என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். பாருங்கள்? அது சரி. பாருங்கள்? அது தானே இப்போது ... இப்பொழுது ஏதோ ஒன்று உங்கள் மீது வந்துள்ளது. அப்படித்தானே? பாருங்கள், அந்த ஒளி அந்த ஒளியின் புகைப்படத்தை எத்தனைப்பேர் பார்த்திருக்கிறீர்கள்? அதோ அது அங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றது, சரியாக அந்த பெண்ணின் மீது இருக்கின்றது. சடுதியாக ஒரு மிக இனிமையான உணர்வு உங்கள் மீது வந்தது. அது தான் அதைச் செய்தது. பாருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதித்துள்ளார். உங்களை சுகமாக்கியுள்ளார், உங்களை நலமாக்கியுள்ளார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களிடம் உள்ள பிரச்சனை என்னவென்று அவருக்குத் தெரியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அது ஒரு கறுத்த நிழலாயிருக்கின்றது. காக்கை வலிப்பு நோயாகும். வாலிபப் பெண்ணே , அது சரியென்றால் உன் கரத்தை உயர்த்து. சில நிமிடங்களுக்கு முன்னர் நீ நினைத்ததற்கு மாறாக இப்பொழுது உள்ளது, அப்படித்தானே? நான் அழைப்பதை சற்று நிறுத்தி அதைச் செய்ததை உன்னால் காணமுடிகின்றதா? அது உனக்காகத் தான். அது உனக்காகத்தான். இப்பொழுது உன்னுடைய முழு இருதயத்தோடு அதை விசுவாசிப்பாயானால் உன் மீது வந்து அவ்வப்போது தாக்கும் அந்த காக்கை வலிப்பு உன்னை விட்டு நீங்கிப்போகும். அதை நீ ஏற்றுக்கொண்டு உன் முழு இருதயத் தோடு அதை விசுவாசிப்பாயா? தேவன் உன்னை ஆசீர்வதிப் பாராக. அதை விசுவாசித்துக் கொண்டே செல். 91இங்கே உட்கார்ந்திருக்கின்ற இந்தப் பெண் வயிற்றுப் பிரச்சனையினால் அவதிப்படுகின்றாள், தேவன் உங்களை சுகமாக்குவாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரியாக இந்த பக்கத்தில் கடைசியில், உங்களைத் தேவன் சுகப்படுத்து வாரென்று விசுவாசிக்கிறீர்களா, உங்கள் வயிற்றுக் கோளாறிலிருந்து சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கின்றீர்கள், அப்படியானால் அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்களா? சரி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அந்தப் பெண்ணிற்கு நான் முற்றிலுமாக அந்நியனாவேன், அவளை எனக்குத் தெரியாது. அவள் அங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கின்ற ஒரு பெண் மாத்திரமே. ஆனால் அதைச் செய்வது தேவனாகும். உங்கள் முழு இருதயத்தோடும் இப்பொழுது நீங்கள் விசுவாசிப்பீர்களா? [சபையார் ஆமென எனகின்றனர் - ஆசி.) சா, விசுவாசத்தை மாத்திரம் கொண்டிருங்கள். 92இந்த புறத்தின் கடைசியில் உட்கார்ந்திருக்கும் அந்த பெண் பித்தப்பை கோளாறினால் அவதியுறுகின்றாள். பித்தக் கற்களும் இருக்கின்றது, கல்லீரலும் உங்களைத் தொல்லைப் படுத்துகின்றது. அது சரியென்றால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள்; சரியாகக் கூறப்போனால் நான் உங்களுக்கு முற்றிலும் அந்நியன் ஆவேன். பாருங்கள்? உங்களுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கும் அந்த பெண், அவளும் கூட அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றாள். அதைப் பாருங்கள், அந்தப்பெண்ணின் மேல் இருக்கும் அந்த ஒளியை உங்களால் காணமுடிகின்றதா? அந்தப் பெண்ணிற்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது. அது சரியே. அவளுடைய சிறுநீரகத்தில் இரத்த யூரியா அதிகமாக இருப்பதால் சிறுநீரகம் விஷத்தன்மையால் நிறைந்துள்ளது. அது சரியே, உங்கள் கரத்தை உயர்த்துங்கள். உங்களைத் தொட்ட அந்த பெண், அவளை நரம்பு பாதிப்பு அல்லற்படுத்துகின்றது. அது சரியே, அப்படித்தானே? நீங்கள் ஐயோவா மாநிலத்திலிருந்து வந்துள்ளீர்கள். நீங்கள் டெஸ்மொய்ன்ஸ் நகரத்திலிருந்து வந்துள்ளீர்கள். அது சரியே, அப்படித்தானே? அவர் பேதுருவிற்கு செய்தது போல, உங்கள் பெயர் என்னவென்று தேவன் என்னிடம் கூறுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களானால்! உங்கள் பெயர் திருமதி வோல்ஃப் ஆகும். அது சரி தான் என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள், அது சரி, இப்பொழுதே சுகமாக்கப்பட்டு திரும்பிச் செல்லுங்கள், இயேசுகிறிஸ்து உங்களை சுகமாக்குகின்றார். அவருடைய பிரசன்னத்தை நீங்கள் அடையாளம் கண்டுக் கொள்கிறீர்களா, அவர் இங்கே இருக்கின்றார் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் பரிசுத்த ஆவி உங்கள் மீது இருக்கையில் நீங்கள் இப்பொழுது ஒருவர் மேல் ஒருவர் உங்கள் கரங்களை வைக்கலாமல்லவா. அது உங்கள் மீது இருக்கும் பரிசுத்த ஆவியே. நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்தால் உங்களில் ஒவ்வொருவரும் இப்பொழுதே சுகமாக்கப்பட முடியும். உங்கள் முழு இருதயத்தோடும் அதை நீங்கள் விசுவாசிப்பீர்களா? [சபையார் “ஆமென்” என்கின்றனர்- ஆசி.) 93பரலோகப் பிதாவே, விசுவாசத்தைத் தவிர வேறு எதுவும் இப்பொழுது இல்லை. எல்லா அந்தகாரத்தையும் நாங்கள் இப்பொழுது வெறுத்து அப்புறப்படுத்துகிறோம். ஆரம்பத்தில் நான் கூறினபடி எழுப்புதலானது, தண்ணீரின் மேல் வந்து மேலும் கீழுமாகக் கடைந்து அசைத்து அதிலிருந்து அவிசுவாசத்தை வெளியே எடுத்துப் போடும்படிக்குச் செய்கின்றது; இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இங்கே மக்களின் மத்தியிலே அசைவாடிக்கொண்டிருக்கையில் எல்லா அவிசுவாசமும் எடுக்கப்படுவதாக, சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமை தாமே அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரையும் இன்றிரவு விடுவிப்பதாக. பிசாசை நான் கடிந்துக் கொள்கிறேன். சாத்தானே நீ வெறும் பூச்சாண்டி காட்டுபவன் தவிர வேறொன்றுமல்ல, உயிர்த்தெழுந்த ஜீவிக்கின்ற இயேசுவின் வேதப்பூர்வமான அத்தாட்சியினால் சரியாக இங்கே மக்களின் மத்தியில் உன் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது. ஜீவிக்கின்ற தேவனைக் கொண்டு நான் உனக்கு ஆணையிடுகிறேன், இந்த மக்களிடமிருந்து வெளியே வா, தேவனுடைய மகிமைக் கென்று அவர்களை விட்டு புறப்பட்டு போ. உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்கின்ற எல்லாரும் இப்பொழுது எழுந்து நின்று “நான் விசுவாசிக்கின்றேன். என்ன நடந்தாலும் சரி, எவ்வளவு காலம் ஆனாலும் சரி, நான் சுகமாக்கப்படப்போகிறேன் என்று இன்னுமாக நான் அறிவித்திருக்கின்றேன். என் முழு இருதயத்துடன் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுங்கள். இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்துங்கள். “கர்த்தாவே உமக்கு நன்றி.” கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அது சரி, அவருக்கு துதியை ஏறெடுங்கள். உங்கள் சபைகளில் நீங்கள் செய்வது போலவே, இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்தி உங்களுடைய சுகத்திற்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். சகோதரன்.